அய்.நா. மாமன்றம் உலக மகிழ்ச்சி அறிக்கை ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளது! மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கும் (முதல் அய்ம்பது) நாடுகளின் வரிசை - உலக நாடுகளில் - எப்படி உள்ளன? எந்த தர வரிசை என்பதை பல அளவுகோல்கள் ஆய்வுகள் நடத்தி, கண்டு அறிந்து வெளியிட் டுள்ளார்கள்!
அந்த வரிசைப்படி, (மகிழ்ச்சி அளவின் தரவரிசைப்படி)
1) டென்மார்க், 2) ஃபின்லாந்து, 3) நார்வே, 4) நெதர்லாந்து, 5) கனடா, 6) சுவீட்சர்லாந்து, 7) சுவீடன், 8) நியூசிலாந்து, 9) ஆஸ்திரேலியா, 10) அயர்லாந்து, 11) அமெரிக்க அய்க்கிய நாடுகள் (USA) 12) கோஸ்டோரீகா, 13) ஆஸ்திரியா, 14) இஸ்ரேல், 15) பெல்ஜியம், 16) லக்சம்பர்க், 17) அய்க்கிய அரபு எமிரேட்ஸ் (U.A.E.) ( 18) இங்கிலாந்து (U.K.) 19) வெனிசுலா, 20) அய்ஸ்லாந்து 21) பனாமா, 22) ஸ்பெயின், 23) பிரான்ஸ், 24) மெக்சிகோ, 25) பிரேசில், 26) சவுதி அரேபியா, 27) போர்ட்டோ ரீகோ, 28) இத்தாலி, 29) குவைத், 30) ஜெர்மனி, 31) கத்தார், 32) துர்க்மெனிஸ்தான், 33) சிங்கப்பூர் (இங்கிருந்துதான் எழுது கிறேன்) 34) பெலீஸ் (Belize) 35) சைப்பிரஸ், 36) செக் குடிஅரசு, 37) கவுத்திமேலா, 38) டிரினிடாட் & டூபேகோ 39) அர்ஜென்டினா, 40) ஜமைக்கா, 41) கொலம்பியா 42) கிரீஸ், 43) சிலி, 44) ஜப்பான், 45) கயானா, 46) தைவான், 47) மால்ட்டா, 48) எல்சால்வடார், 49) ஸ்லோவேனியா, 50) உருகுவே.
(source: World Happiness Report United Nations)
இதில் - மகிழ்ச்சி நிலவும் மக்களை வரிசைப்படுத்திய நாடுகளில் பெரும்பாலானவை சிறிய நாடுகளே! பரப்பளவு, மக்கள் தொகை, அடிப்படைக் கட்டுமான வசதிகள், படிப்பறிவு, சுகாதாரம் (நல் வாழ்க்கை) கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார வளம், அவை எல்லாவற்றையும்விட சமூக ஆதரவு, நண்பர் குழு, குடும்ப உறவுகள் - இவைகளின் ஒட்டு மொத்தமான ஆய்வுகள் கூட்டுத் தொகையினைப் பயன்படுத்தியதன் அடிப் படையில் இந்த தர வரிசை அமைந் துள்ளன.
நிறைய பணம் சம்பாதிப்போர், அதிகம் உள்ள நாடுகளில் மகிழ்ச்சி நிறைந்தவர்களாக அவர்கள் இருப்பதில்லை என்பதை பண்பாடு, மனவளம், நோயற்ற வாழ்வு, சுற்றுச்சூழல் தூய்மை இப்படி பலவற்றையும் ஆய்வு செய்து அய்.நா. மகிழ்ச்சி அறிக்கை முடிவுக்கு வந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கறுப்பு இன மக்கள் அதிகம் வாழும் நாடுகள்தான் மிகவும் துன்பம், வறுமை, வாழ்க்கைத் தரக் குறைபாடு எல்லாமும் உடை யவை!
ஏன் நம் நாடு இந்தியா தர வரிசையில் முந்த இல்லை? நம் ஞானபூமி - பன் மதங்களையும் பலகோடி கடவுள்களையும், வழிபாட்டு நிலையங்களையும் ஆத்மா, தத்துவார்த்தத்தில் எமக் கிணை எவரே என்று தம்பட்டமடிக்கும் இந்த புண்ணிய பூமியில் மகிழ்ச்சிக்கு ஏனோ பஞ்சம், எல்லாம் தலை யெழுத்து, முன் ஜென்மவினை, கர்ம பலன் என்ற கட்டுக்களே தடைக் கற்கள் என்பதை உணர்ந்தால், உண்மை புரியும்!
No comments:
Post a Comment