இன்று ஒரு பொன்னாள் - தமிழர் வரலாற்றில் திருப்பம் தந்த திருநாள்! ஆம், இன்றுதான் சேலம் மாநகரில் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டப்பட்ட சூரிய வெப்ப நாள் (1944).
தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்டு, அறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் தீர்மானம் முன்மொழியப்பட்ட நாள்.
ஆரிய தர்மம் என்பது திராவி டனுக்குச் சிறிதும் பொருந்தாது என்பதை எந்தத் திராவிடனும் மறுக்க முடியாது - என்றார் தந்தை பெரியார்.
(நெல்லை திராவிடர் கழக மாநாட்டில் தந்தை பெரியார், குடிஅரசு, 9.2.1946)
இதற்குள் திராவிடர் கழகத்தின், திராவிட இனத்தின் அனைத்துத் தத்துவமும் அடங்கிவிடவில்லையா?
பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப் பிலிருந்து அனைத்துத் துறைகளிலும், நிலைகளிலும் மீட்கும் இயக்கம் எது?
திராவிட நாட்டில் புகுந்த ஆரியன் (பார்ப்பான்) சுவாமியாய் ஆகிவிட்டான். பணம் திரட்ட வந்த மார்வாடி சவுகார், சேட்டு ஆகி விட்டான். இவர்கள் இருவருக்கும் உதவி செய்வதாக ஒப்பந்தம் பேசிக் கொண்டு ஆட்சி நடத்தவந்த பிரிட்டீஷ்காரன் துரையாகிவிட் டான். இந்நாட்டுப் பழங்குடி மக் களான குடிமகனான திராவிடனாகிய நாம் சூத்திரன் நாலாம், அய்ந்தாம் வருணத்தவன், அடிமை என்று இழிமகனாக ஆக்கப்பட்டு விட்டோம். இனி சிறிதும் சகித்து இருக்கக் கூடிய காரியம் அல்ல. தேசியம், சுயராஜ்யம், சட்ட சபை, மகாத்மா காந்தியார் உபதேசம் என்பவை களெல்லாம் நம் முயற்சியைக் கெடுக்க வந்த (தபசைக் கலைக்க வந்த மோகினிகளாகும்) தந்திரங் களாகும்.
உண்மையில் இப்பொழுது நமக்கு முதலாவதாக வேண்டியது நமக்குள் நாம் ஒன்றுபடுவதே யாகும். அது இல்லாமல் ஒரு அளவும் நம்மால் விடுதலையோ, முற்போக்கோ பெற முடியாது. இதற்காக எந்த உருவத்திலாவது எந்தத் தலைமையிலாவது ஆரியம் இருந்தால் முடியுமா என்று சிந்தித்துப் பாருங்கள். (அதே உரை, குடிஅரசு, 9.2.1946).
இதற்கு விளக்கமும் தேவையோ! புத்தர் இயக்கத்தைச் சிதைத்து ஆரியம் தலைமை தாங்கியதிலிருந்து, திராவிட இயக்கத்தைச் சிதைக்க ஊடுருவல் கொண்ட இந்தக் காலம்வரை நமது இனத்தின் பண்பாட்டுக்கு, (தைமுதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு என்பதை மாற்றியதை எடுத்துக்கொள்ளலாமே!) முற்போக்குக்கு (கோவில் புனருத் தாரணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை எடுத்துக்கொள்ளலாமே!) கல்வி வளர்ச்சிக்கு (சமச்சீர்க் கல்வி எதிர்ப்பை எடுத்துக்கொள்ளலாமே!) ஏற்பட்டுவரும் கேடுகளைக் கணக்கில் கொண்டால் நம் பகுத்தறிவுப் பகலவன் கணிப்பைக் கச்சிதமாய்ப் புரிந்துகொள்ள முடியுமே!
நமக்கு முதலாவதாக வேண்டியது நாம் ஒன்றுபடுவதே என்றார், திராவிடத்தை முன்னிறுத்திய தந்தை பெரியார்.
இப்பொழுதோ ஒரு கும்பல் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று ஆரியத்துக்குக் கால் கழுவிவிடும் தொண்டை தலைமேல் தூக்கிப் போட்டுக்கொண்டு திரிகிறது.
திராவிடம் என்பது ஆரியத்தை வென்று நம்மை நாம் மீட்டுக் கொள்வது - இனப் போராட்டம் இன்று, நேற்று அல்ல - இராமாயண காலத்திலிருந்தே! அதனை அதே பெயரைக் கொண்ட (இராம+சாமி) தலைவரின் சகாப்தத்தில் வெற்றி காணவேண்டாமா? திராவிடர் கழகம் பிறந்த இந்நாளில் சிந்திப் போமாக! செயல்படுவோமாக!!
விடுதலை சந்தாதாருக்குப் பெரியார் பிஞ்சு!
திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக முன்னாள் தலைவர் மறைந்த மருதூர் சிதம்பரம் (ஆசிரியர்) அவர்களின் மகன் சி. அரசு - விடுதலை சந்தாதாரராக சேரும் முதல் 500 பேர்களுக்கு (25.8.2012 முதல்) பெரியார் பிஞ்சு 2 சந்தாக்களை கூடுதலாக அனுப்புவதற்கான தொகை ரூபாய் ஒரு லட்சத்தைக் கழகத் தலைவரிடம் வழங்கினார் (சென்னை, 25.8.2012) பாராட்டுகள்!
No comments:
Post a Comment