பிசா -- கேள்விப் பட்டதுண்டா? இப்போதைய இளைஞர்கள் விரும்பி உண்ணும் பிசா என்னும் உணவல்ல. இது உலக அளவில் பணி புரியும், கல்வியுடன் தொடர் புள்ள அமைப்பு. PISA - PROGRAMME FOR INTERNATIONAL STUDENT ASSESSMENT - தமிழில் "உலக மாண வர்களின் திறன் மதீப்பீட்டமைப்பு _ என்று வைத்துக் கொள்ளலாம்.
இந்த அமைப்பு என்ன தான் செய் கிறது? இது எங்குள்ளது? இதன் பணி என்ன? சிறிது பார்ப்போம்.
நோக்கங்கள்
- இன்றைய 15 வயது பள்ளி மாணவர்கள் எதிர்கால சவாலை சமாளிக்கும் திறன் படைத்த வர்களா ?
- அவர்களின் கூர்ந்து ஆராயும் திறன், பகுத்தறிவுத் திறன் மற்றும் கருத்துப் பரிமாற்றுத் திறன் எவ்வாறுள்ளன.
- வாழ்நாள் முழுவதும் கற்கும் ஆர்வம் (சாந்துணையும் கற்றல்) உள்ளவர்களா?
கடந்த சில நாட்களாக நம் நாட்டில் கல்வி உரிமைச் சட்டம் பற்றி பேசப் படுவதால் உலக மாணவர்களின் கல்வித் தரத்தை எடை போடும் இந்த நிறுவனத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இதன் தலைமையகம் பாரிஸ் (பிரான்ஸ்) நகரில் உள்ளது.
நிறுவப் பட்ட ஆண்டு 1997. இந்த அமைப்பின் தலையாய பணி- உலக நாடுகளில் பள்ளிக் கூடங்களில் கற்கும் பதினைந்து வயது நிரம்பிய மாணவர்களின் அறிவு மற்றும் ஆற்றல்களை மதிப்பிடுவது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முன்னேறிய மற்றும் முன்னேறிக் கொண்டிருக்கின்ற நாடுகளில் கட்டாயக் கல்வி வழியாகக் கல்வி கற்ற பதினைந்து வயது நிரம்பிய மாணவர்களிடையே ஆய்வு செய்யப்படுகின்றது.
வளர்ந்து வரும் சமுதாயத்தில் இந்த மாணவர்கள், தாங்கள் கற்ற கல்வி மற்றும் ஆற்றல்களை எவ் வாறு ஒருங்கிணைத்துக் கொள் கிறார்கள் என்பதே ஆய்வின் தலையாய நோக்கம்.
இது ஒரு குறை காணும் அமைப்பு அல்ல. ஒரு நாட்டின் கல்வி அமைப்பு தன்னை எவ்வாறு மாற்றிக் கொள்ள வேண்டும் மற்றும் மாண வர்கள் உலகத்தின் சவால்களை எதிர்நோக்கி எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதனை அறிவுறுத்தும்.
ஆய்வு முறை
இந்த நிறுவனம் இதுவரை நான்கு முறை உலக மாணவர்களின் அறிவுத் திறனுக்கானத் தேர்வுகளை நடத் தியது. 2000, 2003, 2006, மற்றும் 2009 ஆம் ஆண்டுகளின் தேர்வுகளை நடத்தியது. நம்முடைய அரசு ஆரம்பத்தில் இந்த தேர்வுகளில் பங்கெடுத்துக் கொள்வதில் விருப்பம் காண்பிக்க வில்லை.
நம் நாட்டு மாணவர்கள் 2009 ஆம் ஆண்டு தேர்வுகளில் மட்டுமே பங்கெடுத் தனர் வடக்கே இமாசலப் பிரதேச மாநிலமும் தெற்கே தமிழ் நாட்டு மாணவர்களும் கலந்து கொண் டனர். தேர்வு முறை-- இரண்டு மணி நேரம். வாசித்தறிதல் ஒரு தேர்வில் மாணவர்களுக்கு ஒரு வரை படம் கொடுக்கப்பட்டு அதனைச் சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. மாணவர்கள் அந்த வரைபடத்தை சரியாக புரிந்து கொண்டார்களா என்பதனடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும்.
எடுத்துக்காட்டாக சட் என்னும் ஏரி வற்றிப் போய் மீண்டும் ஒரு காலத்தில் நீர் நிரம்பப் பெற்றது. கி.மு 11000 ஆண்டு வாக் கில் நீர் நிரம்பியது. இந்த வரை படத்தின் ஆரம்பத்தில் இந்த ஆண்டு ஏன் தேர்ந்தெடுக்கப் பட்டது என்பதனை மாணவர்கள் விளக்க வேண்டும். முழுமையான அறிவு இருந்தா லொழிய ஒரு மாண வன் கேட்கப் படும் கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாது.
இது போன்றே கணக்கிலும் அறி வியலிலும் நடைமுறை வாழ்கையை ஒட்டிய கேள்விகளே கேட்கப் படும். மாணவனின் புரிந்துணர்வு சோதிக் கப்படுகிறது.
இந்த தேர்வின் முடிவுகள் அந்த மாணவர்களுக்கு தெரிவிக்கப் படுவதில்லை. இந்த தேர்வு மாணவனை சோதிப்பதை விட ஒரு நாடு கல்வியை எவ்வாறு வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதன் மதிப்பீடு. மட்டுமே. மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அந்த நாட்டின் மதிப்பெண்.
இந்த தேர்வு ஒரு போட்டி அன்று, ஆனால் கல்வி முறையில் ஒரு நாடு தன்னை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ள உதவும் ஒரு மதிப்பீடு ஆகும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது நாம் எங்கிருக் கின்றோம் என்று தெரிந்து கொள்ள லாம். நல்ல மதிப்பெண்கள் பெற்ற நாடுகளின் கல்வி முறையினை அறிந்து செயல்படுத்த உதவும் வழிகாட்டி.
பிசா தேர்வு மாணவர்களின் கிளிப்பிள்ளை போன்ற ஒப்பிவிக்கும் திறனைப் புறக்கணிக்கிறது
தேர்வு முடிவுகள்
ஆண்டு 2000 - வாசித்தலும் பொருள் உணர்தலும்.
முதல் பத்து நாடுகள் --பின்லாந்து, கனடா, நியூசிலாந்து, ஆஸ்தி ரேலியா, ஐர்லாந்து, தென் கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், சுவீடன், மற்றும் ஆஸ்திரியா.
ஆண்டு 2003 -கணக்கு
மதிப்பெண் அடிப்படையில் முதல் பத்து நாடுகள் பின்லாந்த், தென் கொரியா, நெதர்லாந்து, ஜப்பான், கனடா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, நியுசீலாந்து, மற்றும் செக் குடியரசு.
2006-ஆம் ஆண்டு கணிதம், அறிவியல் மற்றும் வாசித்தறிதல் திறன்
அடைப்புக் குறிக்குள் பெற்ற மதிப்பெண்கள். மொத்த மதிப்பெண் 600
வரிசை கணிதம் அறிவியல் வாசித்தறியும் திறன்
1 தைவான் (549 ) பின்லாந்து (563 ) தென் கொரியா (556 )
2 பின்லாந்து (548) ஹாங்காங் (542) பின்லாந்து (547)
3 ஹாங்காங் (547) கனடா (534) ஹாங்காங் (536)
4 தென் கொரியா (547) தைவான்(532) கனடா (527)
5 நெதர்லாந்து (531) எஸ்டோனியா (531) நியுசீலாந்து (521)
6 சுவிட்சர்லாந்து (530) ஜப்பான்(531) ஐர்லாந்து (517)
7 கனடா (527) நியுசீலாந்து (530) ஆஸ்திரேலியா (513)
8 மகாவ் (525) ஆஸ்திரேலியா (527) லீச்டேன்சீன் (510)
9 லீச்டேன்சீன் (525) நெதர்லாந்து (525) போலந்து (508)
10 ஜப்பான் (523) லீச்டேன்சீன் (522) ஸ்வீடன் (507)
2009 ஆம் ஆண்டு தேர்வு முடிவு
2009 ஆம் ஆண்டு தேர்வில் கலந்து கொண்ட நாடுகள் 74. சீன நாட் டில் ஷாங்காய் நகர் மாணவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் தமிழ் நாடும் இமாசலப் பிரதேசமும் கலந்து கொண்டன. அவைகளின் மதிப்பெண்களும் தனித்தனியாகக் காட்டப் பட்டுள்ளன. முழு மதிப்பெண் 600 . ஒவ்வொரு நாட்டு மாணவர்களும் பெற்ற மதிப்பெண் அடைப்புக் குறிக்குள் காண்பிக்கப்பட்டுள்ளது.
வரிசை கணிதம் அறிவியல் வாசித்தறியும் திறன்
1 சீனா (600) சீனா (575) சீனா (556)
2 சிங்கப்பூர் (562) பின்லாந் (554) தென் கொரியா (539)
3 ஹாங்காங் (555) ஹாங்காங் (549) பின்லாந்து (536)
4 தென் கொரியா (546) சிங்கப்பூர் (542) ஹாங்காங் (533)
5 தைவான் (543) ஜப்பான் (539) சிங்கப்பூர் (526)
6 பின்லாந்து (541) தென் கொரியா (538) கனடா (524)
7 லீச்டேன்சீன் (536) நியுசீலாந்து (532) நியுசீலாந்து (521)
8 சுவிட்சர்லாந்த் (534) கனடா (529) ஜப்பான் (520)
9 ஜப்பான் (529) எஸ்டோனியா (528) ஆஸ்திரேலியா (515)
10 கனடா (527) ஆஸ்திரேலியா (527) நெதர்லாந்த்(508)
72 தமிழ் நாடு (351) தமிழ் நாடு (348) தமிழ் நாடு (337)
73 இமாசலம் (338) இமாசலம் (325) இமாசலம் (317)
இந்த இரு மாநிலங்களும் 72 மற்றும் 73 ஆவது இடங்களைப் பிடித்துள்ளன.
நம் நாட்டின் கல்வி நிலை ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பு கல்விக்கான ஒரு அமைப்பு நம் நாட்டில் இருந்ததாகக் கூற இயலாது. ஆங்கிலேயர் வருகைக்கு பின்பு தான் பள்ளிக் கூடங்களும் ஆங்கிலக் கல்வியும் தோன்றின. இந்தக் கல்வியும் நகரங்களிலேயே அமைந்தன. கல்வி வாசனை கிராமங்களை எட்டவில்லை.
நகரக் கல்வி படிப்பும் குமாஸ்தாக்களை உற்பத்தி செய்யும் கூடங்களாக இருந்தன. ஆங்கிலம் நம் மக்களின் அறிவுக் கண்களை ஓரளவுக்குத் திறந்தன. இல்லையெனில் நாம் ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும் அளவில் இருந்திருப்போம். நாடு விடுதலை அடைந்து 67 ஆண்டுகள் கடந்த பின்பும் நாம் கல்வியில் பின் தங்கியே உள்ளோம். நம் இளைஞர்கள் அயல் நாடுகளில் வேலை செய்வதற்கான வாய்ப்பு ஆங்கிலம் கற்றதும் ஒரு காரணமே. ஆங்கிலேயர்களுக்கு நன்றி.
பிசா ஆய்வின் சில முடிவுகள்
- ஒரு அறிவு சார்ந்த சமுதாயம் அமைவது ஒரு நாட்டின் வளத் திற்கு இன்றியமையாத ஒன்று. பொருளாதாரத்தில் மேம்பட்ட நாடுகள் தான் கல்வியில் சிறந் திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
- கல்வி கற்றலில் சம வாய்ப்பு அளித்தால் எல்லா மாணவர் களின் திறனில் வேறுபாடு இல்லை. சிலருக்கு இயற்கை யிலேயே திறமை வாய்ந்துள்ளது என்ற கருத்து தவறானது என்று ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.
- சிறந்த கல்வியை அளிக்க ஒரு நாடு பணக்கார நாடாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
- பெண் மாணவர்கள் வாசித்து பகுத் தறிதலில் ஆண் மாணவர் களை விட திறமை யானவர்கள்.
- ஆண் மாணாக்கர்கள் கணக்கில் சிறந்து விளங்குகின்றனர்.
- அறிவியலில் இருதரப்பினருமே சம நிலை.
- குடும்ப பின்புலம் கற்கும் திறனில் வெளிப்படுகிறது. வசதியான, கல்வி கற்ற பெற்றோர்கள், வீடுகளில் புத்தகங்கள் வாசிக்கும் பெற் றோர்களின் குழந்தைகள் அதிக வார்த்தைகளைக் கற்றுக் கொள்கின்றன.
- அனுகூலம் அதிகம் உள்ள மாணவர்கள் படிக்கும் பள்ளி களில் உள்ள ஆசிரியர்கள் சிறந்த ஆசிரியர்களாகக் கருதப் படுகிறார்கள். ஆனால் சிறந்த ஆசிரியர்கள் தேவைப் படுவது நலிவுற்ற நிலையிலுள்ள மாணவர் களைக் கற்பிப்பதற்கு.
- தைவான், கொரியா பின்லாந்த் ஷாங்காய் (சீனா) போன்ற நாடு களிலுள்ள நலிவுற்ற மாணவர்கள் பிசா தேர்வில் மிக அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். ஏழ்மையிலும் கல்வித் திறனை வெளிப் படுத்துகின்றனர்.
பசுமை மாணவர்கள் - பிசா ஆய்வு
உலக மாணவர்களிடையே "பசுமை உணர்வு" எங்ஙனம் உள்ளது?
- சுற்றுச் சூழல், அருகி வரும் உயிரி னங்கள், கால நிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் போன்ற வற்றைப் பற்றிய மிகத் தெளி வான அறிவு 19 % மாணவர் களிடையே காணப்பட்டது.
- இதற்கான தீர்வுகளையும் மிகத் தெளிவாக வெளிப்படுத்தும் திறன் படைத்தவர்களாக உள்ளனர். புதுவழித் திறன் உடையவர்கள் ( innovative) ஆக விளங்கு கிறார்கள்.
- இவர்கள் உலகின் எதிர்கால நன் னம்பிக்கை கலங்கரை விளக்கு கள்,. உலகை இவர்களிடம் ஒப் படைக்கலாம்.
தகவல்: நீ.நடராசன்
(முகாம்: அமெரிக்கா)
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment