Monday, March 5, 2012

மூக்கு ஒற்றுமை


திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: தொப்புள் கொடி உறவுள்ள தமிழகத் தமிழர்களின் ஓட்டுக்களைப் பெற்று, ஆட்சி பீடம் ஏறி அமர்ந்துள்ள காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் கடமை என்ன?  வளமை போல இலங்கையைக் காப்பாற்றப் போகிறதா? அல்லது நீதியின் பக்கம், நியாயத்தின் பக்கம், நேர்மையோடு நின்று, மனிதநேயத்தை மறக்க மாட்டோம் என காட்டப்போகிறதா?
டவுட் தனபாலு: அப்படியே இன்னொரு கேள்வியும் கேளுங்களேன். தமிழர்களின் ஓட்டுக்களைப் பெற்று மத்திய ஆட்சியில் கோலோச்சிக் கொண்டிருக்கும் தி.மு.க. என்ன செய்யப்போகிறது? வளமை போல் இலங்கையைப் காப்பாற்றப்போகிறதா?  அல்லது நீதியின் பக்கம், நியாயத்தின் பக்கம், நேர்மையோடு நின்று, மனித நேயத்தை மறக்கமாட்டோம் என காட்டப் போகிறதா?                      - தினமலர் 4-3-2012
திராவிடர் கழகம் சொல்வது இருக்கட்டும். (அது எப்பொழுதுமே தெளிவாகக் கூறி வந்துள்ளது.) தி.மு.க. என்ன செய்யப் போகிறது என்பதும் இன்னொரு புறம் இருக்கட்டும். இந்தப் பிரச்சினையில் தினமலர் உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல் என்ன செய்ய விருப்பதாக உத்தேசம்?
இலங்கை அரசு இப்பிரச்சினையில் தண்டிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா? பார்ப்பனக் கும்பலின் நிலைப்பாடு என்ன?
ராஜபக்சேவுக்கு பாரதரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று சு.சாமி சொன்னது பற்றி டவுட்  தனபாலுகள் கண்டு கொண்டதா? இது போன்ற விஷயங்களில் எல்லாம் டவுட் தனபாலுக்கு சந்தேகமே வராது. ஏனென்றால் சந்தேகமே இல்லாமல் பார்ப்பனர்களுக்கும், சிங்கள இனத்துக்கும் ரத்த உறவு உண்டே! ஜெயவர்த்தனே அப்படிக் கூறியதுண்டே!  (மூக்கு ஒற்றுமை!)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...