Tuesday, January 17, 2012

திரைப்படம், கலைத்துறை சமுதாய முன்னேற்றத்திற்கு பயன்படும்படியாக இருக்க வேண்டும் இரண்டாம் நாள் பொங்கல் விழாவில் தமிழர் தலைவர் பேச்சு



தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில்  நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழாவின்போது தமிழ்க் கணினித் துறை  மா. ஆண்டோ பீட்டர், ஓவியர் அரஸ், திரைப்பட நடிகர், இயக்குநர் பொன்வண்ணன், திரைப்பட நடிகை சரண்யா, எழுத்தாளர் பாஸ்கர்சக்தி, திரைப்பட இயக்குநர் சற்குணம் ஆகியோருக்கு பெரியார் விருது வழங்கி தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பாராட்டினார். (15.1.2012 - சென்னை பெரியார் திடல்)
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில்  முனைவர் மு. இளங்கோவன், எழுத்தாளர் அஜயன் பாலா, தொழிலதிபர் அபிராமி ராமநாதன், (வாழ்நாள் சாதனையாளர் விருது), திரைப்பட இயக்குநர் சி.எஸ். அமுதன் ஆகியோருக்கு பெரியார் விருது வழங்கி தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பாராட்டினார். (16.1.2012- சென்னை பெரியார் திடல்).
சென்னை, ஜன.17- திரைப்படக் கலைத்துறை ஒரு சக்தி வாய்ந்த துறை. அந்தத் துறை தமிழர் களின் வாழ்வு முன்னேற் றத்திற்குப் பயன்பட வேண்டும் என்று திரா விடர். கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீர மணி அவர்கள் கூறி னார்.
தமிழர் தலைவர் உரை
சென்னை பெரியார் திடலில் இரண்டாம் நாளாக (16.1.2012) தை முதல் நாள் தமிழர் களின் புத்தாண்டு தொடக்கம், பொங்கல் இரண்டாம் நாள் விழா மிகச் சிறப்பாக எழுச்சி யோடு இன உணர்வுத் திருவிழாவாக நடை பெற்றது. நிகழ்ச்சியின் இறுதியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தமது சிறப் புரையில் குறிப்பிட்ட தாவது:
மிகுந்த எழுச்சியோ டும் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் தமிழ்ப் புத் தாண்டு பொங்கல் திரு நாளையொட்டி இன் றைக்கு இரண்டாம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பேசுவதைவிட - சிறப்பு செய்ததில்தான் மகிழ்ச்சி
நான் பேசுவதைவிட இங்கே வந்திருக்கின்ற சிறப்பு விருந்தினர் களுக்கு நாம் சிறப்பு செய்ததிலேதான் பெரு மகிழ்ச்சியை அடைகின் றோம்.
தமிழர்கள் திரைப் படத் துறையிலே வளர வேண்டும் என்பதுதான் நம்முடைய ஆசை. நாங்கள் அதிகமாக திரைப்படத்தைப் பார்க் காதவர்கள். எங்களுக் கும், திரைப்படத் துறைக் கும் பெரும்பாலும் சம் பந்தம் இல்லை என்றே சொல்லலாம்.
பார்த்தால் பசி தீரும்
பார்த்தால் பசி தீரும் என்று ஒரு திரைப் படம். காமராசர் அவர் கள்தான் மிகச் சிறப் பான ஒரு கேள்வியைக் கேட்டார். பார்த்தால் பசி தீரும் என்று அவர் கள் படம்  எடுத்திருக் கிறார்கள்.
படத்தை எடுத்தவனு டைய பசி தீருமா? படத்தை காசு கொடுத் துப் பார்க்கின்ற ஏழை மக்களாகிய உங்களு டைய பசி தீருமா? என்று கேட்டார்.
அறிவுப் பசியை தூண்டக் கூடிய பணி
அறிவுப் பசியைத் தூண்டக் கூடிய பணி தந்தை பெரியார் அவர் களுடைய இயக்கத்தைச் சேர்ந்த எங்களுடைய பணி.
இங்கே பறை அடித்து அவர்களுடைய திற மையைக்  காட்டினார் கள் நம்முடைய சகோ தரர்கள். ஆட்டம் ஆடிக் கொண்டு, பறை இசையை அடித்து அவர் களுடைய திறமையைக் காட்டினார்களே  இவ் வளவு திறமை உள்ள மக்களைப் பார்த்து கீழ் ஜாதிக்காரர்கள். இவர் கள் எல்லாம் காலிலே பிறந்தவர்கள் என்று உயர் ஜாதிக்காரர்கள் எழுதி வைத்தார்கள்.
தந்தை பெரியார் பிறந்த மண் இந்த மண். புரட்சியினுடைய சின் னமாக விளங்கக்கூடிய மண் இந்த மண்.
பெரியாருடைய தொண்டு இன்றைக்கு விரிந்து சிறப்படைந்தி ருக்கிறது.
உலக மக்கள் பெரி யார் என்ற சுவாசக் காற்றை அவர்களை அறிந்தோ அறியாமலோ சுவாசித்துக் கொண்டி ருக்கிறார்கள்.
மனிதனுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் பொழுது தான் சுவாசக் காற்றினுடைய அருமை தெரியும்.
தந்தை பெரியார் என்ற மாமனிதரால், அவருடைய தொண் டால் இந்த சமுதாயம் இன்றைக்குப் பூத்துக் குலுங்கிக் காய்த்து கனிந்திருக்கிறது.
காய், கனிகளைப் பாதுகாக்கின்ற தோட் டக்காரன் நாங்கள். உங்களுடைய புகழுக்கு வேலியாக இருக்கக் கூடியவர்கள் நாங்கள்.   இன்னும் சுயமரியாதை தேவை  தமிழ்நாட்டு மக்களுக்கும் அதை நீங்கள் கலைத் துறை மூலம் ஊட்ட வேண்டும் என்று சொன்னார்.
அபிராமி இராம நாதன் அவர்கள் நவீன தொழில் நுட்பத்தை, உலகளாவிய அளவில் உள்ள தொழில் நுட்பத்தை கையாளக் கூடியவர். அவருடைய திரையரங்குகளிலே அவர் அமைத்துக் காட் டியிருக்கின்றார்.
தந்தை பெரியார் அவர்களே ஒரு பொறி யாளர். அவர் பொறி யாளர் படித்த படிப்பை படித்தவரல்லர். அவர் மக்களைப் படித்தவர்.
பெரியாரின் அறிவுக் கூர்மை
தந்தை பெரியார் அவர்கள் ஒரு கட்ட டத்தைப் பார்த்தவுட னேயே அதனுடைய மதிப்பு இவ்வளவுதான் என்று தெளிவாக மதிப் பிட்டுச் சொல்லி விடு வார்.
அதேபோல பெரி யார் ஒரு  சமுதாயப் பொறியாளர். சமுதாயத் தின் நிலையை நன்கு உணர்ந்தவர்.
அதே போல முனை வர் மு. இளங்கோவன் அவர்களுடைய சாதனைகளைப் பற்றிச் சொன்னார்கள். அவர் ஒரு சமுதாயச் செம்மல். நம்மவர்களுக்கு அறிவு ஆற்றல் உண்டு என்ப தற்கு எடுத்துக்காட் டாகத் திகழக் கூடியவர் கள். அவர் கணினியைப் பற்றி தமிழக மாண வர்களுக்குப் பாடமாகச் சொல்லிக் கொடுத்து வருகின்றார்.
தமிழிசை வளர்த்த ஆதி மும்மூர்த்திகள்
தமிழிசையை வளர்த் தவர்கள் ஆதி மும்மூர்த் திகள் முத்துத் தாண் டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசலக் கவிராயர் இவர்கள் மூவரும் தான் நூறு ஆண்டுகளுக்கு முன் னாலே இசையை வளர்த் தவர்கள். இவர்களுக்குப் பிறகு வந்தவர்கள் தியா கய்யர், முத்துசாமி தீட்சி தர், சியாமா சாஸ்திரி, இவர்கள் மூவர்தான் இசையை வளர்ந்தவர் கள் என்று விளம்பரப் படுத்தி விட்டார்கள்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் இருந்தவர்கள்
இவர்களுக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன் னாலே இசையை வளர்த் தவர்கள் பெயர் மறைக் கப்பட்டன. நமது கலை ஞர் அவர்களுடைய ஆட்சியில்தான் முத்துத் தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகிய மூவ ருக்கும் சீர்காழியில் நினைவு மணி மண்ட பம் அமைக்கப்படும் என்று அறிவித்து அதன் பணியைத் தொடங் கினார். பெரியார் திட லில் இந்த மூன்று தமி ழர்களுடைய படங் களைத் தேடிக் கண்டு பிடித்துத் திறந்தோம். பெரியார் திடல் என்ன மாறி விட்டதா? என்று கேட்டார்கள்.
ட்டை போட்டவர் களுக்கும், கழுத்திலே கொட்டை கட்டியவர் களுக்கும் பாராட்டா என்று கேட்டார்கள்.
பட்டை போட்டு இருக்கலாம். ஆனாலும் தமிழிசையை வளர்த்த தமிழர்கள் இம்மூவரும்தான்.
எது நம்மைப் பிரிக்கிறது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியமில்லை எது நம்மை இணைக்கிறது என்பதைப் பாருங்கள். திரைப்படத்துறையில் காலைத் தொட்டுக் கும்பிடுகின்ற கலாச்சாரம் ஒழிய வேண்டும்.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஒன்றைச் சொல்லுவார்கள். தமிழன் நேற்று விழுந்த அதே இடத்திலேயே தடுக்கி விழுகிறானே, விழுகிறவன் புதிய இடத்திலாவது விழக் கூடாதா என்று கேட்பார்கள்.
திரைப்படத் துறை சக்தி வாய்ந்த கருவி
திரைப்படத் துறை ஒரு சக்தி வாய்ந்த கருவி. அந்த கருவி பயனுள்ளதாக அமைய வேண்டும். தமிழர்களுடைய வாழ்வுக்கு, முன்னேற்றத்திற்கு, ஒழுக்கத்திற்குப் பயன்பட வேண்டும்.
தந்தை பெரியாருக்கு ஒரு முறை எல்லோரும் பாரட்டு விழா நடத்தினார்கள். அந்தப் பாராட்டு விழாவிலே தந்தை பெரியார் பேசும் பொழுது சொன்னார். எனக்கு இவ்வளவு பாராட்டா? ஒரு வேளை நாம் நமது கொள்கையில் இருந்து வழுவி விட்டோமோ? அல்லது சறுக்கி விட்டோமோ என்று எண்ணிப் பார்த்தேன்.
இல்லை இல்லை மக்களின் தரம் உயர்ந்திருக்கிறது. அவர்கள் சிந்திக்கத் தலைப்பட்டு விட்டார்கள் என்று நினைத்தேன். அதனால் பாராட்டுகிறார்கள் என்று உணர்ந்தேன் என்று சொன்னார்.
காலத்திற்கு ஏற்ப மாறுதல்
அதேபோல மொழி என்றால் அது மூத்த மொழி என்பதால் பெருமை அல்ல.பெரியார் சொன்னார் மொழி என்பது ஒரு போர்க் கருவி. அது எப்படி மக்களுக்குப் பயன்படுகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
போர்க்கருவிகள் ஏ.கே. 47 என்பது போல காலத்திற்கு ஏற்ப எப்படி அமைகிறதோ, அது போல மொழி என்பதும் மாறவேண்டும் என்று சொன்னார்.
70 ஆண்டுகளுக்கு முன்னாலே சாதாரணமாக பேசும் பொழுது பெரியார் சொன்னார். அது இனிவரும் உலகம் என்ற நூலில் வெளிவந் திருக்கிறது. அன்றைக்கே செல்பேசி வரும், சோதனைக் குழாய்குழந்தை வரும் என்பதைச் சொன்னார். தந்தை பெரியார் சிறந்த தொண்டறத்தை செய்து வருகிறார்.
பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின்
எழுத்தாளர் அஜயன்பாலா சொன்னது போல் நாளைய வரலாறு பெரியாருக்கு முன், பெரியா ருக்குப் பின் என்றுதான் எழுதப்படப்போகிறது. ஒரு முறை பேரறிஞர் அண்ணா அவர்கள் மிகச் சிறப்பாக பெரியாரைப் பற்றி சொன்னார். தமிழகத்தில் உள்ள தலைவர்கள் எல்லாம் தந்தை பெரியாரின் புகழின் சிதறல்கள் என்று சொன்னார். - இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
முன்னதாக இரண்டாம் நாள் பொங்கல் விழா (மாட்டுப் பொங்கல்) 16.1.2012 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் ராதா மன்றத்தில் தொடங்கியது. திருத்தணி பன்னீர் செல்வம் இன்னிசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
மாலை 6 மணிக்கு பொய்க்கால் குதிரை ஆட்டம், பறை ஆட்டத்துடன், நாயனம் வாசிப்பு, பெண்களின் கும்மி கோலாட்டம், கருங்குயில் கணேஷின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. சிறந்த குறும்படத்திற்கு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பரிசு வழங்கினார். தி.தொ. கழக பேரவை தலைவர் திண்டுக்கல் ஆ. நாகலிங்கம் மகன் திண்டுக்கல் சரவணன், ரோபோ சங்கர், தஞ்சை ராகவன், குட்டி அரவிந்த், திருச்சி சரவண குமார், திருவொற்றியூர் தினேஷ், அரவிந்த் ஆகியோரின் பல குரல் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்சுவை நிகழ்ச்சிகளை நடத்திய இக்கலைஞர் களுக்கும், பன்னீர்செல்வம், சைக்கிள் மணி ஆகியோருக்கும் தமிழர் தலைவர் கி. வீரமணி  அவர்கள் ஆடை அணிவித்துப் பாராட்டினார்.
திரைப்படக் கலைஞர்களின் சிரிக்க, சிந்திக்க வைத்த பல்சுவை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. வந்திருந்த மக்கள்  வயிறு குலுங்க குலங்க சிரித்து மகிழ்ந்தனர். அடுத்து சாதனையா ளர்களுக்குப் பாராட்டு விழா தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் கழக பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்றுப் பேசினார்.
விருதுகள் வழங்கல்
முன்னதாக தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் திரைப்பட இயக்குநர் சி.எஸ்.அமுதன், எழுத்தாளர் அஜயன்பாலா, முனைவர் மு.இளங்கோவன், பிரபல திரையரங்க உரிமையாளர் அபிராமி இராமநாதன் ஆகியோ ருக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியார் வாழ்நாள் சாதனை யாளர் விருதுகளை வழங்கி, ஆடை அணிவித்து, சான்றிதழ் மற்றும் பெரியார் நூல்களை வழங்கி  பெருமைப்படுத்தினார். விடுதலையின் வேர்கள், விருதினை திருமகள் இறையனுக்கு ஆடை அணிவித்து வழங்கினார் தமிழர் தலைவர்.
சி.எஸ்.அமுதன்
திரைப்பட இயக்குநர் சி.எஸ். அமுதன் தனது ஏற்புரையில் தந்தை பெரியார் விருது வழங்கிய பிறகு இனிமேல் எந்த விருது வாங்கினாலும் இதற்கு ஈடாகாது. எங்கள் குடும்பத்தில் பெரியார் கருத்துகளை அறிந்திருக்கிறோம். தந்தை பெரியார் சொல்லிக் கொடுத்த, சுயமரியாதையை சினிமாக் காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏதோ சினிமா படம் எடுத்தால், ஒரு  சண்டை இருக்க வேண்டும். இரண்டு பாட்டுகள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சினிமாக்காரர்களுக்கு மேலும், மேலும் சுயமரியாதை வளரும். பெரியார் விருது வழங்கியமைக்காக நானும் எனது குடும் பமும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.
அஜயன் பாலா
எழுத்தாளர் அஜயன் பாலா தனது ஏற்புரையில் நான் இந்த இடத்தில் நிற்பதற்கே தந்தை பெரியார்தான் காரணம். நான் பெரியார் கருத்துகளைப் படித்தேன். பெரியாருக்கு முன் இருந்த நிலையையும், பெரியாருக்குப் பின் இருந்த நிலைகளையும் படித்துத் தெரிந்து எழுதத் தொடங் கினேன். எனது தாயார் மற்றும் குடும்பத்தினர்  வந்திருக்கிறார்கள் என்றார். ஆனந்தவிகடனில் பெரியார் பற்றி நான் எழுதியதற்குப் பிறகே எனக்கு அங்கீகாரம் கிடைத்தது என்றார்.
முனைவர் மு.இளங்கோவன்
முனைவர் மு.இளங்கோவன் தனது ஏற்புரை யில் தந்தை பெரியார் திடலில், தாய் வீட்டில் கிடைத்த அங்கீகாரமாக பெரியார் விருது பட்டம் தந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். குடியரசுத் தலைவர் மாளிகையில் செம்மொழிக்காக விருது கொடுத்தார்கள். அந்த விருதை விட நமது ஆசிரியர் அவர்களிடம் இருந்து பெறுகின்ற விருதைப் பெருமையாகக் கருதுகின்றேன்.
அய்யா வழியில் வந்ததால்தான் மாணவர் களுக்கு எந்தப் பாடத்தை வைக்க வேண்டும் என்ற சிந்தனை எனக்குக் கிடைத்தது.  நான் சமயம் சார்ந்த இடத்தில் பணியாற்றினாலும் பல நூல் களை சமுதாயத்திற்குப் பயன்படும்படியான நூல்களை எழுதியிருக்கிறேன். நான் படிக்கிற காலத்திலேயே திராவிடர் இயக்கத்திற்கு உதவியாக இருந்திருக்கிறேன். பொன்னி போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறேன். மாணவர் களுக்குத் தமிழ்க் கணினியையும் கற்றுத் தருகிறேன் என்றார்.
என் சோதிடத்தில் எனக்குப் படிப்பு வராது என்று சென்னதால் என் அப்பா என் படிப்பை நிறுத்தி வயலில் ஏர் உழ வைத்தார் மூன்று ஆண்டுகள் அந்த வேலையைச் செய்தேன். எனது தமிழாசிரியர் சுந்தரேசனார் பெரியார் பற்றாளர். அவர் முயற்சியால், அறிவுரையால் நான் மீண்டும் படிக்கச் சென்றேன். இன்று உலக அளவுக்குப் பாடம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வளர்ந் துள்ளேன் என்றால். காரணம் தந்தை பெரியார் கொள்கைதான் என்றார்.
அபிராமி இராமநாதன்
பிரபல திரைப்பட உரிமையாளர் அபிராமி ராமநாதன் தன்னுடைய உரையிலே குறிப்பிட்ட தாவது:
நான் எத்தனையோ விருதுகளை வாங்கியிருக்கிறேன். பெரியார் திடலில் அதுவும் தமிழ்ப்புத்தாண்டை ஒட்டி பொங்கல் விழாவில் வாங்கிய விருதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
இன்றைக்கு நான் பெற்றிருக்கின்ற விருதுக்குச் சமமான விருது எதுவும் கிடையாது.
உலகத்திலேயே சிறந்தவன் தமிழன், தமிழ் மொழி.  ஆனால் தந்தை பெரியார் வருங்காலத்தில் செல்ஃபோன் வரப்போகிறது என்பதை எப்படிக் கண்டுபிடித்துப் பேசினார்?
அதே போல சோதனைக் குழாய் குழந்தை பிறக்கும் என்பதை எப்படி சிந்தித்தார்? பேசியிருக்கிறார்? என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது நமக்கு வியப்பாக இருக்கிறது.
செய்யும் தொழிலே தெய்வம் என்று கருதக் கூடியவன் நான். அப்படிப்பட்ட எனக்கு பெரியார் திடலில் இன்று விருது கொடுத்திருக்கிறார்கள்.
உங்களை மூன்று மணிநேரம் கவலையை மறந்து சிரிக்க வைக்கும் துறைதான் கலைத்துறை. இதில் கவலை என்பதில் வ வை எடுத்துவிட்டால்,கலை. அவ்வளவு கலைஞர்களையும் அழைத்து இங்கே உங்களை சிரிக்க வைத்து உற்சாகமூட்டியிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் வாயிலாகப் பாராட்டியிருக்கின் றார்கள்.
இப்படி ஒரு அழகான அரங்கம், அதுவும் எம்.ஆர்.ராதா பெயரில் அமைந்த அரங்கம் சென்னையில் இருப்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது. அதை இன்றுதான் நான் பார்த்தேன்.
அதே போல தந்தை பெரியாருடைய அருங்காட்சியகம் சென்னை பெரியார் திடலில்தான் இருக்கிறது. எத்தனை பேர் நீங்கள் பார்த்திருப்பீர்கள். கை தூக்குங்கள்.
இனிமேல் நீங்கள் பார்க்க வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு பத்து பேரை அழைத்து வந்து இவற்றை எல்லாம் நீங்கள் காட்ட வேண்டும். இந்த விருது வாங்குவதில் உள்ளபடியே நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றார். இறுதியாக திராவிடர் கழக தலைவர் தமிழர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
கழக தலைமை நிலைய செயலாளர் வீ.அன்புராஜ் ஒருங்கிணைத்தார்.
பிரின்ஸ் என்னாரெசு பெரியார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...