Sunday, January 1, 2012

உடற்பயிற்சியினால் மன அழுத்தத்தைக் குறைக்க முடியுமா?



ஆமாம். உடற்பயிற்சி மருந்துகளைப் போலவே மன அழுத்தத்தைக் குணப்படுத்துகிறது. 24 வயது முதல் 45 வயது வரையிலான மக்களிடம் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து,  வாரத்தில் மூன்று முதல் அய்ந்து முறை அரைமணி நேரம் உடற்பயிற்சி  செய்வது மருந்துகளை விட அதிக அளவில் மனஅழுத்தத்தை 50 விழுக்காடு அளவுக்குக் குறைத்து குணப்படுத்துகிறது என்பது தெரியவந்தது. மருந்துகள் அல்லது மூலிகை நிவாரணிகளை விட  மனஅழுத்தத்தைக் குணப்படுத்துவதில் போலி மருந்துகள்(placebos) அதிக பயனுள்ளவை என்று அறிவியல் செய்தி (Science News) என்னும் பத்திரிகை தெரிவித்துள்ளது. செயின்ட் ஜான் வோர்ட்டின் என்பவரால்  24 விழுக்காடு நோயாளிகளும் , மனஅழுத்தத்திற்கு எதிரான மருந்தான ஜோலோஃப் (zoloft) பினால்  25 விழுக்காடு நோயாளிகளும் குணப்படுத்தப்பட்டிருந்த நிலையில், சர்க்கரை உருண் டைகளையே மருந்து என்று பொய் கூறி 32 விழுக்காடு நோயாளிகள் முற்றிலுமாக குணமாக்கப் பட்டுள்ளனர் என்பதை டாக்டர் ஆரிஃப் கான் 1979 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனைகளில் இருந்து கண்டறிந்துள்ளார்.
மனஅழுத்தத்திற்கு எதிரான மருந்துகளான Prozac and Efexor ஆகியவற்றை போலி மருந்துகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில்,  மருந்துகள் 52 விழுக்காடு அளவுக்கு நோயைக் குணப் படுத்தியதும், போலி மருந்துகளும் வியக்கத்தக்க வகையில் 38 விழுக்காடு அளவுக்கு நோயைக் குணப்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. ஆனால் இந்த ஏமாற்றுத்தனத்தை நோயாளிக்குத் தெரிவித்தவுடன் அவரது மனஅழுத்தம் உடனே அதிகமாக ஆகிவிடுகிறது. மனஅழுத்தத்தைக் குணப்படுத்தும் நடைமுறையில் தொழில் ரீதியிலான மிகுந்த கவனத்துடன் கூடிய ஒரு சோதனைச் சாலை பரிசோதனையை நோயாளிகளுக்கு அளிப்பது மிகவும் முக்கியமானது என்று பல விமர்சகர்கள் நம்புகின்றனர். மருந்துகளுடன் கலந்து காட்டப்படும் தனிப்பட்ட அக்கறையும், கவனிப்பும் விரைவான, நீண்ட காலத்துக்கு நீடிக்கவல்ல நிவாரணத்தை அளிக்கிறது என்றே முடிவு செய்யத் தோன்றுகிறது.
தியானமும் மனஅழுத்தத்தைக் குறைப்பதில் நன்கு செயலாற்றுவதாகவே தோன்றுகிறது. வின்கான்சின் மெடிசான் பல்கலைக் கழகத்தின் நரம்பு அறிவியல் பேராசிரியர் ரிச்சர்ட் டேவிட்சன் மேற்கொண்ட ஓர் ஆய்வுத் திட்டத்தில்,  நிபந்தனையற்ற முறையிலான நேசிப்பு, பரிவு, இரக்கம் ஆகியவற்றைப் பற்றி தியானம் செய்ய  தலாய் லாமாவால் பரிந்துரைக்கப்பட்ட திபெத்திய புத்தமதத் துறவிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதன் விளைவாக வெளிப்பட்ட ஒரு வகையான அசாதாரணமான முறையிலான காமா மூளை அலைகளை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. இதிலிருந்து தெரிய வந்தது என்னவென்றால், பயிற்சி அளிக்கப்பட்டால், மூளையினாலும், எந்தக் குறைபாட்டினால் மனஅழுத்தம் ஏற்படுகிறதோ அந்த வேதியியல் கலவையான டோபோமைனை(dopamine)  தானாகவே சொந்தமாக உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்பதுதான். மருந்துகளைப் பயன்படுத்துவதால், தானே சொந்தமாக டோபோமைனை உற்பத்தி செய்து கொள்ளும் செயலை மூளை முழுமையாக நிறுத்திக் கொள்கிறது.
ஆக்கபூர்வமாக சிந்தித்து செயல்பட உங்களுக்கு நீங்களே பயிற்சி அளித்துக் கொள்வதன் மூலம், மறுபடியும் நீங்கள் மகிழ்ச்சி நிறைந்தவராக ஆகமுடியும்.  போலி மருந்துகள் ஏன் வேலை செய்கின்றன என்பதன் காரணமும் இதுதான். நம்பிக்கை என்பது மற்ற அனைத்தையும் விட, மருந்துகளையும் விட ஆற்றல் நிறைந்ததாகும்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’   பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...