Wednesday, July 11, 2012

உயர்நீதிமன்றங்களில் 42,17,905; உச்சநீதிமன்றத்தில் 57,179 வழக்குகள் நிலுவை நீதிபதி பதவிகளிலோ காலி இடங்கள் 266


புதுடில்லி, ஜூலை 11- இந்திய உயர்நீதிமன்றங்களில் 266 நீதிபதி பதவிகள் காலியாக உள்ளன. இதன் காரணமாக லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மொத்தம் அனுமதிக்கப்பட்டுள்ள 895 பணியிடங்களில் தற்போது 629 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான பணியிடங்கள் காலியாக இருப்பதற்கு முக்கியமான காரணம் தற்போது நடைமுறையில் உள்ள கலேஜியம் என்னும் நீதிபதிகள் குழுவின் மூலம் செய்யப்படும் தேர்வு மற்றும் நியமன நடைமுறையே என்று பரவலாகக் கருதப்படுகிறது. நீதிபதிகள் நியமன நடைமுறையை மறுபரிசீலனை செய்து, மாற்றியமைப்பது மிகவும் அவசியமானது என்ற கருத்தும் நிலவுகிறது.
அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட மொத்த 160 நீதிபதிகளில் தற்போது 86 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இதே போல் ஆந்திராவில் அனு மதிக்கப்பட்ட 49 பணியிடங்களில் 30 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். மும்பை உயர்நீதிமன்றத்தில் 18 காலிப் பணி யிடங்களும், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் 13 காலிப் பணியிடங்களும், டில்லி உயர்நீதிமன்றத்தில் 12 பணி யிடங்களும், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் 11 பணி யிடங்களும், சத்தீஷ்கர் உயர்நீதிமன்றத்தில் 5 பணி யிடங்களும், ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் 14 பணி யிடங்களில் 8 பணியிடங்களும் காலியாக உள்ளன.
கேரளாவில் 11 பணியிடங்களும், மத்திய பிரதேசத்தில் 9 பணியிடங்களும் சென்னையில் 7 பணியிடங்களும் காலியாக உள்ளன. இதி லிருந்தே தற்போதைய நியமன நடைமுறை  பயனற்றதாக இருக்கிறது என்பது தெரிய வருகிறது. ஏற்கெனவே தொடக்க நிலை நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அண்மை யில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி உயர்நீதிமன்றங் களில் 42,17,905 வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் 57,179 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 42,17,905 வழக்குகளை இந்த நீதிமன்றங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ள 895 நீதிபதிகள்தான் விசாரிக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு நீதிபதியும் சராசரியாக 4,713 வழக்குகளை விசாரிக்க வேண்டியிருக்கும்.
இந்த நிலையில் இப்போது 629 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.   266 பணியிடங்கள் அதாவது  29 விழுக்காடு பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, இந்த நிலுவையில் உள்ள வழக்குகள் எல்லாம் தீர்க்கப்படுவது எக்காலம்? தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பது முதுமொழி.
இவ்வாறு வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் இருப்பதால், எத்தனை ஆயிரம் அப்பாவிகள் சிறைகளில் வாடவேண்டியிருக்கிறது. எத்தனை ஆயிரம் பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காகக் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...