நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவக் கல்லூரியில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சியா? தமிழர் தலைவர் கண்டனம்
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவப் பயிற்சி கல்லூரியில் இலங்கை இராணுவ அதிகாரி களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் இம்மாதம் 19 ஆம் தேதிமுதல் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும்.
தாம்பரம் விமானப் படையில் பயிற்சி
சென்னை - தாம்பரம் விமானப் படை நிலையத்தில் இலங்கை இராணுவத்துக்குப் பயிற்சி அளிப்பதை எதிர்த்து தமிழ்நாட்டில் வலுவான குரல் கிளம்பியதையடுத்து தாம்பரத்திலிருந்து பெங்களூருவுக்குப் பயிற்சி அளிப்பதை மாற்றினர். அதுவே ஒரு தவறான முடிவாகும். ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த - கொன்று குவிக்க இருக்கிற ஒரு இராணுவத்துக்குப் பயிற்சியைத் தாம்பரத்தில் அளித்தால் என்ன? பெங்களூருவில் அளித்தால் என்ன? இது ஓர் ஏமாற்று வேலைதான்.
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாளா?
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதுபோல மீண்டும் இலங்கை இராணுவ அதிகாரி களுக்கு நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றால் இதன் பொருள் என்ன?
தமிழ்நாடு அரசின் சார்பிலும், முக்கிய எதிர்க்கட்சிகள் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தும், மத்திய அரசு இப்படி நடந்துகொள்வது தமிழர்களின் உணர்வைக் கொச்சைப்படுத்துவதாகும்.
டெசோ மாநாட்டுத் தீர்மானம்
12.8.2012 அன்று சென்னையில் டெசோ சார்பில் நடைபெற்ற மாநாட்டிலும் இத்தகைய பயிற்சியை அளிக்கக் கூடாது என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஈழத் தமிழராக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டுத் தமிழர்களாக இருந்தாலும் சரி - அவர்களை அலட்சியப்படுத்தும் தன்மையில் நடந்துகொள்வதாகவே கருதுகிறோம்.
மத்திய அரசின் நோக்கம் என்ன?
அந்த நோக்கம் தங்களுக்கு இல்லை என்பதை சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட முறையில் வெளிப்படை யாகக் காட்டிக்கொள்ள மத்திய அரசு கடமைப் பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற் படையால் தாக்கப்படும் பிரச்சினையிலும் மத்திய அரசு பொறுப்பாக நடந்துகொள்ளவில்லை என்பதும் வெளிப் படை.
உலகத் தமிழர்கள் மத்தியில் உருவாகிவரும் சிந்தனை;
சுண்டைக்காய் நாடான இலங்கையிடம் இந்திய அரசு ஏன் இப்படி நடந்துகொள்ளவேண்டும்? எந்தக் காரணத் துக்காக அப்படி நடந்துகொண்டாலும் சரி, ஈழத் தமிழர் களுக்கும் (இந்தியாவின் தெற்கேயுள்ள மிகப்பெரிய வரலாற்றுக்குச் சொந்தமான தமிழின மக்களின் தொப்புள்கொடி - ரத்த உறவுக்காரர்கள்) தமிழ்நாட்டுத் தமிழர்களான மீனவர்களுக்கும் இலங்கைப் பயங்கரவாத அரசால் மேற்கொள்ளப்படும் வன்முறை நடவடிக்கை களுக்கு எந்த வகையில் (இராணுவப் பயிற்சி உள்பட) துணைபோகும் வகையில் இந்திய அரசு நடந்துகொண்டு வருவது - உலகத் தமிழர்கள் மத்தியிலே புதிய சிந்தனை களைத் தோற்றுவிக்க வழிவகுக்கக் கூடியதாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
31 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்திலும்
சேர்த்துக் கொள்க!
சேர்த்துக் கொள்க!
எனவே, கழகத் தோழர்களே, வரும் 31 ஆம் தேதியன்று காவிரி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு எனும் நான்கு பொருள்களை மய்யப்படுத்தி மாவட்ட தலைநகரங்களில் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களுடன் இந்தியாவில் இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிப்பதைக் கண்டிப்பதையும் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
திருவாரூர்
27.8.2012
திருவாரூர்
27.8.2012
கி.வீரமணி தலைவர்,
திராவிடர் கழகம்
திராவிடர் கழகம்
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- அசாமில் தொடரும் வன்முறை : மர்ம மனிதர்கள் துப்பாக்கி சூடு- ஒருவர் சாவு
- தூத்துக்குடி அனல்மின் நிலைய 3-வது யூனிட் கோளாறு: மின்உற்பத்தி பாதிப்பு
- எனது அமைதி ஆயிரம் பதில்களை காட்டிலும் சிறந்தது:பிரதமர் மன்மோகன் சிங்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- நாடாளுமன்றத்தில் பிரதமரை பேசவிடாமல் எதிர்கட்சிகள் கூச்சல் - அமளி
- தமிழர்கள் பகுதியில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு சீனா வீடு கட்டிக் கொடுக்கிறது
- மெக்சிகோ: 100 சிறை கைதிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பாக்.பிரதமர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்
- எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும், அவற்றை கண்டு அஞ்சுகிற இயக்கமல்ல தி.மு.க: மு.க.ஸ்டாலின்
No comments:
Post a Comment