அய்யய்யோ, கோவில் கலசங்களில் இருப்பது இரிடி யம் அல்ல, அல்ல! என்று இந்து அறநிலையத் துறை அலறுகிறதே, ஏன்? அவசர அவசரமாக அந்தத் துறை அறிவிப்புகளை அளிக்கிறதே - ஏன்?
வேறு ஒன்றும் இல்லை. இரிடியம் என்பது மிகவும் விலை உயர்ந்த பொருள். அதைத் திருடிக் கொண்டு போய் விற்றால் கொள்ளைப் பணம் கிடைக்கும் என்று சிலர் வாயூறி நிற்கின்றனர்.
இதற்கு இப்பொழுது ஏற் பட்டுள்ள அவசியம் என்ன தெரியுமா? விருத்தாசலத் தையடுத்த மங்கலம்பேட்டை - எடைச்சித்தூரில் கேசவப் பெருமாள் கோவில் இருக் கிறது. அந்தக் கோவில் கல சத்தில் இரிடியம் இருக்கிறது என்று நினைத்து அதனைத் திருடுவதற்கு முயற்சி செய் ததாக சென்னையைச் சேர்ந்த கணவனும், மனைவி யும் கைது செய்யப்பட்டுள்ள னர்.
இதுபோன்ற முயற்சிகள் பல இடங்களிலும் மேற் கொள்ளப்படுகின்றன என் பதை அறிந்த நிலையில்தான், இந்து அறநிலையத் துறை, அதெல்லாம் இரிடியமும் கிடையாது - ஒரு மண்ணாங் கட்டியும் கிடையாது - கோவில் கலசத்தில் இருப்ப தெல்லாம் என்ன தெரியுமா? கம்பு, கேழ்வரகு, அரிசி, எள், கொள் போன்ற நவதானி யங்கள்தான் கலசத்தில் வைக்கப்படுகின்றன; மேலும், அந்தக் கலசம் என்பது வெறும் செம்பாலானது! என்று இந்து அறநிலையத் துறை அறிக்கை கொடுத் துள்ளது.
இதனை நினைத்தால் வயிறு குலுங்க சிரிப்புதான் வருகிறது. ஒரு கோவிலின் கலசத்தைக் காப்பாற்றிட, அந்தக் கோவிலில் குடி கொண்ட கடவுளுக்குத் துப்பு இல்லை - சக்தியில்லை என்பதை இதன்மூலம் இந்து அறநிலையத் துறை அதி காரபூர்வமாக அறிவிப்ப தாகத்தானே அர்த்தம்!
இன்னொன்று, அப்படித் திருட நினைப்பவர்களும் கடவுள் மறுப்பாளர்கள் - கடவுள் நம்பிக்கையற்றவர் களும் அல்லவே!
அப்படி இருந்தும் அவர் கள் திருடுகின்றனர் என் றால், அவர்களுக்கு ஒன்று நன்றாகவே தெரிந்திருக் கிறது - கடவுளாவது கத் தரிக்காயாவது - வெறும் பொம்மை என்பதை நூற் றுக்கு நூறு தெரிந்து வைத் துள்ளனரே!
குமுதம்: பெரிய மற்றும் சிறு கோவில்களில் அடிக்கடி கொள்ளை, கொலை போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுகின்றன. இதற்கு என்ன காரணம்? மக் களுக்குக் கடவுளின்மீது உள்ள பக்தி போய்விட்டதா?
காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி: கொலை, கொள்ளை செய்யத் துணிகிறவர்களில் அனேகம் பேர் பக்தர்களா கவே இருந்து ஆண்டவனி டத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள் வதற்கு வழி தேடுகிறார்கள். நாத்திகத்திற்கும், இப்படி எடுத்துப் போவதற்கும் சம் பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பொது வாக பேராசை ஜாஸ்தியாகி விட்டது... பணமுடை அதி கரித்துள்ளது. (குமுதம், 12.9.1996)
நாம் சொல்லுவதைத் தானே சங்கராச்சாரியாரும் வேறு வார்த்தைகளில் சொல்லுகிறார், புரிகிறதோ!
- மயிலாடன்
2 comments:
உண்மையில் இரிடியம் என்று ஒன்று இருக்கிறதா?
கேட்கிறேன் என்று கோபித்துக்கொள்ள வேண்டாம், உங்கள் கடவுளியல் நம்பிக்கையின்மையை வெளியே காட்டிக்கொள்வதாக நினைத்து, கடவுள் என்ற ஒன்றை கேவலப்படுத்துவதாக நினைத்து அறியாமையினால் இறைவனை தூசிக்கின்றீர்களே இது முறையா? தெரிந்துதான் கேட்கிறேன் கடவுள் ஏன் ஒரு பொருளை திருடும்போது அதனை தடுக்க வேண்டும்? நீங்கள் புகழ்வதால் அவர் உயர்வதும் இல்லை இகழ்வதால் அவர் தாழ்வதும் இல்லை. உங்கள் அறிவிற்கு கடவுளை உணர முடியவில்லை என்பதற்காக இறைவன் இல்லை என்பது உங்கள் பகுத்தறிவின்மையை உணர்த்துகின்றது. என்னிடம் பதில் எதிர்பார்த்தால் வினா எழுப்பவும்.
எவன் கடவுளை உணர்கிறானோ அவன் நிச்சயமாக பாவகாரியங்களில் ஈடுபடான். நீ கடவுளை வணங்கத் தேவையில்லை நீதி என்று ஒன்று உள்ளதை உணர்ந்து அதனை பின்பற்றி மற்றவர்க்கும் கற்றுக்கொடு, நீ அவனை விரும்பாவிட்டாலும் அவன் உன்னை மறவான். இதுவே அப்பரம்பொருளின் நியதியும் சக்தியுமாகும்.
-நன்றி-
மனிதன்
Post a Comment