Tuesday, July 17, 2012

கடவுளுக்குமாதவிடாயாம்!


ஆடி மாதத்தில் நல்லவிதமான மங்கலகரமான காரியங்கள் நடக்கக் கூடாது என்று சொன்னால் புரோகிதர்களின் பக்தித் தொழில் நடக்க வேண்டாமா?
கோயில் விழாக்களுக்கு மட்டும் பஞ்சம் கிடையாது. உருவமற்றவர் கடவுள் என்று கதைப்பார்கள். ஆனால் நாட்டு நடப்பு என்ன? வீதிக்கு வீதி கோயில்கள்! ஒவ்வொருவிதமான கோயில் சிலைகள். சிவன் என்றால் ஒரே மாதிரியான உருவம் எல்லாக் கோயில்களிலும் இருக்காது. அதிலும் பலபல உருவங்கள் அவற்றிற் கெல்லாம் தனித்தனித் தலப் புராணங்கள், கட்டுக் கதைகள்.
விஷ்ணு என்றாலும் அப் படியே! மனிதனுக்கு என்னென் னவெல்லாம் நடக்குமோ அவ் வளவும் இந்தக் கடவுள்கள் மீதும் ஏற்றி வைக்கப்பட்டதுதான் படுதமாஷ்!
நாகப்பட்டினத்தில் நீலாய தாட்சி என்னும் கோயில்; இந்த அம்மனுக்கு ருது சாந்தி விழா வாம்! புரியவில்லையா! இந்த அம்மன் ருதுவாகிவிட்டாளாம். இதற்காக வருடம் தோறும் ஆடிப் பூரம் என்று சொல்லி பத்து நாள் திருவிழாக் கூத்தாம்.
ஆமாம். அந்தச் சிலைதான் உலோகங்களால் செய்யப்பட்ட தாயிற்றே! அம்மணி ருது ஆனதை எப்படி கண்டுபிடித்தார்களாம்?
இந்த நீலாயதாட்சி குடி கொண்டுள்ள நாகையில் தான் சுனாமியால் நூற்றுக்கணக் கான மக்கள் கடலில்  அடித்துச் செல்லப்பட்டார்கள். பாவம்! அந்தக் குத்துக் கல்லு என்ன செய்யும்?
கேரளாவில் செங்கண்ணூர் பகவதி அம்மன் என்ற கோயில் ஒன்று இருக்கிறது.  இந்த அம்மனுக்கு மாதா மாதம் மாத விடாய்வருமாம். அதனால்தான் அந்த அம்மனை யாரும் ஒளிப் படம் (போட்டோ) எடுக்க அனும திப்பதில்லையாம்.
அதெல்லாம் சரி.. மாதா மாதம் மாதவிடாய் வரும் இந்தப் பகவதி அம்மன் கோயிலுக்கா வது பெண் அர்ச்சகர் ஒருவரை நியமிக்கக் கூடாதா?
மாதவிடாய் வருவதால் ஏற் படும் எல்லாவற்றையும் கவனித் துக் கொள்ள தடியனான ஆண் அர்ச்சகன்தான் இருக்க வேண் டுமா? இப்படியெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது - இதுதான் அர்த்தமுள்ள இந்துமதம்!
இன்னொரு கூத்து; இதையும் கொஞ்சம் கேளுங்கள். நெல்லை காந்திமதிக்குச் சீமந்த விழா வாம்! புரியவில்லையா? வளையல் காப்புவிழாவாம்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆடி மாதத்தில் 10 நாட்கள் இந்த அம்மணிக்கு விழா; அதில் நான்காம் நாள் தான் இந்தச் சீமந்த விழாவாம்!
அப்படியே பார்த்தாலும் சீமந்தம் என்பது ஒரு தடவை தானே நடக்கும். அதுவும் முதல் பிரசவத்துக்கு முன்னதாக. நெல்லை காந்திமதிக்கு மட்டும் அது எப்படி ஆண்டுதோறும் சீமந்தம் விழா? இப்படியெல்லாம் கேள்வி  கேட்கக் கூடாது! இது அர்த்தமுள்ள இந்துமதம் அல்லவா!
ஹி... ஹி... ஹி....

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>




No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...