2011ஆம் ஆண்டில் மட்டும் திருப்பதி ஏழுமலை யான் கோவிலுக்கு வரு மானம் ரொம்ப ரொம்ப கொஞ்சம் தான். ஆமாம். கொஞ்சம் தான்.
ரூ. 1700 கோடி வரு மானம். பக்தக் கோடிகள் தான் இந்தக் கோடிகளைக் கொட்டியிருக்கின்றனர்.
திருப்பதி கோவிலுக்குச் சொந்தமான தங்கம் இருப்பு எவ்வளவு தெரியுமா? மூன்றரை டன்! நகைகளின் மதிப்போ 50 ஆயிரம் கோடி ரூபாய்!
கோவில் ஊழியர்களின் எண்ணிக்கை 16,200.
பக்தி வியாபாரம் பகற் கொள்ளையாக மிக ஜோராக நடந்து கொண்டு இருக்கிறது. இதோடு பக்தி வேடத்தில் பார்ப்பனர்கள் அடிக்கும் கொள்ளை இப் பொழுது சந்தி சிரிக்க ஆரம்பித்துவிட்டது.
மன்னர் கிருஷ்ணதேவ ராயர் ஏழுமலையானைத் தரிசிக்க ஏழுமுறை வந்தா ராம். ஒவ்வொரு முறையும் வைரம் பவுன் நகைகளைக் குவித்துக் கொடுத்திருக் கிறார். மன்னன் முடி ஆட்சி யின் 500 ஆம் ஆண் டினை ஒட்டி பெருவிழா எடுப்பது என்றும், அதனை யொட்டி கிருஷ்ண தேவ ராயன் ஏழுமலையானுக்குக் கொடுத்த நகைகளைக் கண்காட்சியில் வைப்பது என்றும் முடிவு செய்தபோது தான் பூகம்பம் ஒன்று வெடித்தது. அந்த நகைகள் காணோம்! காணோம்!! கேட்டால் அவற்றையெல் லாம் உருக்கி டாலராக்கி பக்தர்களுக்கு விற்று விட் டோம் என்று ஒரு போடு போட்டனர்.
அந்தக் கோவிலுக்குள் சேஷாத்திரி என்று ஒருவர் இருக்கிறார். அவருக்குப் பெயரே டாலர் சேஷாத் திரியாம். ஆம். அது ஒரு காரணப் பெயர்.
நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்தது போல் நகைப் பிரிவுப் பகுதி யில் இவருக்குப் பணி!
500 கிராம் எடை உள்ள 300 தங்க டாலர்கள் காணாமற் போய்விட்டன. ஆள் யார் என்று தெரிந் திருந்தும் நடவடிக்கை மட்டும் இல்லை. காரணம் அவர் சேஷாத்திரி ஆயிற்றே!
திருப்பதி கோவில் நகைகளில் பெரும் ஊழல் என்ற விவகாரம் உயர் நீதிமன்றம் வரை சென்று, நகைகள் கணக்கு ஒழுங் காகப் பார்க்கப்பட வேண் டும் என்று கெடு விதித்து உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.
திருப்பதியில் கொள்ளை நடக்கிறது என்று கூறி ஒரு கோடி பேர்கள் பிரதமருக்குத் தந்தி அடித்திருக்கின்றனர். பிரஜா ராஜ்ய கட்சித் தலைவர் நடிகர் சிரஞ்சீவி தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 17 பேர் களுடன் திருப்பதிக்கு நடைப் பயணமாகச் சென்று, நடவடிக்கை எடுக்கக் கோரினாரே! முன்னாள் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு சி.பி.அய். விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றாரே!
ஊழலை ஒழிக்கப் புறப்பட்ட உத்தமர்கள் இந்த விடயத்தில் மட்டும் வாய் திறப்பதில்லையே ஏன்?
நாமக்கடவுளுக்கே நாமம்! எப்படிப்பட்ட கில் லாடிகள்? - மயிலாடன்
No comments:
Post a Comment