Tuesday, January 17, 2012

தலைநகரில் இருநாள் திராவிடர் திருநாள் திரண்டனர் தமிழர்கள்! குடும்பம் குடும்பமாக!! க(ல)ளகட்டி நின்றது பெரியார் திடல்


சென்னை, ஜன.17-தலைநகரில் பெரியார் திடலில் திராவிடர் கழகம்-தந்தைபெரியார் முத்தமிழ்மன்றத்தின் சார்பில் கடந்த இரு நாள்களில் திராவிடர் திருநாளாம் பொங்கல்விழா க(ல)ளகட்டி நின்றது.
முதல்நாள்  கலை நிகழ்ச்சிகள்
திராவிடர் திருநாள் (தை பொங்கல்-தை 1 தமிழ்ப் புத் தாண்டு) கலை நிகழ்ச்சிகளின் கொண்டாட்டங்கள் 15.1.2011 அன்று மாலை 5.45 மணி அளவில் சென்னை பெரியார் திடலின் நுழைவுவாயிலில் இருந்து தப் பாட்டம், நாதஸ்வரம், கரகாட் டம், பொய்க்கால்குதிரை, கோலாட்டம், மயிலாட்டத் துடன் மகிழ்ச்சிகரமாய் நிகழ்ச்சி துவங்கியது.
தப்பாட்டத்தை 8 பேர் கொண்ட குழுவும், நாதஸ் வரத்தை 2 பேரும், பொய்க்கால் குதிரையாட்டத்தை இருவரும், கரகாட்டத்தை இரண்டு பேரும், கோலாட்டத்தை 6 பேர் கொண்ட குழுவும், மயிலாட் டத்தை ஒருவரும் மிகச்சிறப்பாக இசைக்கு ஏற்ப செய்துகாட்டி அவர்களது திறமையை வெளிப் படுத்தினர். பெரியார் திடலின் நுழைவுவாயிலில்  பத்துமணி துளிகள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடை பெற்ற கொண்டாட்டங்களை சாலைகளின் ஓரங்களில் நின்று பொதுமக்கள் பார்வையிட்டு ரசித்தனர்.
நுழைவாயிலில் இருந்து ஆடியபடி இசைகுழுவினர் பெரியார் திடலின் மய்யத்தில் வந்து பதினைந்து நிமிடங்கள் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
உறிகட்டி அடித்தல்
பாரம்பரியமான விளை யாட்டுகளில் ஒன்றான உறிகட்டி அடித்தல் போட்டியில் சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், மகளிர், வயதானவர்கள் என அனைவரும் முழு ஈடுபாட்டுடன் உரியை அடிக்கும் நிகழ்ச்சியில் ஈடு பட்டனர்.
பெரியவர்களுக்கு ஒரு வாய்ப்பும், சிறியோருக்கு 3 வாய்ப்புகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ஏராள மானோர் கலந்துகொண்டனர்: பெரியார் திடல்-யமுனா, கரை மாநகர் சுரேஷ், பம்மல் கோபி, அனகை ஆறுமுகம், கமலேஷ், ஜஷ்வந்த, மகேந்திரன், எஸ். மோனிஸ், குணசீலன், கரிஸ்மா (சத்திய நாராயணன் பேத்தி), அரீஷ், ஹரினி, ஆலன் அன் பரசு, அடலேறு, இனநலம், கேத்ரேஷ், தமிழ்ஈழம், ஜானகி ராமன், சிறீநதி-சிங்கப்பூர், தமிழ்நாடன்-கோடம்பாக்கம், எஸ்.சுகன்யா, மதுமிதா, பெரி யார்செல்வி, எம்.கோபால், சத்திரியா, நதியா, பிரியா, எஸ்.தீபக், ரபீன் (பெரியார் திடல் அய்.ஓ.பி. கிளை -மேலாளர் மகன்), ஜெர்மீதாஸ், சுவேதா, சரவணன், பார்த்திபன், லெஷ் மணன், சவுந்தர்யா, தமிழ்ச் செல்வன் ப.க., விஜய்,கே.சரவண குமார், பசுபதி, ஹரினி, நிகிதா, ரபீக், ராஜ் (ஓட்டுநர்) ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் துளசி என்பவர் உரியை லேசாக தொட்டார். இவ்வுளவு பேர் பங்கேற்றும் யாருமே உரியை அடித்து உடைக்க முடிய வில்லையே என்ற ஏக்கத்துடன் காணப்பட்டவர்களிடம் இறுதி யாக யேசுவடிவான் என்ற இளை ஞர் உரியை அடித்து உடைத்தார். (ஓ என்ற வாழ்த்தொலியுடன் கர வொலி எழுப்பி பாராட்டு தெரிவிக்கப்பட்டது)
சைக்கிள் வீரவிளையாட்டு
காஞ்சி மாவட்டம் குரோம் பேட்டையைச் சேர்ந்த சைக்கிள் மணி சைக்கிள் ஓட்டியபடி வீர சாகசங்களை செய்து அனை வரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
சைக்கிள் இருக்கையில் அமர்ந்து ஓட்டிதான் நாம் பார்த் திருப்போம். ஆனால் சைக்கிள் மணி, சைக்கிளின் அனைத்து பகுதிகளிலும் உட்கார்ந்தும், படுத்தும்,  நின்றும், ஒரு இளை ஞரை இருக்கையில்  உட்கார வைத்தும், சைக்கிளின் முன் பகுதியில் உட்கார்ந்தும், ஒரு சிறுவனை தூக்கி கழுத்தில் உட்கார வைத்தும் மிகச்சிறப்பாக சைக்கிள் ஓட்டியபடி வீர சாக சங்களை செய்துகாட்டினார். பொதுமக்கள் அனைவரும் இந்த சாகசங்களை கண்டு வியந்து அவருக்கு நன்கொடைகளை வாரி வழங்கினர்.
ஸ்வீடன் பெண்மணி
இந்த சைக்கிள் சாகசங்களை ஸ்வீடனிலிருந்து  வந்திருந்த ஹாரிஃப் (ஆண்), பார்பரா (பெண்)  ஆகியோர் ஒளிப்படம் எடுத்த வண்ணம் மகிழ்ச்சியாக கண்டுகளித்தனர்-ஆச்சரியப் பட்டனர்.
கபாடி
தமிழனின் வீரவிளையாட் டான கபாடியும் பெரியார் திடலை மய்யங்கொண்டது. இதில் ஆனந்த், மதன், அம்பேத்கர், சரண்ராஜ், ஜோசப், பிரசாந்த், மணிகண்டன், ராம்கி, சுதாகர், சாமிநாதன், ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விளையாட் டையும் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
சிலம்பாட்டம்
சிலம்பாட்டத்தை கோடம் பாக்கத்தைச் சார்ந்த தமிழ்நாடன்-தாகீரா இணையர் ஆட்டத்தில் பங்கேற்று தொடங்கி வைத்து விளையாடினர். செல்வேந்திரன், பொழிச்சலூர் கண்ணன், அனகை ஆறுமுகம், பம்மல் கோபி, வேந்தன், சிவாஜி இதிலும் சைக் கிள் மணி இரட்டை சிலம்பை கையில் வைத்து விளையாடினர்.
தமிழர் தலைவர் பொங்கலூட்டினார்
அனைத்து நிகழ்வுகளையும் பெரியார் திடலில் தமிழர் தலைவர் பார்த்து மகிழ்ந்து பாராட்டினார்.  தந்தை பெரியார் சிலையையொட்டி கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 19ஆம் நூற்றாண்டு வரை பண்டைய தமிழ் எழுத்துகள்வளர்ச்சி அடைந்து வந்துள்ளதை கல் வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த தையும், ஐ-என்னும் எழுத்து 9ஆம் நூற்றாண்டில்தான் புழக் கத்தில் வந்திருக்கிறது என்று தெளிவாக பொறிக்கப்பட்டுள்ள தையும் தமிழர் பார்வையிட்டார்.
திடலின் மய்யத்தில் பொங்கலி டப்பட்ட பொங்கலை தமிழர் தலைவர் பெரியார் பிஞ்சுகளுக்கு ஊட்டினார்.  நூலகத்திற்கு எதி ராக அழகாக அமைக்கப் பட்டி ருந்த பனை மரத்தை தமிழர் தலைவர் பார்த்து மகிழ்ந்து பாராட்டினார். அதனைத் தொடர்ந்து தமிழர் தலைவர் முன் பம்மல் பாலு சிலம்பாட்டத் தையும், இரண்டு கைகளில் சிலம்பை சுற்றியபடி அறிவர சனும், சிவாஜி தீ சுவாலையை தன்வாயில் இருந்து வெளியேற் றியும் செய்து காண்பித்தனர்.  இந்த நிகழ்வுகளை கண்டுகளித்த தமி ழர் தலைவர் அவர்கள் மேடையை நோக்கி விரைந்தார்.
இரண்டாம் நாள் (மாட்டுப் பொங்கல்)
விழா மாட்சி
பெரியார் திடலின் நுழைவு வாயிலில் இருந்து இரண்டாம் நாள் நிகழ்ச்சி துவங்கியது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை பார்வை யாளர்கள் நான்கு பக்கமும் குவிந்திருந்த வண்ணம் பார்வை யிட்டு ரசித்தனர். தப்பாட்டம் கலைகட்டியது. அவர்களோடு பொதுமக்களோடு தோழர்கள் தமிழ்நாடன், திடல்-ஞான சேகரன், முருகேசன், தமிழ் குடிமமகன், ஆனந்த், மீனாட்சி, தமிழ்குமரடன், ராஜீ, கலையரசன், மணியம்மை, தாகீரா, செ.தமிழ் சாக்ரடீஸ், தாஸ் ஆகியோர் பத்து நிமிடத்திற்கு மேல் சூழ்ந்து நடன மாடினர்.
சிலம்பாட்டம்
கரைமாநகர் பரந்தாமன், தாஸ் ஆகியோர் சிலம்பாட்டத்தை ஆடினர்.
உறிகட்டி அடித்தல்
மோகனப்பிரியா, அரிகிருஷ் ணன், கோபால் ப.க., ரேவதி, தனுசெல்வி ஆகியோர் பங்கேற் றனர். இறுதியில் பிரபாகரன் உரியை அடித்து உடைத்தார்.
சைக்கிள் வீரவிளையாட்டு
சைக்கிள் மணியின் சைக்கிள் வீரவிளையாட்டு இரண்டாம் நாளும் கலைகட்டியது.
தீ உமிழ்தல்
தீயை வாயில் இருந்து கரைமா நகர் பரந்தாமன், தமிழ்நாடன் ஆகியோர் செய்து காண்பித்தனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...