Wednesday, January 4, 2012

இருவருக்கும் சந்தேகம்!


சார் ஒரு சந்தேகம். என்னடா?
 சரஸ்வதி எங்கே இருக்கிறாள்?
 வெண்டாமரையில். 
அவள் இருக்கும் அப்பூ எங்கே இருக்கிறது சார்? பிரம்மாவின் நாவில். 
பிரம்மா எங்கே இருக்கிறார் சார்? 
மஹாவிஷ்ணுவின் உந்தியில் (அதாவது தொப்புளில்). 
மகாவிஷ்ணு எங்கே இருக்கிறார்? 
ஆதிசேஷன் என்ற பாம்பின் மேல். 
அப்பாம்பு எங்கே இருக்கிறது சார்? அதுவா! திருப்பாற்கடலில். 
திருப்பாற்கடல் எங்கே இருக்கிறது சார்?
(உபாத்தியாயர் பெரிய சந்தேகத் துடன்) உனது பூகோளபடத்தை எடு. 
அதில் இருக்கிறதா என்று பார்ப்போம்.
- (விடுதலை 3.2.1970)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...