Sunday, July 22, 2012

டாக்டர் முத்துலட்சுமி


இந்தியத் துணைக் கண் டத்தின் முதல் பெண் மருத் துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1968).
அவருடைய வாழ்க்கை வரலாறு போராட்டம் நிறைந்த கரடு முரடானது! பள்ளியில் படிக்கும் பொழுது கூட மாணவர்களுக்கும் இவருக்கும் இடையில் ஒரு திரை இருக்கும். மாணவர்கள் கண்களில் ஒரு பெண்மணி பட்டு விடக்கூடாதாம்.
பள்ளி முடிந்தவுடன் இந்தப் பெண் வெளியில் சென்றதற்குப் பிறகுதான் மாணவர்கள் வெளியே வர வேண்டுமாம்.
அடுத்து கல்லூரியில் சேர்வதற்கு புதுக்கோட்டை மன்னரின் சிறப்பு ஆணை தேவைப்பட்டது. எல்லா நிலைகளிலும் கல்வியில் முதல் இடம் பெற்று, சென் னைக்கு வந்து மருத்துவப் படிப்பையும் முடித்தது அசாதாரண செயலே!
வெறும் மருத்துவராகத் தன் காலத்தைக் கழிக்காமல் பொதுப் பணிகளிலும் ஆர்வம் செழிக்க வாழ்ந்தார். அவரின் ஆற்றல் மேலும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தில் எதிர்ப்பு ஏதுமின்றி ஒரு மனதாக சென்னை சட்டமன்றத்தின் மேலவைக்குத் தேர்வானார். பின்னர் அதன் துணைத் தலைவராகவும் ஆனார். இந்தியாவிலேயே இந்த வகையில் மிளிர்ந்த முதல் பெண்மணி இவர்தான்!
எத்தனையோ சாதனை கள் அவருக்கு உரியன என்றாலும் தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றம் என்பது தான் மணி மகுடமாக என் றென்றும் ஒளி வீசித் திகழக் கூடியதாகும்.
குறிப்பிட்ட ஜாதியில் பிறந்த பெண்களைத் தேவ தாசி என்ற பெயரில் பொட் டுக் கட்டிக் கோவிலுக்கு விட்டு விடுவார்கள். வெளி உலகுக்குக் கடவுளின் அடிமை என்றாலும் நடை முறையில் வேறுவிதமாகவே நடத்தப்பட்டனர்.
இதனை ஒழித்துக் கட்டக் கடுமையாகப் போராடும்படி நேர்ந்தது.  மசோதாவைத் தாக்கல் செய்தவர் டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி.
அதனை எதிர்த்து காங்கிரஸ்காரரான திருவா ளர் சத்தியமூர்த்தி அய்யர் என்ன பேசினார் தெரியுமா?
மனித குலம் தோன் றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர் பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டு வருகிறது. பலருக்கும் இன் பத்தை வாரி வழங்கிக் கொண்டும் இருக்கிறது. இப்படிக் கூறுவதால் என்னை தாசிக் கள்ளன் என்று கூறலாம். அதைப் பற்றி நான் கவலைப்படப் போவ தில்லை. தாசிகளை ஒழித் தால் பரத நாட்டியக் கலை அழிந்துவிடும்.
ஆண்டவன் கட்டளையை மீறுவது அடாத செயல். இன்று தேவ தாசித் தொழிலை நிறுத் தினால் ராமசாமி நாயக்கர் நாளை அர்ச்சகர் தொழிலை நிறுத்த சட்டம் செய்ய வந்து விடுவாரே! என்று பேசிய தும் சுட்டிக் காட்டத் தகுந் தது. இந்தச் சட்டத்தை வரவேற்று தந்தை பெரியார் குடிஅரசில் சிறப்புத் தலையங்கமே தீட்டினார். 84 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த அம்மையாரின் பெயரை அடையாறு புற்று நோய் மருத்துவமனை சொல் லிக் கொண்டே இருக்கும். - மயிலாடன்


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...