Sunday, July 22, 2012

அஞ்சல்துறையா! அஞ்சுகின்ற துறையா?


விடுதலை வாசகர் கவிஞர் கற்பூரம் நாகராசன் மதுரையிலிருந்து தலைமைக் கழகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் காணப்படுவதாவது:
அஞ்சல் பணியாளர் ஆறு நாள் விடுதலையை ஒரே நாளில் கொண்டு வந்து போட்டார். அதற்கு அவர் சொன்ன பதில்  கிளை அலுவலகத்தில் போய்க் கேளுங்கள்!
கிளை அலுவலகத்திற்கும் நடந்தார் தோழர் நாகராஜன் அலைப்பேசியில் பேசிக் கொண்டே அலட்சியமாக தலைமை அலுவலகத்துக்குப் போ! என்பது பதில். விடுவாரா கருஞ்சட்டைத் தோழர் தலைமை அலுவலகத்துக்குச் சென்றார் அங்கு என்ன பதில் தெரியுமா?
தொடர்வண்டி (ரயில்) அஞ்சலகத்திற்குச் சென்று கேளுங்கள் என்பது பதில்.
சளைக்கவில்லை; நேராக அங்கும் சென்றார் சென்னைக்குக் கடிதம் எழுதுங்கள்! என்பது ஒரே வரி பதில்.
இதுதான் அஞ்சல் அலுவலகம் நடைபெறும் யோக்கியதை. ஒரு காலத்தில் ஞாயிற்றுக்கிழமையில்கூட (அதற்குரிய கூடுதல் அஞ்சல் வில்லைகளை ஒட்டினால்) தகவல்கள் கிடைக்கும். ஆனால் இன்றைய நிலை என்ன? அஞ்சல் துறை, மக்கள் அஞ்சுகின்ற துறையாக அல்லவா ஆகிவிட்டது.
குறிப்பு: தோழர் நாகராசன் அவர்களின் கடிதமும், இந்த விடுதலை செய்தி யும் சென்னையில் உள்ள தலைமை அஞ்சல் அதிகாரி PMG) க்கு அனுப்பப்பட்டுள்ளது.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>


JULY 16-31

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...