தந்தை பெரியாரும், தமிழ் ஈழமும் இரண்டு கண்கள்!
பேராளர்களின் பேச்சில் இடம் பெற்ற தீப்பொறிகள்!
பால்டிமோர், ஜூலை 14- வட அமெரிக்காவின் தமிழ்ச் சங்கப் பேரவையின் வெள்ளி விழாவில் பேசிய பேராளர்கள் அனைவரும் தந்தை பெரியார் அவர்கள்பற்றியும் தமிழ் ஈழம் குறித்தும் இரு கண்களாகக் கொண்டு உரைகளை அமைத் திருந்தனர்.
பால்டிமோர், ஜூலை 14- வட அமெரிக்காவின் தமிழ்ச் சங்கப் பேரவையின் வெள்ளி விழாவில் பேசிய பேராளர்கள் அனைவரும் தந்தை பெரியார் அவர்கள்பற்றியும் தமிழ் ஈழம் குறித்தும் இரு கண்களாகக் கொண்டு உரைகளை அமைத் திருந்தனர்.
அமெரிக்காவின் பால்ட்டி மோர் நகரிலே சூலை 5 ,6,7, 8 ஆம் நாட்களிலே தமிழர்களின் மிகப் பெரு விழாவாகச் சிறப்பாக நடந்தேறியது.
முதல் நாள் சிறப்பு விருந் தினர்கள் மறைமலை இலக் குவன், ஆர். நல்லக்கண்ணு, தமிழச்சி தங்கபாண்டியன், பினாங்கு துணை முதல்வர் ராமசாமி எழுத் தாளர் ராமகிருட்டிணன்,மற்றும் கலைஞர்கள் டி.கே.ச கலைவாணன், வேலு நாச்சியார் நாடகக் கலை ஞர்கள், திரைப்பட நடிகர்கள் பரத்,அமலா பால் போன்றோர் தமிழ் மக்களுடன் விருந்துண்டு அளவளாவி மகிழ்ந்தனர்.
சூலை 6 ஆம் நாள் வெள்ளிக் கிழமை பேரவைத் தலைவர் தண்டபாணி, ஒருங்கிணைப் பாளர் பாலகன் அனைவரையும் வரவேற்றனர். மு. வ அவர்களின் நூற்றாண்டு விழாவாக வெள்ளி விழா தொடங்கியது.
அய்யா மறைமலை இலக் குவன் மு.வ. அவர்களின் சாதனை களைப் பற்றியும், அன்றைய காலகட்டத்தில் அவர் ஆற்றிய அரும் பணிகள் பற்றியும் நயம் பட எடுத்துரைத்தார்.
"தமிழால் இணைவோம், செயலால் வெல்வோம்" என்ற குறிக்கோளுடன் இளைய தலை முறையும், குடும்பங்களும் இணைந்து ஆற்றிய செயல் அமெரிக்காவில் 30 ஆண்டு களுக்கு மேல் வாழ்ந்து வருவோ ரையும், தமிழகத்திலிருந்து வந்து கலந்து கொண்ட பெற் றோர்களையும் வியப்பில் ஆழ்த் தியது.பலர் இது போன்ற அருமையான நிகழ்ச்சிகளைத் தாய் தமிழகத்திலேயே பார்க்க இயலாது என்று பாராட்டினர்.
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இளைய தலை முறை தமிழில் அவர்களே, எழுதி, நடித்து மற்றும் பல் முனைப் போட்டிகளைத் தயாரித்து நடத்திய பாங்கு மூக்கில் விரல் வைக்க வேண்டியதாயிற்று. இளைய தலை முறையின் சொல் வளமும் பொருள் வளமும் அமெரிக்கத் தமிழின் மழலைத் தனத்துடன் பலாச்சுளை போல் பெற்றோர்க் கும் உற்றோர்க்கும், விருந் தினர்க்கும் இனித்தது.
கானடியத் தமிழர்களின் நாட்டியங்கள் கருத்தில் தோய்ந்த துன்பம் நிறைந்த ஆனால் எழில் மிகுந்த நிகழ்ச்சிகள்.
தந்தை பெரியார் பற்றி....
பேசிய அனைவரும் தொட்ட கருத்துக்கள் தமிழர்களின் இரு கண்களான ஈரோடும், ஈழமுந் தான்.தந்தை பெரியார் அவர் களையும், ஈழத் தமிழர் பற்றியும் பேசாதவர்களோ, கவி பாடாத வர்களோ இல்லை எனும் அள விற்கு உணர்ச்சி பொங்கி வழிந் தது. புரட்சிக் கவிஞரின் வார்த் தைகள் தாமரை பூத்தத் தடாகமடியாக அரங்கில் உயிர் பெற்று நடன மாடியதைக் கனவா நனவா என்று வியந்தனர்.
போட்டிகளில் பெரியார் படத்தைக் காட்டிக் கேள்விகள் கேட்ட போது சிறு வயதினர் அளித்த பதில்கள் சாதி ஒழிப்பு பற்றிய புரிதல் எல்லாம் பாராட்ட வைத்தன. தமிழ் இலக் கியப் போட்டியும், மற்ற தமிழன் தமிழச்சிப் போட்டிகளும் கருத் தும் நகைச்சுவையுங் கலந்து இனித்தன.பாலுந் தெளிதேனும் பாகும் பருப்பும் சேர்ந்து இளைய தலை முறை முத்தமிழையுந் தந்தது அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகளின் சாதனை என்பதை யுணர்ந்த பெற்றோர் புளகாங் கிதம் அடைந்தனர்.
சிறப்பான மலர் மு.வ. நூற் றாண்டு மலராக வெள்ளி விழாச் சிறப்புடன் வெளியிடப் பட்டது. 25 ஆண்டுகளின் தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர்கள், மற்றும் தமிழுக்காக அமெரிக்காவில் அயராது உழைக்கும் சிகாகோ வ.ச. பாபு அவர்கள் அறிமுகப் படுத்தப்பட்டுச் சிறப்பு செய்யப் பட்டனர்.
சொற்பொழிவாளர்கள் மாண்புமிகு பினாங்கு ராமசாமி, யாழ்ப்பாணப் நாடாளுமன்ற உறுப்பினர் சீதரன், நல்லக் கண்ணு, எழுத்தாளர் ராமகிருட் டிணன்,பேராசிரியர் பிரெண்டா பெக், துணைவேந்தர் பொன் னவைக்கோ, சிகாகோ புலவர் சவரி முத்து அனைவரும் சமுதா யம், தமிழின் சிறப்பு, தமிழரின் இன்னல்கள் இனிச் செய்ய வேண் டிய செயல்பாடுகள் பற்றிப் பேசினர். மாவட்ட ஆட் சியாளர் சகாயம் அவர்களின் வாழ்க்கைப் பயணமும் எதிர் நீச்சலும் எதிர் காலத்திற்கு ஒரு நம்பிக்கை தந்தது.
தமிழச்சி தங்கபாண்டியன் தமிழறிஞர் அனைவரும் தமிழ் மீது பற்றுள்ளவர்கள் என்று சொல்ல முடியாது என்பதை உ.வே.சாவின் "போஜனம்" ,காஞ்சி பெரிய சங்க் ராச்சரியின் நீஷப் பாசை பற்றியன சொல்லி எடுத் துரைத்தார்.
மதுரை முத்துவின் நகைச் சுவை, கவனகர் முனைவர் கலை. செழியன், நடிகை அமலா பால் இவர்களின் சிறப்புரைகளும் நிகழ்ச்சிகளும் நடந்தன.
வேலு நாச்சியார் நடன நாட கம் மிகச் சிறப்பாக அமெரிக்க நண்பர்கள் போர் வீரர்களாகவும் தோழிகளாகவும் மூன்றே நாள் பயிற்சியுடன் கலந்து கொள்ளச் சிறப் பாக நடந்தது. அமெரிக்கத் தமிழ் தொழில் வல்லுநர்களும், அமெரிக்க அரசு அதிகாரிகளும் பாராட்டப் பட்டனர். இன்னும் பல நிகழ்ச்சிகள், அனைத்தையும் தர இடம் போதாது.
ஈழத் தமிழர் படுகொலை
ஈழப் படுகொலை பற்றி அமெரிக் கப் பத்திரிகையாளர் டிம் கிங் அவர்கள் உணர்ச்சியுடன் பேசினார். அமெரிக்க ஈழத் தமிழ்த் தலைவர்கள் உரையாற்றினார்கள்.
வந்திருந்த 2500 பேருக்கும் உணவு படைத்து, விருந்தினர்க்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துத் தேனீக்களாக பல முனைவர்களும், அறிவியல் தொழில் வல்லுநர்களும் உழைத்தது உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காதத் தமிழரின் விருந்தோம்பலின் உச்ச கட்டமாக இருந்தது. கடுமையாக உழைத்த அனைவரையும் அரங்க மேடையில் அழைத்து அனைவரும் பாராட் டினர். சித்ரா, அமெரிக்க அய்ங்கரன் இன்னிசை நள்ளிரவைத் தாண்டி மற்றும் விழா முடிந்தும் ஒலித்துக் கொண்டுள்ளது. ஞாயிறன்று காலை அனைவருங்கூடி மீண்டும் பலரின் உரையாடல், டி.கே.ச கலைவாணர் இன்னிசை கேட்டுப் பிரியா விடை பெற்றனர். அடுத்த ஆண்டு விழா கனடாவின் டொராண்டோ நகரிலே சூலை 5,6 2013 இல் நடக்கவிருக்கின்றது.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- திருமுல்லைவாயல் எஸ்.பாண்டியன் படத்திறப்பு விழா
- ஈரோடு - கோபி மாவட்டங்களில் எழுச்சியோடு நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள்
- திருவண்ணாமலையில் விடுதலை வாசகர் வட்ட தொடக்க விழா
- க.பீமாராவ் - ரா.தேவி ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு விழா
- புரட்சிகர பகுத்தறிவு பிரச்சாரக்கூட்டம் சமஸ்கிருத மந்திரங்கள்! பார்ப்பனர்களின் தந்திரமே! திண்டுக்கல் கூட்டத்தில் இராம.அன்பழகன் விளக்கவுரை
No comments:
Post a Comment