கிராம நகர பேதங்கள் ஒழிப்பு: தந்தை பெரியார் கருத்தினை ஒரு நூலின் வழியாக உலகுக்குத் தெரிவித்துள்ள ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தந்தை பெரியாரை உலகமயம் ஆக்குவோம்! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
கிராம - நகர பேதம் ஒழிய வேண்டும்; நகரங்களில் உள்ள அத்துனை வசதிகளும் கிராமங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் 1944இல் கூறிய கருத்தின் அடிப்படையில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் புரா திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் எழுதிய நூல் ஒன்றில் இந்தப் புரா திட்டம் குறித்து சிறப்பாகக் குறிப்பிட் டுள்ளார்.
இதனை எடுத்துக்காட்டி பெரியார் உலகமயமாகி வருவதை சுட்டிக்காட்டி யுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:
கழகக் குடும்பத்தவர்களே, பகுத்தறிவாளர் களே, திராவிடர் தமிழ் இன உணர்வாளர்களான தோழர்களே, தோழியர்களே,
உங்கள் அனைவருக்கும் எமது அன்பும் பாசமும் கலந்த (ஆங்கிலப்) புத்தாண்டு வாழ்த் துக்கள்.
நமது பண்பாட்டு அடிப்படையில், அறுவடைத் திருநாளாம் பொங்கல் விழாவும் துவக்கமும்தான் நமது திராவிடர் திருநாள்; தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம். நமது இன, மொழி, பகுத்தறிவுப் பண்பாட்டின் எதிரிகள் தான் இதனை ஏற்க மறுத்து, சித்திரைதான் என்றுகூறி, திராவிடர் இனத்தை நிரந்தர நித்திரையில் - நீள் துயில் கலையாமல் கிடக்கவே மீண்டும் பரம்பரை யுத்தத்தில் திராவிடர்களின் ஏமாளித் தனத்தின் காரணமாக பெற்ற தற்காலிக வெற்றியால் பழைமைப் பாசியே - ஆபாச அறுபதாண்டு கதையே மீண்டும் அரங்கேற்றப்படட்டும் என்று அறைகூவல் விடுக்கிறது.
தமிழர் முகமூடியர்கள் தங்கள் வாய்களையே தாங் களே தைத்துக் கொண்டு, தைத் திங்களில் விழா கொண் டாடி வீரத் திருமகன்களாய் வீதி உலா வர முடியாதவர் களான வேதனையும் வெட் கமும் நம்மை விலா நோகச் சிரிக்க வைக்கிறது!
சாண் ஏறி முழம் சறுக்கும் நிலை!
என்ன செய்ய! ஒரு பெரியாரும், தேர்தலில் நிற்காத ஒரு சமூகப் புரட்சி இயக்கமும்கூட இந்த அறியாமைச் சின்னங்களுக்கு அறிவுறுத்தப் போதாத நிலையோ என்பது யதார்த்தமாகி உள்ளது! கடவுள் போதை, மத போதை, ஜாதி போதை பதவி - அரசியல் போதை - போன்ற மாளாத போதைகள் நம் திராவிடர்களை சாண் ஏறி முழம் சறுக்கும் நிலைக்கே கொண்டு வருகிறது.
என்றாலும் சலிப்போ சங்கடமோ கொள்ள வேண்டியதில்லை. நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் அவர்தம் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்தினைத் துவக்கிய கால கட்டத்தில் சந்தித்த இமாலய எதிர்ப்பு கண்டு மலைத்து ஒதுங்கியோ, தம் தொண்டைத் தொடராமலே நிறுத்தியிருந்தாலோ இன்று நாமெல்லாம் பெற்றுள்ள மான மீட்பும், உரிமை உணர்வும் சாத்தியப்பட்டிருக்குமா? எனவே சோர்வோ, சலிப்போ, விரக்தியோ நமது இலட்சியப் பணியை - பயணத்தை - நிறுத்தி விடும் படிச் செய்ய இடம் தரக் கூடாது!
மலைபோல் வரும் இடர்ப்பாடுகள் எவையா யினும் அவைகளை பனிபோல் விலகச் செய்யும் ஆற்றல், பதவி தேடா, புகழ் நாடா நன்றி எதிர் பார்க்கா நம் கொள்கைக் குடும்பத்தவருக்கு உண்டு.
வெற்றிகளைத் தட்டிப் பறித்து, உள்ளூர் முதல் உலகம் வரை பெரியார் கொள்கை பரப்பிடும் பணியை வாழ்நாள் பணியாக வரித்துக் கொண்டு வாகையூரை நோக்கி நடைபோடுவோம் என்ற உறுதி நம் குருதியோட்டமாக இருக்கட்டும்!
சாகத் துணிந்த எவருக்கும் சமுத்திரம் முழங்கால் அளவே என்பதுபோல, சமூகப்புரட்சி அறிவுப்புரட்சி தான் நமது இலக்கு என்று கருதி உழைக்கும், திடச்சித்தம் கொண்ட நமது இலட் சியப் பயணங்கள் முடிவதில்லை.
அடுத்து, தேவை உள்ள வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். பெரியாரை உலகமயமாக்கும் பணி ஒரு கூட்டுப் பணி - பல்முனைப் பணி, பலகாலம் தொடர வேண்டிய பயனுள்ள பணி.
சக்தி வாய்ந்த, மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவை எவ்வளவு விரைவில் இன்று உலகின் பற்பல நாட்டு மக்களின் நோய் தீர்க்கப் பயன்படுகின்றன! பரவி வரு கின்றன. அதுபோல - பெரி யாரின் தத்துவங்கள் - இருட் டடிப்புகள் ஏளனங்கள் - எதிர்ப் புகள் - இவைகளையெல்லாம் தாண்டி, இருட்டைக் கிழத்து வெளிவரும் தகத் தகாய சூரியக் கதிர்களாக ஒளிவீசி சுட்டெரிக்க வேண்டியவை களைச் சுட்டெரித்தும், சுடும் நீரைத் தரும் பயன் களாகவும் பயிர்களுக்குத் தேவைப்படும் தேவை களைப் பூர்த்தி செய்தும், உலகத்தை உய்யும்படிச் செய்யும் உன்னதத் தத்துவங்கள் ஆகும்!
21ஆம் நூற்றாண்டுப் பெரியார் கொள்கை நூற்றாண்டு
21ஆம் நூற்றாண்டு பெரியார்தம் கொள்கை ஆளும் நூற்றாண்டாகும் என்ற நமது கணிப்பு வெறும் ஆசையோ, பேராசையோ அல்ல; அறிவியல் பூர்வ அணுகுமுறையால் பெற்ற ஆக்க பூர்வ விடையாகும்!
2011 விடை பெற்று, 2012 உதயமாகிடும் இன்று இதோ ஒரு அருமையான எடுத்துக்காட்டு பெரியார் (தத்துவம்) உலகமயமாகிறார் என்பதற்கு!
1944-ல் ஈரோட்டில் தந்தை பெரியார் அவர்கள், கிராம அதிகாரிகள் பயிற்சி நிறைவு விழா நிகழ்ச்சி, ஒன்றில் பங்கேற்று, நிகழ்த்திய ஓர் அற்புதமான உரை - கிராமச் சீர்திருத்தம் என்ற தலைப்பில் மிகச் சிறிய நூலாக வெளி வந்துள் ளது. அதன் ஆங்கில மொழியாக்கப் பதிப்பும் நம்மால் வெளியிடப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாய் -
கிராம - நகர பேதம் ஒழிய வேண்டும்
கிராமங்கள் - நகரங்கள் என்ற பேதம் ஒழிய வேண்டும்; கிராமம் - நகரம் என்கிற பேதம் ஒரு வகை வர்ணாசிரம பேதமே! எனவே நகரத்து மக்கள் பெறும் அனைத்து வசதிகளையும் வாய்ப்பு களையும் கிராம மக்கள் பெற்றாக வேண்டும். பெரும்பாலும் உழைக்கும் வர்க்கத்தினரை கீழ்ஜாதி என்று ஒடுக்கப்பட்ட மக்கள் வாழுவது கிராமங்களில்தானே! எனவே கல்வி - அறிவு, விளை பொருள்களை நல்ல விலைக்குத்தரும் வசதிகள், சிறந்த போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு போன்றவைகளை கிராம மக்களை இணைத்து தந்து கிராமங்கள் என்றும் நகரங்கள் என்றும் தனித்தனியே அடிமை ஆண்டான் போல இருக்கத் தேவையில்லை என்று கூறினார்கள்.
பெரியார் கல்வி நிறுவனங்களின் பணிகள்
இதையே தஞ்சை வல்லத்தில் துவக்கப்பட்ட பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் - அது கல்லூரியாக மலர்ந்த காலம் முதலே பெரியார் கண்ட கனவை நனவாக்கும் வகையில் சுற்று வட்டாரத்தில் உள்ள 60 கிராமங்களைத் தத்து எடுத்து - அங்கே பல்வேறு புத்தாக்கப் பணி களையும் மாணவர்களும், ஆசிரியர்களும், தோழர் களும் தொண்டறச் செம்மல்களாக செய்து - நல்லசமூக மாற்றத்தை உருவாக்கி வருகின் றனர்.
நமது பெருமைக்குரிய விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் அவர்களும் இதே முறையில் சிந்தித்து (பெரியார் கருத்தினை அதற்குமுன் அறிந்திராத நிலையிலேயே) இத்திட்டத்தினை தமது குடிஅரசுத் தலைவர் ஆளுமையின்போது பலருக்கும் அறிவுறுத்தினார்கள்.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பாராட்டு
பெரியார் கல்வி நிலையங்கள் - பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் போன்றவை பணிபற்றி அறிந்து, அன்புடன் ஆதரவும் ஊக்கமும் தந்ததோடு, நம் பணிகளைக் கண்டு வியந்ததோடு 60, 70 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தந்தை பெரியார் இப்படி ஒரு ஆக்கப்பூர்வ சிந்தனைகளை முன் வைத்ததைப் பாராட்டி நம் பல்கலைக் கழகம் நடத்தும் புரா மற்ற புராக்களுக்கு முன்னோடி யானபடியால் பெரியார் புரா (‘PURA’ - Provision for Urban facilities to Rural Areas) என்றே பெயர் சூட்டினார்கள் - குடிஅரசுத் தலைவராக இருக் கும்போதே!
இந்த அமைதிப் புரட்சியை எப்படி தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் செய்கிறது என்பதை சில வாரங்களுக்குமுன், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஸ்ரீஜனபால்சிங் ஆகிய இருவரும் இணைந்து எழுதிய பிரபல பெங்குவின் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ள “Target 3 Billion - Pura InnovativeSolutions towards susfaithable development’’ என்ற தலைப்பை நூலில் மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.
(அதுபற்றி தனியே 3ஆம் பக்கத்தில் வெளியிட் டுள்ளோம் காண்க)
(அதுபற்றி தனியே 3ஆம் பக்கத்தில் வெளியிட் டுள்ளோம் காண்க)
தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் புராபற்றி சிங்கப்பூர் நண்பர் ஒருவர் மாணவ - ஆசிரியராகி - டாக்டர் (Ph.D) பட்டத்திற்கான ஆராய்ச்சியை முடித்து விரைவில் பட்டம் பெறவிருக்கிறார்!
உலகம் முழுவதும் உள்ள 300 கோடி கிராம மக்களுக்கு இந்த புரா திட்டம் வளர்ச்சிக்கான தீர்வுத் திட்டமாகும் என்பது தான் மதிப்பிற்குரிய டாக்டர் APJA கலாம் அவர்களின் புத்தகத்தின் மய்யக் கருத்தாகும்.
உலகமயமாகி வருகிறார் பெரியார்
அதில் பெரியார் புரா பற்றிய விவரங்கள், பெரியார் - மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் பல்வகை இத்துறையின் எழுச்சிமிகு பணிகள்பற்றி எழுதிய நூல் பெரியார் உலகமயமாகி வருவதின் ஒரு கட்டமல்லவா இது? எனவே ஆங்கிலப் புத்தாண்டு - இது ஒன்றுதான் உலக மக்கள் முழுவதும் இணைந்து கொண்டாடும் விழா தானே இது!
அயராமல் நம் பணி தொடரட்டும்!
அயராமல் நம் பணி தொடரட்டும்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
தலைவர்
திராவிடர் கழகம்
குறிப்பு: பெரியார் புரா திட்டம் பற்றிய கட்டுரை நாளை விடுதலையில் வெளிவரும்.
No comments:
Post a Comment