கோவிலில் நகை, பணம் திருட்டு!
பெரியபாளையம், ஜூலை.5- ஆரணி அருகே நடுக்குப்பம் கிராமத்தில் உள்ளது துலுக் கானத்தம்மன் கோவில். வழக்கம் போல இந்தகோவிலை திறக்க நேற்று காலை கோவிலின் அறங்காவலர் குமரவேல் (வயது 55) சென்றார். கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந் தார். உள்ளே சென்று பார்த்த போது அம்மன் சிலை கழுத் தில் இருந்த தங்க தாலி மற்றும் உண்டியலில் இருந்த ஒரு ஆண்டு காணிக்கை தொகை போன்றவை திருடப்பட்டிருந்தன.
இதுகுறித்து குமரவேல் ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். உதவி ஆய் வாளர் பரந்தாமன் வழக்குப் பதிவு செய்து கோவில் பூட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற நபர்களைத் தேடி வருகிறார்.
சாலை விபத்தில் பக்தர்கள் படுகாயம்
பனைக்குளம்,ஜூலை.5- கோயிலுக்கு சென்ற பக்தர்கள் பேருந்து கவிழ்ந்து 12 பேர் படுகாயம் அடைந்தனர். திருப் பூர் அருகே வீரபாண்டியைச் சேர்ந்த பக்தர்கள் 26 பேர் கடந்த 24-ஆம் தேதி பேருந்து மூலம் காசிக்கு சென்றனர். அங்கிருந்து ராமேசுவரம், தேவிப்பட்டினத் தில் சாமி தரிசனம் செய்ய நேற்று வந்த னர். ராமேசுவரத் தில் சாமி தரிசனம் செய்து விட்டு காலை 9.30 மணிக்கு பெருங்குளத்தைக் கடந்து நதிப்பாலம் அருகே பேருந்து வந்தபோது முன்னே சென்ற வாகனத்தை முந்திச் சென்ற போது திடீரென நிலை தடுமாறியது.
சிறிதுநேரத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து கூச்சலிட் டனர்.உடனே அக்கம் பக்கத் தினர் விரைந்து சென்று பேருந் துக்குள் இருந்தவர்களை மீட் டனர். பேருந்தில் பயணம் செய்த 26 பேரில் 12 பேர்படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து மண்டபம் யூனியன் ஒன்றிய கவுன்சிலரும் மாவட்ட துணைச் செயலாளர் முனியசாமியும் விரைந்து வந்து 108 ஆம்புலன் சுக்கு தகவல் கொடுத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதை யடுத்து படுகாயம் அடைந்த 12 பேரும் ராமநாதபுரம் அரசு மருத் துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
கோவில் ஊழியரை அடித்துக் கொன்று, கோபுர கலசம் திருட்டு
திருவனந்தபுரம், ஜூலை.5- பத்தனம்திட்டை அருகே, கோவில் பாதுகாப்பு ஊழியரின் உதவியாளரை அடித்துக் கொன்ற பின், தங்கம் பொதியப் பட்ட கோபுர கலசத்தைத் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத ஆசாமிகளை காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.
இது பற்றி காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பத்தனம்திட்டை அருகே உள்ள மல்லப்பள்ளி பகுதியில் கல்லுப்பாறை பகவதி அம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்த கோவில் அருகில் வசிக்கும் இளைஞர் அனில் குமார். நேற்று அதிகாலை 4 மணியளவில், சிலர் மோட்டார் சைக்கிளை திருட முயற்சி செய்தனர். சத்தத்தைக் கேட்டு அனில் குமார் அவர்களை அப்பகுதியில் தேடிப் பார்த்தார். பகவதி கோவில் பாதுகாப்பு ஊழியர் கல்லுப் பாறை சந்திரசேகர பணிக்கர் (வயது 60), அவருடைய உதவியாளர் குன்னந்தானம் தாணிக்காடு ஜி. கோபால கிருஷ்ண பிள்ளை (65) ஆகிய இருவரும் உடலில் அடிபட்ட காயங்களுடன் அப் பகுதியில் உள்ள 2 தூண்களில் கட்டி வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர்களுடைய வாய், திறக்க முடியாதபடி பிளாஸ்திரியால் ஒட்டப்பட்டு இருந்தது.
உடனடியாக அனில் குமார் இது பற்றி அப்பகுதி மக்களுக் கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.
பொதுமக்களும் காவல் துறையினரும் தூணில் கட்டி வைக்கப்பட்டு இருந்த இரு வரையும் விடுவித்தனர். கும்பநாடு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே, பாதுகாப்பு ஊழியர் சந்திர சேகர பணிக்க ரின் உதவியாளர் கோபால கிருஷ்ண பிள்ளை பரிதாபமாக உயிர் இழந்தார். அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசா ரணை நடத்தினர். விசாரணையில், கோவில் பிரகாரத்தின் மேற்கூரை நடுவில் வைக்கப்பட்டு இருந்த தங்கம் பொதியப்பட்ட அய்ம்பொன் னாலான கலசத்தை திருடர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
No comments:
Post a Comment