புதுடில்லி, ஜூலை 11- ராமர் பாலத்தை பாதுகாக்க மத்திய அரசு தவறினால் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மூத்த தலைவர் வி.கே. மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 7 ஆண்டு களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் சேது சமுத்திர திட்டப்பணிகள் துவங்கின. ஆனால் ராமர் பாலம் வழியாக சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்றும், அதை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும் என் றும் உச்ச நீதிமன்றத்தில் இந்து அமைப் புகளும், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து இதுபற்றி ஆராயுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சேது சமுத்திர திட்டப் பணிகளை நிறுத்தி வைத்த மத்திய அரசு மாற்றுப் பாதை குறித்து ஆராய நோபல் பரிசு வென்ற சுற்றுச்சூழல் வல்லுநர் ஆர்.கே.பச்சவுரி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அண்மையில் அந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மாற்றுப் பாதையை தேர்ந்தெடுப்பது பொருளாதார ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் சாத்தியமற்றது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து மத்திய அரசு இன்னும் இறுதி முடிவெடுக்க வில்லை. இன்னும் 8 வாரத்திற்குள் ஒரு முடிவு எடுத்து அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் வி.கே. மல்ஹோத்ரா கூறுகையில்,
ராமர் பாலம் விலை மதிப்பற்ற தேசிய பாரம்பரிய சின்னமாகும். அதனால் அதை எந்த விலை கொடுத்தாவது பாதுகாக்க வேண்டும். ராமர் பாலத்தை தகர்க்காமல் சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றுவது சாத்தியம் இல்லை என்று கூறும் ஆர்.கே.பச்சவுரியின் அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் நிராகரிக்க வேண்டும். மத்திய அரசு ராமர் பாலத்தை காக்க தவறினால் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்துவோம் என்றார்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் தனி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஆ.ராசா தொடர்ந்த வழக்கில், சி.பி.அய்.க்கு டில்லி உயர்நீதிமன்றம் தாக்கீது
- குடியரசுத் தலைவர் தேர்தல்: பி.ஏ.சங்மா சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு
- கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்க ரிசர்வ் வங்கி புது இணையதளம்
- மும்பை தாக்குதலுக்கு தேவையான துப்பாக்கி குண்டுகளை உளவு அமைப்பு வழங்கியது
- ஆ.ராசா 2 நாட்கள் தமிழகம் வந்து செல்ல அனுமதி
No comments:
Post a Comment