சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும், கல்வியைக் கொடுக்காதே என்று எழுதி வைத்து, சூத்திரர்கள் என்றழைக்கப்பட்ட திராவிடர் இனத்தவர்களை பல வழிகளில் காலில் இட்டு மிதித்த மனுதர்ம பார்ப்பனர்கள், கல்வியில்தான் முதலில் நம்மை நசுக்கி னார்கள் என்பது, தந்தை பெரியாரால் நமக்கு அதிகம் விளக்கப்பட்ட ஒன்று.
எங்கே கல்வியை இவன் பெற்றுவிட்டால் இயல்பான அறிவுடையவன், அதீத அறிவு பெற்று நம்மை காலி செய்துவிடுவானோ என்ற பயத்திலே தான் மேற்கண்ட தர்மங்கள் மனுதர்மத்தில் எழுதி வைக்கப்பட்டன. அறிவு சூழ்ச்சியால் அடிக்கப்பட்டோம், கீழே தள்ளப் பட்டோம், மீண்டு எழுவதற்கு அறிவாசான் தேவைப்பட்டார், இன்றும் தேவைப்படுகிறார்.
இந்தக் கல்வியைப் பெற நாம் எந்தளவுக் குப் போராடினோம், போராடிக் கொண்டு இருக்கிறோம் என்பது வரலாற்றுப் பக்கங் களுக்குத் தெரியும். வீட்டிற்குள் பெண்களை கூண்டுக் கிளிகளைப் போல் அடைத்து வைத்திருக்காதீர்; சுதந்திர பறவைகளாய் பறக்கவிட்டு உலக அறிவை பெறச் செய்யுங் கள், கல்வி கற்க ஏற்பாடு செய்யுங்கள் என்று அன்றாடம் கூறிக் கொண்டிருந்தார் பகுத் தறிவுப் பகலவன்.
அந்த எண்ணம், கூற்று, கனவு, அதற் கான போராட்டங்கள் இன்று செயலில் நம் கண்முன்னே தெரிகிறது. அனைத்துப் பெண் குழந்தைகளும் பள்ளிகளுக்கும், கல் லூரிகளுக்கும் செல்கின்றனர். வீட்டின் ஒவ்வொரு பிள்ளைகளும் படிக்கின்றனர். ஸ்ரீஸ்ரீ வீடுகளிலிருந்து மட்டுமே படிக்க செல்ல முடியும் என்றிருந்த அடக்குமுறை உடைத்தெறியப்பட்டு இன்று, முனுசாமி, கந்தசாமி போன்றவர்களின் வீட்டுப் பிள்ளைகளும் படிக்கச் செல்ல முடிகிறது.
படிப்பது மட்டுமல்ல, மாநிலத்திலே முதல் மாணவர்களாகவும் தேர்ந்து தங்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்கின்றனர். இந்த உழைப்பும், பெருமை யும் ஆகிய அனைத்தும் தந்தை பெரியா ரையே சேரும் என்று அடித்துக் கூறலாம்.
ஆம், ஏனென்றால் அவர்களின் சிந் தனையும், அவர்கள் உருவாக்கிய திராவிடர் இயக்கமுமே அதற்கான வித்திட்டது. திரா விடர் இயக்கமே இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது, நுழைவுத்தேர்வினை அடித்து விரட்டியது. தந்தை பெரியாரின் மாணவன், தமிழர் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்கள் இயற்றித் தந்த 31-சி சட்டமே அவைகளை நிலைநாட்டியது.
அதற்கான எடுத்துக்காட்டு தற்பொழுது வெளியிடப்பட்ட மருத்துவம் மற்றும் பொறியி யல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஒன்று போதும். மருத்துவ பட்டியலில் 200க்கு 200 பெற்று முதல் பதினோரு இடங்களை, பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களே பிடித்துள்ளனர். இது ஒன்று போதாதா? மருத்துவ படிப்பிற்கு மொத்தம் இருக்கும் இடங்கள் 2395; அதில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு போக இதர 742 இடங்கள் பொது இடங்கள்.
அந்த 742 பொது இடங்களில் 678 இடங்களை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பிடித்துள்ளனர் என்பது எவ் வளவு ஆச்சரியமான, பாராட்டவேண்டிய, வியக்கவேண்டிய ஒரு விடயம். ஏனென்றால் 742 இடங்களில் 678 இடங்களை பிடித்தது போக மீதமிருக்கும் 64 இடங்களை உயர் வகுப்பினர் எடுத்துக்கொள்கின்றனர்.
இதை இவ்வாறே பார்த்தால் மொத்தம் 2395 இடங் களில் வெறும் 64 இடங்களையே உயர்ஜாதி யினர் நிரப்புகிறார்கள், மீதமிருக்கும் 2331 இடங்களை திராவிடர் மாணவர்கள் நிரப்பு கின்றனர். இந்த மாற்றம் எத்துணை பெரிய மாற்றம். அதிலும் 64 இடங்களை பார்ப்பனர் களே அடைந்து விடுகிறார்களா, என்றால் இல்லையே. அந்த 64 இடங்களில் முற்பட்ட திராவிடர் சமுதாயத்தினர் பிடிக்க வாய்ப் பிருக்கிறதே.
அந்த 64 இடங்களை பார்ப்பனர்களே பிடித்துக் கொள்வதாய் வைத்துக் கொண்டாலும் மீதமுள்ள 2331 இடங்களை திராவிடர் மாணவர்கள், பார்ப் பனர் அல்லாதவர்கள் அல்லவா பிடித்துள்ளார் கள். அதேபோல் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் முதல் 15 மாணவர் களில் பிற்படுத்தப்பட்டோர் 8, மிகவும் பிற் படுத்தப்பட்டோர்-1, தாழ்த்தப்பட்டோர்-1, தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியினர்)-1, பழங் குடியினர்-1 என்று அருமையாக தேர்ச்சி பெற்றுள்ளனர் நம் மாணவர்கள்.
இதை எப்படி அந்த பார்ப்பனர்களால் ஜீரணிக்க முடியும், உறங்க முடியும், வாய் விட்டுச் சிரிக்க முடியும்? அதனால் தானே தினமலர், தினமணி, துக்ளக் போன்றவை களுக்கு செரிமானக் கோளாறு ஏற்படுகிறது. அதனால் தானே மருத்துவ தரவரிசை பட் டியலில் மாணவர்களின் ஜாதியை குறிக்கும் வண்ணம், பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., என்று முதல் பக்க செய்தியாய் போட்டு குத்திக்காட்ட தெரிகிறது.
குளித்த குதிரை, மதம் பிடித்த யானை, படித்த சூத்திரன்- ஆகியோர் மிகவும் ஆபத்தானவர்கள் என்று சாஸ்திரம் தரித்த பார்ப்பனர்களாகிய அவர்களுக்கு, சூத்திரன் என்றழைக்கப்பட்ட, படித்த திராவிடனால் இன்று ஆபத்து காத்திருக்கிறது, என்று சொன்னால் அது மிகையாகாது.
நீதிக்கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்கும் முன்புவரை மருத்துவ கல்லூரிகளில் சேர கட்டாயம் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண் டும். ஆனால் இன்றோ, அவ்வாறு இல்லை, தகுதியான மதிப்பெண்கள் மட்டுமே போதும் அல்லவா. இந்த மிகப்பெரிய மாற்றங்களுக்கு வழிவகுத்தது யார்? எதிர்ப்புகள் முன்நின்று சந்தித்து ஏவுகணை பிரச்சினைகளை எட்டி உதைத்து போராடி உரிமைகளை வென் றெடுத்தது யார்? சூத்திரன் என்பவன் படிக்கவே கூடாது அவ்வாறு அவன் ஓதலை செய்தால் மிகக் கடுமையான தண்டனை களை கொடுக்க வேண்டும் என்று இருந் ததை அடியோடு அழிக்க பாடுபடுவது யார்?
என்று இந்த இடஒதுக்கீடு மூலம் சிறந்த கல்லூரிகளை பெறவிருக்கும் மாணவர் களுக்குத் தெரியுமா? அல்லது அவர்களின் பெற்றோர்கள் தான் அறிவார்களா? அல்லது திராவிடத்தால் வீழ்ந்தோம், திராவிடம் என்பது ஒரு மாயை என்று கூறும் தற்காலத் தலைவர்களாவது அறிவார்களா? மேற் கண்ட திராவிடர் மாணவர்களின் சாதனை களை எண்ணி இனியாவது அவ்வாறு கூறாமல் இருப்பார்களா?
ஆம், அறிவோம் என்று வரும் பதிலை விட, இல்லையே என்றுதான் அதிகம் வரும். அது அவர்களின் அறியாமை. எந்தப் பலனையும், நன்றியையும் எதிர்பார்க்காமல் இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டு இன்றுவரை தமிழர் தலைவர் தலைமையில் பாடுபட்டுக் கொண்டிருக்கும் திராவிடர் கழகம் அல்லவா! இந்த மாற்றத்திற்கு எல்லாம் காரணம். திராவிடர் இயக்கம் என்ற ஓர் இயக்கம் இல்லையெனில், இந்த மண் மானம் இழந்து பல நாள்கள் ஆகியிருக்கும்.
திராவிடர் மாணவர்கள் படிக்க இய லாது, இடமில்லை, தங்கும் வசதியில்லை என்று விரட்டப்பட்ட காலத்திலேயே திராவிடர் இல்லம் என்ற விடுதியை எழுப்பி பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு தங்கும் வசதியை உருவாக்கித் தந்தார், டாக்டர் சி. நடேசனார் அவர்கள்.
பள்ளிகளிலே முதன்முதலில் மதிய உணவுத் திட்டத்தையும், கட்டாய ஆரம்பக் கல்வியையும் கொண்டு வந்து கல்வியில் முதல் புரட்சியை உண்டாக்கினார் அப் போதைய சென்னை மேயர் சர் பிட்டி தியாகராயர்.
பள்ளிகளிலே முதன்முதலில் மதிய உணவுத் திட்டத்தையும், கட்டாய ஆரம்பக் கல்வியையும் கொண்டு வந்து கல்வியில் முதல் புரட்சியை உண்டாக்கினார் அப் போதைய சென்னை மேயர் சர் பிட்டி தியாகராயர்.
கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம் ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத் தோடு வாழ்வதற்குத் தகுதிப்படுத்துவது என்பதேயாகும், அல்லது உலகில் நல் வாழ்க்கை வாழத் தகுதியுடையவனாக் குவது என்பதேயாகும் என்று கூறினார் பள்ளிப் படிப்பில்லா பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்.
ஆகவே, அந்த அவசியமான கல்வியை பெற்றுத் தந்த திராவிடர் கழகத்தில்,
ஆச்சாரியார் கொண்டு வந்த குலக் கல்வி முறையை தகர்த்தெறிந்த திராவிடர் கழகத்தில்,
இடஒதுக்கீடு என்ற ஏணிப்படியை ஒடுக் கப்பட்ட மாணவர்களுக்காக ஏற்படுத்திய திராவிடர் கழகத்தில்,
கிராமப்புற மாணவர்களின் படிப்பை அடியோடு அழிக்க நுழைந்த நுழைவுத் தேர் வினை எட்டி உதைத்த திராவிடர் கழகத்தில்,
இன்னும் பல நலத்திட்டங்களை மாண வர்களுக்காக ஏற்படுத்த, போராடிய திராவிடர் கழகத்தில்,
ஏன் திராவிடர் மாணவர்கள் இணைதல் கூடாது?
ஏன் திராவிடர் கழகத்தில் இணைந்து போராடக் கூடாது?
நூறாண்டு காலம் சமுதாய மாற்றத் தினை ஏற்படுத்தி, திராவிடர் இனத்தவர் களை தலைநிமிரச் செய்திட்ட திராவிடர் கழகத்தில் மாணவர்கள்இணைந்தால், மேலும் மிகப் பெரிய சமுதாய மாற்றங்களை உருவாக்கிட முடியுமே.
ஜாதி அடுக்குமுறைகளின் வேராகிய கடவுள், மதம், புராணங்களை முற்றிலுமாக அழித்து, புத்துலகைப் படைக்க இளைய சமுதாயத்தினரால் மட்டுமே முடியும்! முடியும்!!
ஆகையால் திராவிடத்தால் எழுந்தோம், வீழவில்லை என்று உரக்க கூறி, அனைத்து மாணவர்களும் அரசியல் ஆட்சிப் பொறுப்பை ஏற்காத ஒரு சமுதாய புரட்சிகர இயக்கத்தில் இணைந்து நாளைய விடியலை உருவாக்குவோம்!
கல்விப் பயனை முழுவதும் அடைவோம்!
பார்ப்பனர் அடக்குமுறையை முற்றிலும் ஒழிப்போம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இரா.திலீபன், கண்ணந்தங்குடி கீழையூர்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- தமிழகத்தில் முதல் முறையாக ஆசிரியர் தகுதித் தேர்வு: 6.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்
- மதுரையில் 125 பெண் காவலர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி
- ஆசிரியர் பட்டயப் பயிற்சி கலந்தாய்வில் 2000 பேர் மட்டுமே பங்கேற்பு
- டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள்
- ஆணாதிக்கவாதிகளுக்கு எச்சரிக்கை பெண் சிசு என்பதற்காக கருவை கலைத்தால் மருத்துவருக்கு மரண தண்டனை
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment