Monday, March 5, 2012

பக்தி வளர்க்கும் ஒழுக்கத்தின் இலட்சணம் பாரீர்!


கடவுள் பக்தி அவசியம் என்று வக்காலத்து வாங்கும் பெரிய மனிதர்கள் ஒன்று சொல்லுவது உண்டு. கடவுள் பக்தியிருந்தால்தான் மனிதன் குற்றம் செய்யப் பயப்படுவான் என்ற கீறல் விழுந்த இசைத்தட்டு மாதிரி சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
அதாவது உண்மை என்று சொல்லுவதற்கு நாட்டு நடப்புகள் அறவேயில்லை. லோக குரு என்று பார்ப்பன வட்டாரங்கள் தலையில் தூக்கி வைத்துக் கரகாட்டம் போடும் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதிகளின் யோக்கியதை களை, ஒழுக்கக் கேடுகளை, காம லீலைகளைத் தெரிந்து கொண்டபின், அந்தக் கீறல் விழுந்த இசைத் தட்டைத் தூக்கி எறிந்திட வேண்டியதுதான்.
கோவில் கருவறைக்குள்ளேயே கருவை உருவாக்கும் காலிகள் அர்ச்சகர்களாக (காஞ்சீபுரம் மச்சேந்திர கோவில் மற்றும் மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அர்ச்சகர்கள் எடுத்துக்காட்டாக) உள்ளனர் என்ற நிலைமை வெளிச்சத்துக்கு வந்த பிறகு, கடவுள் நம்பிக்கை - பக்தி சமாச்சாரங்களின் யோக்கியதை கேவலத்தின் ஊற்றுக் கண்கள் என்பதைப் பாமர மக்களும் அறியும் நிலை ஏற்பட்டுவிட்டது.
இதில் ஒன்றும் ஆச்சரியத்துக்கோ, அதிர்ச்சிக்கோ இடமும் கிடையாது. இந்து மதத்தின் கடவுள்களே விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன கற்பழிப்பில் ஈடுபட்டுள்ளனவே! 60 ஆயிரம் கோபிகாஸ்திரீ களுடன் கொஞ்சிக் குலவினான் எங்கள் கோபால கிருஷ்ணன் என்று பெருமையாகக் கூறிக் கொண்டு திரியும் நாட்டில் ஒழுக்கத்தை எந்தக் காயிலாங் கடையில் தேடுவது?
பக்தையாகிய ஆண்டாள் எனும் வைணவப் பெண்மணி தந்தையெனப் போற்றத்தகுந்த கடவுளுடன் புணர ஆசைப்பட்டு விரகதாபத்தில் விழுந்து புரள்கிறாள் என்கிறபோது, நல்லொழுக் கத்தை நினைத்துத்தான் பார்க்க முடியுமா?
சபரிமலை அய்யப்பன் கோவில் உண்டியலில் சுருட்டல்பற்றி தணிக்கை அதிகாரி அம்பலப்படுத்தி யுள்ளார். திருப்பதி கோவிலிலும் இந்தக் கந்தாயம் ஊர் சிரித்ததுண்டு.
உண்டியல் பணத்தை எண்ணும் இடத்தில் காமிரா வைத்துக் கண்காணிக்கிறார்கள் என்றால், கடவுளின் சக்தி, அந்தக் கடவுள் மீதுள்ள பக்தி எந்தத் தராதரத்தில் உள்ளன என்பதும் வெளிப்படை!
ஏழுமலையான் டாலர் மோசடி சர்வசாதாரணம் - டாலர் சேஷாத்திரி என்ற அந்த ஊழல் பேர்வழியைப் பட்டம் கொடுத்து அழைக்கின்றனர் என்றால் பாருங்களேன்.
ஏழுமலையானுக்குச் சொந்தமான நகைகளில் மோசடியாம்! தங்க நகைகளுக்குப் பதிலாக தங்கமுலாம் பூசப்பட்ட நகைகளை வைக்கும் மோசடி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சர்வசாதாரண மாம்!
ஏழுமலையான் கோவிலில் நடந்துள்ள நகை மோசடி குறித்து ஆந்திர மாநில சட்டப்பேரவையிலேயே உறுப்பினர்கள் குரல் கொடுத்துள்ளனரே!
மன்னன் கிருஷ்ண தேவராயர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அவ்வப்பொழுது காணிக்கை செலுத்திய தங்க, வைர நகைகளே காணோமாம்.
பிரச்சினை உயர்நீதிமன்றம்வரை சென்று, நகை பற்றிய விவரங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
திருப்பதியில் பக்தித் தொழில் மட்டுமா? விபச்சாரத் தொழிலும் ஓகோவென்று நடக்கிறது என்று ஆனந்தவிகடனே (25.2.2007) வெளி யிட்டுள்ளதே!
எந்தப் பாவம் செய்தாலும் அதற்கு எளிதாகப் பரிகாரங்கள் வேறு! 12 வருடம் பஞ்சமா பாதகங்கள் செய்தாலும், கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஒரு முழுக்குப் போட்டுவிட்டால் அந்தப் பாவங்கள் விலகி ஓடி, மோட்சம் கிட்டும் என்று கூறுகிற ஒரு அமைப்பில் ஒழுக்கத்துடன் வாழ்பவன்தான் பைத்தியக்காரன் என்று கருதப்படமாட்டானா?
நாட்டில் ஒழுக்கம் வளர வேண்டுமானால், முதலில் கோவிலையும், பக்தி சிறுபிள்ளைத்தனத்தையும், அவற்றைப் பறைசாற்றும் புராணக் குப்பைகளையும் தலப் புராணங்களையும் ஒரே இடத்தில் குவித்து தீவைத்துப் பொசுக்க வேண்டாமா?
சிந்திப்பீர்!


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...