சென்னை, மார்ச் 6- இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் நடைபெற்ற போரில் போர்க்குற்றங்கள் நடைபெற்றது உண்மைதான் என்று அய்.நா. அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் தலைமை வழக்குரைஞர் தலைமையிலான விசாரணைக் குழு உறுதி செய்திருக்கிறது.
இலங்கை அரசை எதிர்க்கின்றவர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது.
போர்க் குற்ற நடவடிக்கைக்காக இலங்கைக்கு எதிராக அய்.நா. தீர்மானம் கொண்டு வருகிறது.
இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்று தமிழக முதலமைச்சர், தி.மு.க. தலைவர் கலைஞர் மற்றும் தமிழகமெங்கும் ஒருமித்த குரல் வீறுகொண்டு எழுகின்றன.
திராவிடர் கழகத்தின் சார்பில் தலைவர் கி. வீரமணி அவர்களும் முதன்முதலில் நியாயத்தின் பக்கம் நின்று இந்தியா ஆதரிக்கவேண்டும் என்று விடுதலை வாயிலாக முதன்முதலில் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் கலைஞர், முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் பல தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டனர்.
இப்பிரச்சினையில் தமிழகமெங்கும் ஒரே குரல் எழுந்துள்ளது.

இந்திய அரசே, இந்திய அரசே, ஜெனிவாவில் கூட இருக்கும் அய்.நா. கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக செயல்பட வேண்டும்; செயல்பட வேண்டும்
இக்கோரிக்கையினை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (6.3.2012) காலை 11 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை எதிரே திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
கழகத் தோழர்களே! மனித நேயர்களே! கடல் அலையாய்க் கூடுவீர்! கூடுவீர்!!
ராஜபக்சேவின் கொட்டத்தை அடக்கவும், இலங்கை அரசின் தான்தோன்றித்தனப் போக்கினை ஒடுக்கவும் போர்முரசம் கொட்டுகிறார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.
தோழர்களே, ஒருமித்த கருத்துள்ளோரே திரள்வீர்! திரள்வீர்!!
தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- அனைத்து வரலாற்று திருப்பங்களுக்கும் காரணமாக இருந்தவர்கள் பெண்கள்தான்
- ஆந்திர மாநிலம் - விசாகப்பட்டினத்தில் - முக்கிய கடற்கரை சாலையில் தந்தை பெரியார் சிலையை தமிழர் தலைவர் திறந்து எழுச்சியுரை!
- இன்று கூடியது தமிழக அமைச்சரவை
- 2030-இல் இங்கிலாந்து ஒரு கிறித்துவ நாடாக இருக்காது டெல்லி மெயில் தகவல்
- 2 லட்சம் பொறியியல் விண்ணப்பம் அச்சடிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு
No comments:
Post a Comment