சென்னையில் சாலையோரங்களிலும், நடை பாதைகளிலும் உள்ள பெட்டிக் கடைகளை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
சென்னையில் பெட்டிக்கடைகளால் போக்கு வரத்து இடையூறு என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில், அத்தகைய பெட்டிக்கடைகளை அகற்றி, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் திங்களில் ஆணையிட்ட தன் அடிப்படையில், சென்னை மாநகராட்சி பெட்டிக்கடைகளை அகற்றும் பணியில் இறங்க உள்ளதாம்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தேனாம்பேட்டை மண்டலத்தில் 62, அண்ணாநகர் மண்டலத்தில் 36, கோடம்பாக்கத்தில் 17, வளசரவாக்கத்தில் 8, திரு.வி.க. நகரில் 22, தண்டையார்ப்பேட்டையில் 18, ஆலந்தூரில் 6 கடைகளும் அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளனவாம்.
உண்மையைச் சொல்லப்போனால், சென் னையில் பெட்டிக்கடைகளைவிட, போக்குவரத் துக்குப் பெரும் இடையூறாக இருப்பது நடைபாதைக் கோவில்கள்தான்.
போக்குவரத்தைக் காரணம் காட்டி இடிக்கப் படவேண்டுமானால், முதலில் அகற்றப்படவேண் டியது நடைபாதைக் கோவில்களும், அனுமதி யின்றிக் கட்டப்பட்டுள்ள கோவில்களும்தான்.
உயர்நீதிமன்றத்தின் ஆணையின் காரண மாகத்தான் பெட்டிக் கடைகளை அகற்றும் நிலை ஏற்பட்டது என்று சமாதானம் சொல்லப்படுமானால், உயர்நீதிமன்றத்தைவிட பெரும் அதிகாரம் படைத்தது உச்சநீதிமன்றம்தானே!
அந்த உச்சநீதிமன்றம் 2010 செப்டம்பரில் பிறப்பித்த ஆணையின்மீது தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
பொது இடங்களில் அனுமதியின்றிக் கட்டப் பட்டு இருக்கும் வழிபாட்டு இடங்களை அகற்றாமல் இருக்கும் மாநிலங்களின் தலைமைச் செயலா ளர்கள் உச்சநீதிமன்றத்திற்கு நேரில் வந்து பதில் கூறவேண்டும் என்று 2010 செப்டம்பர் 14 அன்று உச்சநீதிமன்ற அமர்வு ஆணை பிறப்பித்ததே!
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அனுமதி யற்ற வழிபாட்டு இடங்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும். 77,450 கோவில்கள் தமிழ்நாட்டில் அனுமதியின்றிக் கட்டப்பட்ட கோவில்களாகும்.
இன்னும் சொல்லப்போனால், 2009 ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் இந்த ஆணை யைப் பிறப்பித்தது. கடைசியாகப் பிறப்பித்த ஆணைதான் 2010 செப்டம்பர் 14 அன்று பிறப்பிக்கப்பட்டதாகும்.
இதன்மீது தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை என்ன? உயர்நீதிமன்றத்தின் ஆணையைச் செயல்படுத்திட முனைந்துள்ள தமிழ்நாடு அரசு - உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையைக் கிடப்பில் போட்டுள்ளதே - இது சரியானதுதானா?
உயர்நீதிமன்றத்தைவிட உச்சநீதிமன்றம் அதிகாரம் அற்றது என்று ஒருக்கால் தமிழ்நாடு அரசு கருதுகிறதோ!
சிறுசிறு பெட்டிக் கடைகளை வைத்து அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்காக அல்லாடு கிறார்கள். அவர்கள்மீது காட்டும் வேகத்தை - நடைபாதையில் அத்து மீறிக் கோவில்களை எழுப்பி, உண்டியல் மூலம் வசூல் வேட்டை நடத்தி, ஒவ்வொரு நாள் இரவிலும் உண்டியலை உடைத்து, அந்தப் பணத்தின்மூலம் போதை ஸ்நானம் - தீர்த்தம் - செய்யும் பேர்வழிகளிடம் காட்ட வேண்டியதுதானே!
கல்லு சாமிகளிடம் காட்டும் கருணை, மனிதர்களிடத்தில் காட்டப்படுவதில்லையே, ஏன்?
முதலில் இந்த நடைபாதைக் கோவில்களில் கை வைக்கட்டும் - அடுத்ததை அடுத்துப் பார்க்கலாம்!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment