வீரமணியின் மனைவி என்னைச் சந்தித்தார் என்று கூறிய சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிமீது வழக்கு செய்தி வெளியிட்ட தினமலர்மீதும் கிரிமினல் வழக்கு!
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன், தமிழர் தலைவர் கி.வீரமணி, வழக்கறிஞர் த. வீரசேகரன், தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் செய்தியாளர்கள் கூட்டத்தில் உள்ளனர். (சென்னை - 16.8.2012)
- அக்டோபர் 5 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகும்படி இருவருக்கும் நீதிமன்றம் உத்தரவு
- செய்தியாளர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் அறிவிப்பு
சென்னை, ஆக.16- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் வாழ்விணையரும் தம்பியும் தம்மைச் சந்தித்ததாக காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பேசியதாக தினமலர் செய்தி வெளியிட்டு இருந்தது.
ஜெயேந்திர சரஸ்வதி மீதும், திருச்சி பதிப்பு தினமலர் மீதும் அவதூறு வழக்குத் தொடுக் கப்பட்டுள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் இன்று செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.
திருச்சி பதிப்புத் தினமலரில் (10.5.2012) கீழ்க்கண்ட செய்தி வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் ஆன்மிகத்தின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. தமிழகத்திலும் ஆன்மிகம் சிறப்பாக உள்ளது. ஆன்மிக வளர்ச்சிக்கு அரசு முழு அளவில் ஆதரவு அளித்து வருகிறது.
ஆனால் திமுக தலைவர் கருணா நிதியும், தி.க. தலைவர் வீரமணியும் ஆன்மிகத்துக்கு எதிராகவே செயல் பட்டு வருகின்றனர். பேசி வரு கின்றனர். ஆனால் கருணாநிதி மகன் ஸ்டாலின் 3 முறை என்னை வந்து சந்தித்துள்ளார்.
வீரமணியின் மனைவியும், மத்திய அமைச்சர் அழகிரி மனைவியும் என்னை வந்து சந்தித்துப் பேசியுள் ளனர். வீரமணியின் தம்பியும் என்னை வந்து சந்தித்துப் பேசியுள் ளார். கருணாநிதியும், வீரமணியும் ஆன்மிகத்துக்கு எதிராக செயல்பட் டாலும், அவர்கள் குடும்பத்தினர், ஆன்மிகத்துக்கு ஆதரவாகவே உள்ளனர் என்று தினமலரில் செய்தி வெளி வந்துள்ளது.
இந்தச் செய்தி உண்மைக்கு மாறானது. எனது வாழ்விணையர் இயக்கக் கொள்கையில், பகுத்தறிவு செயல்பாட்டில் மிகவும் தீவிர உணர்வு கொண்டவர் - கடைபிடிக்கக் கூடியவர்!
இந்த நிலையில் எனது வாழ் விணையர் காஞ்சிபுரம் சங்கராச் சாரியாரைச் சந்தித்தார் என்று சொல்லுவது கழகத் தோழர்கள் மத்தி யிலும் ,பொது மக்கள் மத்தியிலும் எங்கள்மீது அவதூறை, கெட்ட பெயரை ஏற்படுத்தக் கூடியதாகும்.
இதுகுறித்து தினமலர் ஏட்டுக் கும், சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் சரஸ்வதி அவர்களுக்கும் வழக் குரைஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப் பட்டது. சங்கராச்சாரியார் சொன் னதைத்தான் நாங்கள் வெளியிட் டோம். எங்களுக்கு வேறு நோக்கம் இல்லை என்று தினமலர் தரப்பி லிருந்து பதில் வந்தது. சங்கராச் சாரியாரிடமிருந்து எந்தவித பதிலும் இல்லை.
இந்த நிலையில் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் மற்றும் திருச்சி பதிப்பு தினமலர் மீதும், எங்களது இரண்டாவது மகனும், திராவிடர் கழகத் தலைமை நிலைய செயலாள ருமான வீ.அன்புராஜ் சென்னை மெட்ரோபாலிட்டன் முதன்மை நீதிபதி முன் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டு வரும் அக்டோபர் 5ஆம் தேதியன்று குற்றஞ் சாட்டப்பட்டுள்ள இருவரும் நேரில் ஆஜராக வேண்டு மென்று ஆணை பிறப்பித்துள்ளார் நீதிபதி.
விமர்சனம் என்பது வேறு உண்மைக்கு மாறாக அவதூறாகச் சொல்லுவது என்பது வேறு. நாங்கள் விமர்சனங்களை சந்திக்கத் தயாராகவே உள்ளோம் அதே நேரத்தில் அவதூறு செய்தால் அதனை சட்ட ரீதியாகச் சந்திப்போம். இதில் குற்றம் நிரூபிக்கப் பட்டால் இபிகோ 500 மற்றும் 501 பிரிவின்படி இரண்டாண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் என் தம்பியும் சங்க ராச்சாரியாரைச் சந்தித்தாராம். எனக்குத் தம்பியே கிடையாது. எங்கள் குடும்பத்தில் நான்தான் கடைசிப் பிள்ளை!
தினமலரைப் பொறுத்தவரை சங்க ராச்சாரியார் சொன்னதைத் தான் நாங்கள் அப்படியே வெளியிட்டோம். வேறு நோக்கம் இல்லை என்று பதில் சொன் னாலும்கூட செய்தி வெளியிடுவதற்கு முன் அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மன்னிப்புக் கோரினாலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதுதான் சட்டத்தின் நிலை என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
டெசோவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
கேள்வி: டெசோ மாநாட்டுக்குப் பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
பதில்: (1) தமிழ்நாடு முழுவதும் டெசோ தீர்மான விளக்கப் பொதுக் கூட்டங்கள் ஆகஸ்டு 20 முதல் 30 வரை நடக்கும் என்று டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்துள்ளார். இதில் டெசோவின் உறுப்பினர்களாக உள்ள கட்சியினரும் கலந்து கொள்வார்கள்.
(2) டெசோ மாநாட்டுத் தீர்மானம் அய்.நா.வுக்கு அனுப்பி வைக்கப்படும்.
(3) நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.
மாநாட்டின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே அலறுவதே போதுமானது. இன்றைய நாளேடுகளில் அது பற்றிய செய்தியும் வெளிவந்துள்ளது.
டெசோ மாநாட்டைத் தடை செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட தமிழ்நாடு முதல் அமைச்சர் சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றும்போது கூட ஈழத் தமிழர்கள் பிரச்சினையைப் பேசவேண்டிய அளவிற்குத் தாக்கத்தைக் கொடுத்திருக்கிறது.
எந்தெந்த கோணத்தில் யார் ஆதரவு கொடுத்தாலும் அதனை நாங்கள் வரவேற்போம்! இதற்குப் பிறகாவது வீண் விமர்சனங்களை நிறுத்திக் கொள்வார்கள் என்று எதிர் பார்க்கிறோம்.
- சென்னை செய்தியாளர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி (16-8-2012)
ஆன்மீகவாதிகளாக மாறி விட்டனரா?
கேள்வி: விஞ்ஞான மனப்பான்மை ஒருபக்கத்தில் வளர்ந்தாலும் ஒருகாலத்தில் நாத்திகர்களாக இருந்தவர்கள்கூட, பிற்காலத்தில் ஆத்திகர்களாக மாறும் நிலை ஏற்பட்டு வருகிறதே! ஆன்மீகவாதி களாக மாறுகிறார்களே?
பதில்: யாரோ ஒருவர், இருவர் அப்படி மாறியிருக்கலாம் பெரும்பாலும் ஆத்திகர்களாக இருந்தவர்கள்தான் நாத்திகர்களாக மாறினர் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு. திராவிடர் கழகத் தோழர்களைப் பொறுத்தவரை கொள்கையில் எப்பொழுதுமே உறுதியாக இருக்கக் கூடியவர்கள்.
உலகம் பூராவும் நாத்திகர்கள் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது என்று இன்றைக்கும்கூட செய்திகள் வெளி வந்துள்ளனவே!
- சென்னை செய்தியாளர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- ஆள்வதற்கு நாங்கள், மாள்வதற்கு நீங்கள் எனும் சிங்கள ஆதிக்கத்தை முறியடிப்போம்!
- ஈழத்தமிழர்கள் தியாகம் செய்தது போரிலே ஈழத்தமிழர்களுக்காக நாமும் தியாகம் செய்ய வேண்டும் - இனமானப் பேராசிரியர் உரை
- தடைகள் பலவற்றைக் கண்டு வெற்றி கண்ட டெசோ மாநாடு அடுத்த கட்டப் பணிகளை செயல்படுத்த முனைவோம்! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
- ஈழத்தமிழர் பிரச்சினை - தனிமனிதரால் அல்ல எல்லோரும் சேர்ந்து சுமப்போம் வாருங்கள்! டெசோ நடத்திய மாநாட்டில் மாநாட்டுத் தலைவர் கலைஞர் அழைப்பு
- ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற மக்கள் வெள்ளம்!
No comments:
Post a Comment