நிலைமையில் அபிவிருத்தி காணவேண்டுமானால் வரி போடவேண்டும், கடன் வாங்க வேண்டும். கடனும் வாங்காதே, வரியும் வாங்காதே என்றால் அது நடைமுறைக்கு ஒத்ததாக இருக்கமுடியுமா? என்று பேசியுள்ளார் தமிழ்நாட்டு
முதலமைச்சர் திரு.காமராசர் அவர்கள்.
எந்த நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தபோதிலும், அரசாங்கத்தை நடத்த நிதி தேவை. நிதியைப் பெருக்க பெரும்பாலும் நான்கு வழிகள்தான் உள்ளன.
1. வரி
2. கட்டண வருமானம் (ரயில், தபால், ரிஜிஸ்டிரேஷன் மூலம் வருவது)
3. கடன்
4. நோட்டு அச்சடித்தல்
நமக்குத் தெரிந்தவரையில் இதைத்தவிர வேறு வழிகள் கிடையாது என்றே கருதுகிறோம். இந்த உண்மை எதிர்க்கட்சி நாற்காலியில் உள்ள தலைவர்களுக்குத் தெரியாது என்று நாம் சொல்ல மாட்டோம். தெரிந்தும் மறைத்து, திரித்துக் கூறினால் தான் ஆளுங்கட்சியை வீழ்த்த முடியும் என்பது அவர்களது முடிவு.
சென்ற நூற்றாண்டில் அரசாங்கம் என்றால் உள்நாட்டுக் கலவரங்களிலிருந்தும் வெளிநாட்டுப் படையெடுப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும், சட்டம், ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும், உடைமைகளைக் காப்பதற்குமே என்ற கருத்து நிலவி வந்தது. ஆனால் இந்நூற்றாண்டில் அக்கடமைகளோடு, மக்கள் நலனைப் பெரிதும் பெருக்கக்கூடிய சமுதாய நல்வாழ்வுத் திட்டங்களை அமுல் செய்து எல்லார்க்கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையம் என்ற அடிப்படையில் பல கடமைகளும் பெருகி உள்ளன.
இந்நிலையில் அரசாங்க வருமானத்தைப் பெருக்காமல் எந்த அரசாங்கம் தான் மக்களுக்கு நன்மை செய்யமுடியும்?
தனி மனிதனின் பட்ஜெட் என்பது வரவுக்கேற்ப செலவை அமைத்துக் கொள்வதாகும். அரசாங்க பட்ஜெட் என்பது செய்ய வேண்டிய செலவினங்களைக் கணக்கிட்டு அதற்கேற்ப வருமானத்தைப் பெருக்குவது என்பதாகும். இது பொருளாதார தத்துவத்தின் பால பாடம்.
கொடுமை, கொடுமை, தாள முடியாத வரிக்கொடுமை என்று பிரசாரம் செய்யும் கோயபெல்ஸ் கூட்டத்தார்க்கு இதுகூடவா தெரியாது? உதாரணத்திற்கு ஒன்று காட்டுவோம்.
தமிழ்நாட்டின் கல்வித்துறை வளர்ச்சி பிரமிக்கத்தக்க அளவில் வளர்ந்து வந்திருக்கிறதென்பதை கல்விக்காக ஆண்டுதோறும் செலவான கணக்கைப் பார்த்தால் தெரியும்.
சென்னை ராஜதானியில் (24 ஜில்லாக்கள் இருந்த காலத்தில்)
கல்விக்கான செலவு
ரூ. 1 கோடியே 33 லட்சம் 1921-22இல் செலவு - ரூ. 1 கோடி 33 லட்சம் 1922-23இல் செலவு - ரூ. 1 கோடியே 54 லட்சம் 1923-24இல் செலவு - ரூ. 1 கோடிய 63 லட்சம் 1924-1924இல் செலவு ரூ. 1 கோடியே 73 லட்சம்
பிறகு ஜஸ்டீஸ் ஆட்சியின் போது கட்டாய இலவசக் கல்வி புகுத்தியதால் 2 கோடியே 25 லட்ச ரூபாய் செலவழித்தனர்.
(ஆச்சாரியார் 1935-37 ஆட்சியிலும் ரூ. 2 கோடியே 52 லட்சம்; 1952-54இல் 11 கோடி ரூபாய் கல்விச் செலவை கணிசமாகப் பெருக்கவில்லை)
இன்று தமிழ்நாட்டின் மற்ற மொழிப் பகுதிகள் பிரிந்த நிலையில் (சுமார் 12 ஜில்லாக்கள் உள்ள நிலையில்) கல்விக்கான செலவு சமீபத்தில் மலையென உயர்ந்து இந்த ஆண்டு சுமார் 25 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.
கல்வித்துறையில் இந்த அதிசயிக்கத்தக்க சாதனையை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை. இன்னும் மென்மேலும் பெருகிக்கொண்டே போகும். இந்த ஒரு துறையின் செலவினமே இப்படி என்றால் ஊர்தோறும் மருத்துவமனைகள், சாலை வசதிகள், முதலியவை பெருகுவதால் எவ்வளவு செலவு அதிகரிக்கும் என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாமே!
வரியை உயர்த்தாமல் எப்படி இதைச் செய்ய முடியும்? பஸ் முதலியவற்றை அரசாங்கமே எடுத்து நடத்தினால் வரி தேவையிருக்காது என்று கூறுகின்றனர். அவற்றை எடுத்துக் கொண்டால் பல நூறு கோடி ரூபாய்களை நஷ்ட ஈடாகத்தர வேண்டுமே! அரசாங்கத்தின் ஆண்டு வருமானமே 113 கோடி ரூபாய்தானே?
அதோடுகூட, அத்துறைக்கு அதிகாரிகளுக்குப் பயிற்சியளித்து அவர்களைத் திறமையாக நடத்தச் செய்யும் பிரச்சினை வேறு உள்ளதே?
எல்லா உடமைகளையும் தேசியமயமாக்கி உள்ள சோவியத் ரஷ்யா போன்ற நாடுகளிலே வரியே வசூலிக்கப்படுவதில்லையா?
தேசீய மயமாக்குதலே சர்வரோக நிவாரண சஞ்சீவி என்று கூறும் கொலம்பஸ்கள் கவனத்திற்கு இவை ஏன் வரவில்லை?
சென்னை நகர கார்ப்பரேஷனில் நிர்வாகப் பொறுப்பேற்றுள்ள ஒரு கட்சியின் தலைவர், கார்ப்பரேஷனில் நீங்கள் வந்தவுடன் பாலும் தேனும் பெருக்கெடுத்தோடும் என்று கூறினீர்கள், அரசாங்கத்தின் வரி உயர்வைக் கண்டிக்கும் உங்களது நிர்வாகத்தில் சுமார் 1 கோடிக்கு மேல் வரியை உயர்த்தியுள்ளீர்களே என்று சென்னை வாழ் மக்கள் கேட்டால், வயலுக்கு வரப்பு போல, வேட்டிக்குக் கரை போல ஆட்சிக்கு வரி என்று உவமைகாட்டிப் பேசினார்.
இந்த ஞானோதய ஒளி ஏன் இவர்கள் சென்னை கோட்டையில் இருக்கும்போது வருவதில்லை? ரிப்பன் கட்டடத்தில் ஒரு மனப்பாங்கும், கோட்டையில் மற்றொரு மனப்பாங்கும் இருக்கலாமா?
மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்பதுதானே இது?
நிஷ்காமிய கர்மயோகியான திரு.ஆச்சாரியாரின் வரி எதிர்ப்பின் ரகசியமும் இதே தத்துவத்தைக் கொண்டதுதான்.
அவர் முதலமைச்சராக இருந்தபோது வரி கொடுப்பதைப் பற்றி குறிப்பிடுகையில் நல்ல காரியத்திற்காக நீங்கள் ஆண்டவன் சந்நிதியில் பக்தன் பயபக்தியோடு காணிக்கை செலுத்துவதுபோல் செலுத்தி வரவேண்டும் என்றார்.
அவர் ஏன் இப்போது வரியைக் கண்டிக்கிறார் என்கிறீர்களா? அதற்குப் பெயர்தான் அரசியல்! அரசியல்!! அரசியல்!!!
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- ஊடக உலகின் சாதனைச் செம்மல்
- தோழர் வீரமணியின் சேவை
- அதோ வருகிறான் பார் அரிமா மீது
- 50 ஆயிரம் விடுதலை சந்தாக்கள் திருச்சி பொதுக் குழுவில் சிறப்புத் தீர்மானம்
- உங்களை மற்றவர்கள்...
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- புகழ்
- பெற்றோர்களே...
- இமயமாய் இலங்கும் இணையிலா இதழாசிரியர் வீரமணி - வீ. குமரேசன்
- துணிவைத் துறக்காதீர்!
- பிற்படுத்தப்பட்டோரும், ஏ, பி பிரிவுகளில் 5.5ரூ 3.9ரூ மட்டுமே உள்ளனர் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு எஸ்.சி., பி.சி., இருவருக்கும் தேவை பிரதமர் கூட்டிய கூட்டத்தில் கருத்துப் பரிமாற்றம்!
<< முன்புஅடுத்து >>
புத்தக வடிவில் படிக்க
ஆகஸ்ட் 16-31
பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் - 8
அறிவியக்க முதல்வர் அண்ணல் புத்தர்
அலையாத்தி மனம்
இது பழையகோட்டை! பக்தியால் பின் தங்கிய மாவட்டம்
உருப்போட்டு மார்க் வாங்குவது தகுதி திறமை ஆகிவிடுமா?
எண்ணம்
எதிர்க்கதை
ஒரு சிந்தனை-ஒரு தகவல்
கடவுளைக் களவாடும் களவாடும் கபோதிகள் யார்?
குருமூர்த்தியின் சுதேசி வியாபாரம் - சு.அறிவுக்கரசு
சம உரிமையுடன் வாழ விரும்பும் ஈழத்தமிழர்கள்
சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்
சிறுகதை - இடிந்த கோபுரம்
டெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்!
நிகழ்ந்தவை
நிகழ்வுகளும் புனைவும்
புதுப்பாக்கள்
பெண்ணைத் தாயாக மதிக்கும் நாடு?
பெரியாரை அறிவோமா?
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
மருதிருவர் மண்ணிலே...
முகநூல் பேசுகிறது
முற்றம்
No comments:
Post a Comment