Wednesday, January 4, 2012

இங்கிலாந்து நாட்டின் போரில் எந்த விமானம் வெற்றியை ஈட்டித் தந்தது?


ஹாக்கர் ஹரிகேன்   என்னும் விமானம் தான் இங்கிலாந்து நாட்டின் போரில் வெற்றியை ஈட்டித் தந்தது. முன்னேற்றங்கள் செய்யப்பட்ட வடிவம் கொண்ட ஸ்பிட் பயர்  என்னும் விமானம் வேகம் மிகுந்ததாகவும், கையாள எடை குறைந்ததாகவும், 30,000 அடி உயரம் வரை செயல்பட இயன்ற தாகவும் இருந்தது. என்றாலும்,  இங்கிலாந்து நாட்டின்  போரில் கடுமையாக சண்டையிட்டது ஹாக்கர் ஹரிகேன்தான் என்று ஆவணங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

தொடக்கத்தில் அவைதான் அதிக எண்ணிக்கையில் இருந்தன. 1940 இல் ஸ்பிட்பயர் படைப்பிரிவு இரண்டு இருந்தால் ஹாக்கர் ஹரிகேன் படைப்பிரிவு மூன்று இருந்தது. 1715 ஹாக்கர் ஹரிகேன் விமானங்கள் போரில் பயன்படுத்தப்பட்டன. இது மற்ற அனைத்துப் போர் விமானங்களின் மொத்த எண்ணிக்கையை விடக் கூடுதலாகும்.

அவை அதிக எண்ணிக்கையிலான எதிரிகளின் விமானங்களை வீழ்த்தின. இங்கிலாந்து மீதான போர் என்ற  1969இல் வெளியான தனது விரிவான நூலில். 11,400 முறை தாக்குதல் நடத்திய இவை எதிரிகளில் 55 விழுக்காட்டினர் இறப்புக்குக் காரணமாக இருந்தது; ஸ்பிட்பயர் 33 விழுக்காட்டினர் இறப்புக்குத்தான் காரணமாக இருந்தது.

பொதுவாகவே, குண்டுவீசும் விமானங்களைத் தாக்கி அழிக்க வல்லவையாக  ஹாக்கர் ஹரிகேன் விமானங்கள்  இருந்தன. ஸ்பிட்பயர் விமானங்களோ காலாட்படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்த வல்லவையாக இருந்தன. என்றாலும்,  போரில் மிகப் பெரிய சாதனை படைத்த இங்கிலாந்து விமானப்படை விமானி, செக் நாட்டைச் சேர்ந்த ஜோசப் பிரான்டிஸ்க் ஹரிகேன்களை மட்டுமே ஓட்டினார்; என்றாலும், வேகம் நிறைந்ததும், சிறந்த தளவாடங்களைக் கொண்டதுமான ஜெர்மன் நாட்டு  109 மிக் போர் விமானங்களை அவர் வீழ்த்தினார்.

1935 இல் முதன் முதலாகப் பறந்த ஹாக்கர் ஹரிகேன் - ஒரு இறக்கை கொண்ட ஹாக்கர் ஃப்யூரி விமானம்தான் சிட்னி காம் என்பவரால் போர்களுக்கிடையே ஹாக்கருக்காக வடிவமைக்கப்பட்ட நம்பத்தக்க போர் விமானமாகும்.

இரும்பு சட்டங்களுடன், லினன் துணியால் மூடப்பட்ட ஹாக்கர் ஹரிகேன் விமானங்கள் 1937 முதல் 1944 வரை கட்டப்பட்டன. ஸ்பிட்பயர் விமானம் முழுக்க முழுக்க இரும்பினால் ஆனது. செய்வதற்கு எளிதானதாகவும், செலவு குறைவானதாகவும் ஹாக்கர் ஹரிகேன் இருந்தது. அதன் உடல் துணியால் மூடப்பட்டிருந்ததால், எதிரிகளின் குண்டுகள் துணியைத் துளைத்துக் கொண்டு சென்றன. பல முறை இவை இறக்கைகளை இழந்தாலும், பாதுகாப்புடன் திரும்பி வந்தன.

போரில் இவற்றை மிக விரைவாகத் திருப்ப முடியும். இதனால், ஸ்பிட்பயரை விட அதிகமாக, எட்டு பீரங்கிகளின்  தாக்குதல் அதிர்ச்சியையும் தாங்கிக் கொள்ள இதனால் முடியும்.  இவற்றில் விமான ஓட்டிகளின் பகுதி பெரியதாக இருந்ததுடன், விமானிகள் தங்களை வெப்பம் இழப்பின்றி போர்வையால் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதும் இதன் காரணம். இரண்டு வகை விமானங்களிலும் விமான ஓட்டிகளின் பகுதியை வெம்மையாக வைத்திருக்க எந்த ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை. 1939 செம்படம்பரில் ஸ்பிட்பயர் முதன் முதலாகப் போரில் எதிரிகளைக் கொன்றது. அப்போது அறியாமல் அவர்கள் தங்கள் ஹாக்கர் ஹரிகேன்களையே சுட்டு வீழ்த்தினர்.

இங்கிலாந்து நாட்டுப் போரில் இங்கிலாந்து விமானப் படை 1,173 போர் விமானங்களையும், 510 விமான ஓட்டிகளையும், பீரங்கியாளர்களையும் இழந்தது. இவற்றில் 538 ஹரிகேன்களும், 342 ஸ்பிட் பயர் விமானங்களும் அடங்கும். லுப்ட்வாஃப் நாடு 1,713 போர் விமானங்களை இழந்தன; அவர்களின் 3,368 விமானப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர் அல்லது சிறைப்படுத்தப்பட்டனர்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General
Ignorance’   பொதுவான அறியாமைகள்
தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...