Thursday, January 5, 2012

மதச் சடங்குகளும் - மொழிகளும்


வேத காலந்தொட்டே (கி.மு.1500 - கி.மு.1000) ஒவ்வொரு மதமும் ஒரு மொழியைச் சார்ந்தே இருந்து வந்துள்ளன. இந்த நிலைப்பாடு இந்திய மதங்களான சைவம், வைணவம், சமணம், புத்தம், சீக்கிய மதம் ஆகியவற் றிற்கும் பொருந்தும். உதாரணம்: புத்தன் (கோசலன் என்று புத்தர் தன்னை அழைத்துக் கொண்டார்). பாலி மொழியை தனது மதக் கொள்கை களான  - வேதங்களையும், யாகங் களையும் மறுத்தல், சொர்க்கம், நரகம், மதச் சடங்குகள் போன்ற மூடநம் பிக்கைகளை எதிர்த்தல் -  ஆகியவற்றை பரப்ப பெரிதும் பயன்படுத்தினார். இத்தகைய பாலிமொழி கோசல நாடு (அரபிக் கடல் முதல் வங்கக் கடல் வரை, விந்திய மலைக்கு வடக்கே, இந்துஸ்தான் என்று அழைக்கப்பட்ட பகுதி) மக்களால் ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது தவிர ஓராயிரம் ஆண்டுகளுக்கு, கிழக்கு ஆசிய நாடுகளான, லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து, பர்மா, சிலோன், வியட்நாம் ஆகியவற்றில் ஆட்சிமொழியாக இருந்தது. இன்றுகூட பாலிமொழி, தேவநாகரி வடிவத்தில் அய்.ஏ.எஸ். தேர்வு எழுத மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு இணையான பாலிமொழி இன்றும் நிருவாகத் தேர்வு மொழியாகவும், தற்கால இந்திய மொழிகளில் கலந்து, பல மாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது. பாலிமொழிச் சொற்களை சமஸ்கிருத மொழியாக தவறாக கருதுபவர்களும் இருக்கிறார்கள். மாமன்னன் அசோகன் காலத்தில் ஆட்சிமொழியாக இருந்தது. இத்தகைய மாமன்னனின் சிறப்புக் காரணமாக, நமது தேசியக் கொடியில் அசோகச் சக்கரமாக இடம் பெற்றிருப்பது, பாலிமொழிக்கும் புத்த மதத்திற்கும் இந்தியர்கள்/திராவிடர்கள் செய்யும் நன்றிக் கடனாகும்.
2. தமிழால் வளர்ந்த சைவமும் - வைணவமும்:
63 சைவ நாயன்மார்களும், 12 ஆழ் வார்களும் பல தமிழ்க் கவிதைகளால் சைவ, வைணவ மதங்களுக்கு உயிரூட்டி, தமிழிசையால் பாடி மகிழ்ந்தனர். இசைக்கு ஒரு பகுதியைத் தந்து உலகப் புகழ் பெற்ற ஒரே மொழி தமிழ்மொழி. இந்த தமிழிசையால், மூடிய கதவுகள் திறந்தன; பாம்பு கடித்த சிறுவனுக்கு உயிரூட்டினர்; ஆறுகளை பிளந்தனர். இவ்வாறு சைவ மதமும், வைணவமும் வளர்ந்தன. ஆரியர்களைப் போல தமிழ்க் கவிதைகளால், கடவுளின் பெயரால் மன்னர்களை ஆட்டுவித் தனர்; மக்களை மகிழ்வித்தனர்; இறுதியில் தேவாரத்திற்கு நேர்ந்த கதி என்ன? இறைவன் மகிழ்ந்தான்; ஆரியர்கள் மகிழ்ந்தனரா? தேவாரம் ஆலயங்களில் கருவறை மொழியாக, அர்ச்சனை பாடல்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டதா? அதுவும் 8000 சமணர்களை கழுவில் ஏற்றி ஆரியர் களை மகிழ்வித்த பின்னர் இந்த தேவாரத் திருமுறைகள் கர்ப்பக் கிருகத்தில் நுழைய முடியவில்லை என்பது கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொன்ன வர்ணாசிரம தர்மத்துக்கு 21ஆம் நூற்றாண்டில் கிடைத்த வெற்றி. அண்ணா, பெரியார் கொள்கைகளை மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண் டால்தான் உண்மையான மாற்றங்கள் இந்துஸ்தானிலும், திராவிடர்கள் வாழும் தக்காணத்திலும் ஏற்படும். இராஜபக்சேவைவிட கொடியவன் திருஞானசம்பந்தன், ஜாலியன் வாலாபாக் படுகொலையைவிட பன்மடங்கு கொடூரமானது இது. சைவர்கள் வரலாற்றில் ஒரு கறை; ஞானப்பால் தந்ததாக சொல்லப்படும் பார்வதிக்கு இழுக்கு.
3. பூணூலை வெறுத்த கன்னடர் பசவண்ணா:
கன்னட ஆரியர் பசவண்ணா 12-ஆம் நூற்றாண்டில், விஜயபுரா என்றழைக் கப்படும் பீஜப்பூரில் மகா அக்கிர ஹாரத்தில் வைதீக பிராமணர் குடும்பத்தில் பிறந்தார். இவர் சிறு வயதில் உபநயனம் செய்து கொள்ள, பூணூல் அணிய மறுத்தார். பின்னர் பூணூல் அணிந்தால்தான் வேதம் சொல்லித் தருவார்கள் என்று உபநயனம் செய்து கொண்டார். வேதங் களைக் கற்று, பின்னர் பூணூலைக் கழற்றினார். அவர் கூடலு சங்கம் என்ற பகுதியில் (மலப்பிரபா ஆறும், கிருஷ்ணா நதியும் சேரும் இடம்) உள்ள கடவுள்சங்கமேஸ்வரரை ஆராதித்தார். பல கன்னட வசன கவிதைகளை, (சுமார் 1000) சமஸ்கிருதம் கலப்பில்லாமல் எழுதினார். அவர் கன்னட மொழி மறுமலர்ச்சிக்கு உதவினார். அவர் போதித்த கொள்கைகள்; (1) பெண்கள் முக்தி அடைவதை இந்து மதம் மறுப்பதைக் கண்டித்தார்; அர்த்தம் தெரியாமல் சமஸ்கிருத மந்திரங்கள் அர்ச்சிப்பதைக் கண்டித்தார்; பல சமணர்களை சைவ மதத்திற்கு மாற்றினார். பின் தங்கியவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் சமமாக மதிக்கப்படுவதை செயல்படுத்தினார்.
4. சடங்குகள்:
ஒரு இந்துவின் அன்றாட வாழ்க் கையில் பல சடங்குகளை செய்ய வேண்டியுள்ளது. இந்த சடங்குகளைக் கண்டித்து விவேகானந்தர் 1896இல் லண்டனில் நிகழ்த்திய சொற்பொழி வில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார். பழைய மூடநம்பிக்கைகள், சடங்குத் தொகுதிகளாக உருவெடுத்து, அதி கரித்துக் கொண்டே போய், கடைசியில் இந்துவின் வாழ்க்கையைக் கிட்டத்தட்ட அழிக்கும் அளவிற்குப் போய்விட்டது. அவை நம்வாழ்க்கையில் எல்லாப் பகுதிகளுக்கும் புகுந்து நம்மைப் பிறப்பிலிருந்தே அடிமைகள் ஆக்கி விட்டன. சடங்குகளின் மோகம், சில நேரங்களில் குறிப்பிட்ட ஆடை அணிவது, குறிப்பிட்ட வழியில் உண்பது, பகட்டான பூஜைகள் போன்ற கேலிக்கூத்துக்களும் சமயத்தின் புறப்பகுதி மட்டும். இங்கு புலன் நுகர்ச்சியோடு திருப்தி அடைந்து விடுகிறீர்கள். இது நம்மிடம் உள்ள குறைபாடு ஆன்மீக விஷயங்களையும் புலன்களைக் கொண்டுதான் அளக்கி றோம், சடங்குகள் எல்லாம் செய்யப் படுவது ஸ்தூல சரீரம் அல்லது புலன் இன்பத்திற்கு மட்டும்தான் என்று சுவாமி விவேகானந்தர் கூறினாலும் நாம் இன்னும் தீபாவளி, தசரா போன்ற திருவிழாக்களைக் கொண்டாடுவதை நிறுத்தாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இத்தகைய சடங்குகளை செய்வதற்கான தகுதியைப் பெற பார்ப்பனர்கள் வேதத் தைக் கற்றலாகும். இந்த வேதத்தைக் கற்க உபநயனம் செய்து கொள்வது முக்கியமான சடங்கு ஆகும்.
5. பூணூலின் வரலாறு:
கன்னடர் பசவண்ணாவினால் கழற்றப்பட்ட பூணூலின் முக்கியத் துவத்தைப் பற்றி கீழே விவரிக்கப்பட் டுள்ளது.
1) உபநயனம் என்ற சமஸ்காரம்/சடங்கு வேதங்களைக் கற்பதற்கு வேதங்களில் சொல்லப்பட்ட விதி களின்படி செய்யப்படுவதாகும்.
2) சிறுவர்களுக்கு மட்டும் செய்யப் படுவது..
6. நோக்கம்
ஆரியர், சத்ரியர், வைசியர்கள், வேதம் பயில பிரம்மச்சரிய விரதம் அனுசரித்து சுமார் 12 ஆண்டுகளில் குருகுல வாசம் முடித்து, தன் ஆயுளை 100 ஆண்டுகள் வரை வளர்த்துக் கொள்ள கீழ்க்கண்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ள 7 வயதில் பிராமணர்களும்,
11 வயதில் சத்ரியர்களும் செய்து கொள்ளும் சமஸ்காரம் சடங்கு ஆகும்.
1) மாணவனை இரட்சிக்க வீரியத்தில் சிறந்த இந்திரனை வேண்டுதல்.
2) புத்திக் கூர்மைக்கும், ஆயுளுக்கும் எதனையும் ஜீரணம் செய்ய அக்னியை வேண்டுதல்.
3) புத்திரர்களை பெற்று தந்தையாகி 100 வயதுக்கு முன் இறக்காமல் இருக்க தேவர்களை வேண்டுதல்.
4) ஆதித்யர்களும் வசுக்களும் பலத்தைக் கொடுக்க வேண்டுதல்.
5) புத்தியைக் கொடுக்க, அங்கிரஸர், சப்தரிஷிகள், பிரஜாபதியை வேண்டுதல்
6) அக்கினி தேவனை வேண்டுதல்.- அக்கினி தேவனே! நீர் எல்லாம் அறிந்தவர். வருண தேவனுக்கு எங்களிடம் கோபம் இருந்தால் அதை போக்க வேண்டும். நீர் எங்கள் மேலுள்ள பகைகளையும் எங்களிட மிருந்து விலக்கி அருளல் வேண்டும்.
7) அக்கினி தேவனே! நீர் பாசத்தை வீசும் வருணனையும் சாந்தப்படுத்தி எங்களைக் காக்க வேண்டும்.
7. பூணூலும் வருணமும்
பூணூல் அணிவித்தல் ஒவ்வொரு வருணத்தினருக்கும் ஏற்றவாறு வரை யறுக்கப்பட்டுள்ளது. அவை கீழ் வருமாறு:
வருணம்    எதனால்  செய்யப்பட் டது    சடங்கின் பெயர் தண்டகம்
1. பிராமணன்    பருத்திப் பஞ்சு    சர்மா    புரசை, வில்வம்.
2. சத்ரியன் சணல் வர்மா    ஆல், கருங்காலி.
3. வைசியன்    ஆட்டுரோமம் குப்தா    அரசு.
(சைவர்கள் - பூணூலில் ருத்ர முடிச்சு வைணவர்கள் - பூணூலில் பிரம்ம முடிச்சு)
8. உபநயனத்துக்குப் பின் பிரம்மச்சரியம்
பிரம்மச்சாரி கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் பின்வருமாறு (1) உடல் மேல் பகுதியில் துண்டு போடக் கூடாது. 2) பூணூலின்மீது மான்தோலைத் தவிர வேறெதையும் அணியக் கூடாது. 3) பகவதி பிட்சாம் தேஹி என்று கூறிப் பிச்சை எடுத்துச் சாப்பிட வேண்டும்.
4) தேன், மாமிசம், பழைய உணவு சாப்பிடக் கூடாது. 5) செருப்பு குடை ஆகியவற்றை உபயோகித்தல் கூடாது. 6) நாட்டியம், பாட்டு, சூதாட்டம் இவற்றில் ஈடுபடக் கூடாது. 7) பகலில் தூங்கக் கூடாது. 8) குருவுக்குப் பணி விடை செய்ய வேண்டும். 8) தினமும் சந்தியா வந்தனம் செய்ய வேண்டும்.
9. பசவண்ணா எதிர்த்த மந்திரம்
இறுதியில் சிறுவனுக்கு பிரம்மோ பதேசம் செய்யப்படுகின்றது. அப்போது சில மந்திரங்கள் சொல்லப்படுகின்றது. இதனை எதிர்த்து கன்னட பசவண்ணா பூணூலை அகற்றினார். ராமானுஜர் மனைவியைப் பிரிந்தார். அந்த மந்திரம் கீழ்வருமாறு: இந்த ஸ்வர்ண தட் சிணையை ஏற்று, இன்ன நட்சத் திரத்தில் பிறந்த இன்ன ராசியில் பிறந்த வனும், இன்ன இன்ன சர்மா என்ற பெயருடையவனுமான இந்தக் குமா ரனுக்குப் பிறந்தது முதல் இந்த வினாடி வரை பிற ஜாதித் தாதியிடமும், செவிலித் தாயிடமும் பாலுண்டதாலும், தகுதியற்ற கூட்டத்தில் போஜனத்தா லும், உச்சிஷ்ட போஜனத்தாலும், தொடத்தகாதவற்றை தொட்டதாலும், அந்தந்த காலத்திற்குரிய, பரிசுத்த மின்மையாலும் ஏற்பட்ட எல்லா பாவங்களுக்கும், பிராயச்சித்தம் வாயிலாக காயத்ரி ஸ்வீகாரத்திற்கும், எனக்கு காயத்ரியை உபதேசிப்பதற்கும் யோக்கியதை சித்திக்க அனுக்கிரகம் செய்தருளல் வேண்டும். (பக்கம் 39, நூல் உபநயனம், ராமகிருஷ்ணா பதிப்பகம்)
குறிப்பு: மாமிசம் சாப்பிடுவது கூடாது அல்லது பாவம் என்று கூறவில்லை.
10. முடிவுரை:
1. உபநயனம் செய்யும் முன்பு வரை தாழ்ந்த ஜாதியினரிடம் உணவு உண்டு பிழைத்த சிறுவன் உபநயனத்தின்போது அதனை பாவம் என்று தன்னைப் படைத்த இறைவனிடம் மன்னிப்புக் கேட்பது எந்த வகையிலும் நியாயமாக தெரியவில்லை.
2. 12 ஆண்டுகள் குருகுல வாசத்தில் பிரம்மச்சர்ய விரதத்தைக் கடைப்பிடித்து வேதங்களைக் கற்பது தற்காலத்தில் இயலாத காரியம். அவ்வாறு செய்யத் தவறியவர்களுக்கு காயத்ரி மந்திரம் போன்ற எந்த மந்திரமும் தெரிவிக்கப்படவில்லை.
3. எந்தவித சடங்குகள் செய்யாமலும், பூணூல் அணியாமலும், வேதங்கள் கற்காமலும், பெண்கள் அனைவரும் சூத்திரர்களும், சுமார் 97 சதவிகித மக்கள் நீண்ட ஆயுளுடனும், புத்திக் கூர்மையுடனும் விளங்குவதால், இந்த உபநயனத்தாலும், அரைகுறை பிரம்மச் சர்யத்தாலும் மற்ற மந்திரங்களாலும் என்ன பயன்?
4. உபநயனம் முடிந்த பின் காயத்ரி மந்திர ஜபமும், சந்தியாவந்தனமும் தினமும் செய்தல் வேண்டும். இத்தகைய வாழ்க்கையில் மீண்டும் தாழ்ந்த சாதியினர் வீட்டில் சாப்பிட்டால், அந்த பாவத்தைப் போக்க எந்த கடவுளிடம் பரிகாரம் தேடுவது என்று சாத்திரங்கள் தெரிவிக்கவில்லை.
5. உபநயன சடங்கில் சிவனுக்கும், விஷ்ணுவிற்கும் முக்கியத்துவம் தரப் படவில்லை. என்பது தெரிய வருகிறது.
6. மாமிசம் சாப்பிடுவது பிரம்மச் சரியத்திற்குப்பின் தடை செய்யப் படவில்லை.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...