Thursday, August 16, 2012

டெசோ மாநாடு பற்றி அதிபர் ராஜபக்சே


கொழும்பு, ஆக.16- தனித் தமிழீழம் அமைக்க வலியுறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு வலு சேர்க்கும் வகையில் தான் தமிழ்நாட்டில் டெசோ மாநாடு நடத்தப்பட்டிருக்கிறது என்று இலங்கை அதி பர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
குருவிட்ட ராணுவ முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இது தொடர்பாக மகிந்த ராஜபக்சே பேசிய தாவது:
சிங்கள ராணுவத் தினர் ஒரு கையில் துப்பாக்கியையும், மறு கையில் மனித உரிமைக் கொள்கையையும் ஏந்தி போரில் ஈடுபட்டனர். மஹா போதி விகாரை, தலதாமாளிகை, மடு தேவாலயம், காத்தான் குடிப் பள்ளிவாசல்கள் இப்போது பாதுகாக் கப்பட்டு சுதந்திரமாக வழிபடக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
80 விழுக்காடு இயல்பு வாழ்க்கை திரும்பியது
21,000 க்கு மேற்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப் பினர்கள் புனர்வாழ் வளிக்கப்பட்டு அவர்களும் தற்போது படையினரைப் போல பல்வேறு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நாட் டின் வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் இப்போது அபிவிருத்திக்கு உள் ளாக்கப்படுவதும் படை யினரின் அளப்பரிய பங் களிப்பால் தான். இன்று வடக்கில் 80 விழுக்காடு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.
டெசோ மாநாடு
நாற்பது ஆண்டு களுக்கு முன் வட்டுக் கோட்டையில் தனிநாடு யோசனை முன்வைக் கப்பட்டது. அதே போன்று கடந்த இரு நாட்களுக்கு முன்பு அதற்குத் துணை போகின்ற மாநாடு நடத்தப்பட்டு (டெசோ) யோசனைகள் அங்கு முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த யோசனைகளின் பின்னணியில் இருப்பது தனியான ஒரு நாடு அமைக்கப்பட வேண் டும் என்பதைத்தான் புரிந்து கொள்ள வேண் டும்.
கடந்த காலங்களில் ஈழத்தை ஆதரிக்கும் இத்தகைய மாநாடு களுக்கு சென்று வந்தவர் இந்தியாவை விமர்சித் தார். இலங்கையில் ஈழம் அமைக்க நினைத்த அவர்கள் அத்தோடு அந்தப் பேச்சை நிறுத் திக் கொண்டனர். இது தான் உலகின் இன்றைய நிலை என்பதை நாம் உணர வேண்டும். வேறு நாடுகளில் ஈழம் உரு வாக்கப்பட்டால் பரவா யில்லை.
எமது நாட்டில் ஈழம் உருவாவதை எவரும் விரும்பவில்லை, எமது நாட்டைப் பற்றி பிற நாடுகளில் விமர் சிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கக் கூடாது. தனி ஈழம் கோருப வர்கள் எம்மிடம் எதிர் பார்ப்பதை நாமே செய்து கொடுக்கக் கூடாது என்றார் அவர்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...