38 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன, திராவிடச் சமுதாயத்தைத் தலை நிமிரச் செய்த, கல்வி, வேலை வாய்ப்பு, வாழ்வில் வளம் ஆகியன பெற்றுத் தந்த பகுத்தறிவுப் பகலவன், தன்மானத் தலைவர், தந்தை பெரியார் மறைந்து - அதாவது புகழுடம்பை நீத்து.
வழக்கமாக நினைவு நாட்கள் - அதிலும் அய்யாவின் மறைவு நாள் - விழா நாள் அன்று. வேதனைகளை நெஞ்சத் தில் நிரப்பிடும் - அய்யா இன்று இல்லையே - அவர் வழியில் அன்று ஆயிரக்கணக்கில் நடைபோடுவதை - இன்று லட்சக் கணக்கில் நடை போடுவதை - தமிழகத் தலைவராக மட்டுமே பார்க்கப்பட்ட - இந்தியத் தலைவரான பெரியார் இன்று உலகத்தின் தலைவராய் அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர் என்று கடல் கடந்து, தமிழர் தலைவர் ஆசிரியர் குறிப்பிட்டதைப் போல் ழுடடியெடளையவடி டிக ஞநசலையச என்பதை மண்டைச் சுரப்பை உலகு தொழுவதைக் காணமுடியவில்லையே என்ற ஏக்கம் எல்லோர் நெஞ்சிலும் நிறைந்திருக்கிறது.
கட்சி பேதமின்றி மரியாதை
இந்த ஆண்டு அய்யாவின் நினைவு நாள் திராவிடச் சமுதாயம் கட்சி பேதமின்றிக் கடமை வீரருக்கு அய்யாவுக்கு நன்றி செலுத்தும் விழா நாளாக மாறி விளங்கியது நெஞ்சை நிரப்பியது. ஆம்! அய்யாவின் தி.க.வின் கருப்பின் நடுவில் சிவப்பு வட்டம் பறந்த திடலில் விடுதலைச் சிறுத்தைகளின் நீலவண்ணக் கொடி, பொதுவுடமையினரின் செங்கொடி, பா.ம.க.வின் மஞ்சள் நிறம் கொண்ட கொடி, தாய்க் கழகத்தோடு என்றும் ஒட்டி உறவாடும் கருப்பு, சிவப்பு வண்ணக் கொடிகள் ஏந்தி அந்தந்தக் கட்சியின் தலைவர்கள் தொண்டர்களுடன் வந்து, மறைந்தாலும் மனதை விட்டு அகலாத மாபெரும் தலைவர் பெரியார் அய்யாவுக்கு மரியாதை செலுத்தினர் என்பதோடு, அய்யா! நாங்கள் என்றும் உங்களை மறவாத - நன்றியை என்றும் செலுத்தும் கூட்டம் - எங்கள் இருப்பிடம் கட்சி அடிப்படையில் வேறு என்றாலும் உங்கள் இருப்பிடம் எங்கள் இதயம்தான் என்று வந்தனர் என்பதே பொருந்தும்.
திராவிடர் இயக்கமாம் தி.மு.க.வின் தலைவர்கள், தலைவர் கலைஞரும், இனமானப் பேராசிரியரும் தங்கள் பிறந்த நாளில் தந்தை பெரியாருக்குத் தங்கள் நன்றிக் கடனை ஆற்றுவது வழக்கம். அவர்களின் அன்புத் தம்பிகள் ஏராளமானோர் கூடியிருந்த காட்சி மகிழ்வூட்டியது. அது போலவே அய்யாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் - பேராசிரியர், தளபதி தலைமையில்.
திராவிடர் இயக்கமாம் தி.மு.க.வின் தலைவர்கள், தலைவர் கலைஞரும், இனமானப் பேராசிரியரும் தங்கள் பிறந்த நாளில் தந்தை பெரியாருக்குத் தங்கள் நன்றிக் கடனை ஆற்றுவது வழக்கம். அவர்களின் அன்புத் தம்பிகள் ஏராளமானோர் கூடியிருந்த காட்சி மகிழ்வூட்டியது. அது போலவே அய்யாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் - பேராசிரியர், தளபதி தலைமையில்.
விடுதலை ஏட்டின் நிரந்தர பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்ட வைப்பு நிதியை அளித்து மகிழும் பெரியார் பிஞ்சு (திருமகள் இறையன் குடும்பம்)
ஆனால், கட்சி சார்பற்ற பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட அமைப்பினர், ஓய்வு பெற்ற நீதிபதிகள், இந்நாள் நீதிபதிகள், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் என்று ஆயிரமாயிரவர் அய்யாவின் நினைவிடத்தில் கூடி அவருக்கு மரியாதை செலுத்தினர். நன்றிக் கடன் ஆற்றினர்.
டிசம்பர் 24 இல் பெரியார் திடல் தந்தை பெரியாரின் நினைவு நாள் என்பதாக அல்லாமல் ஒரு மாநாட்டுத் திடலாக விளங்கியது. எப்படி? ஆம்! ஓருநாள் மாநாடு போல - எங்கும் கருஞ்சட்டைப்படை - குடும்பத்துடனும் எல்லோர் மனத்திலும் ஒரு நிறைவு - ஒரு மகிழ்ச்சிப் பேராறு பிரவாகம் எடுத்து ஓடியதைக் காண முடிந்தது. ஏன்? அய்யாவின் கொள்கை முரசு - விடுதலை உலகின் ஒரே பகுத்தறிவு ஏடு - சமய விழாக் களுக்கு விடுமுறை விடாத ஏடு - கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் குறிப்பிட்டதைப் போல எவரும் எட்டாத உயரத்தை எட்டிய ஆசிரியர் வீரமணி அவர்கள் கைவண்ணத்தில் மிளிர்ந்த ஏட்டின் விழா நாளாகப் பொருத்தமாக அமைந்தது.
அய்ம்பதினாயிரமா?
50,036 சந்தாக்கள் பெறப் போகும் தமிழர் தலைவருக்கு கருஞ்சட்டை குடும்பங்களின் சார்பில் கழகத்தின் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு பொன்னாடை போர்த்தும் உற்சாகக் காட்சி.
மூன்று மாதங்களுக்கு முன் - விடுதலை ஆசிரியர் பொறுப்பேற்று ஆசிரியர் அய்ம்பது ஆண்டுகள் பணியாற்றியதைச் சிறப்பிக்கும் வகையில் விடுதலைக்கு அய்ம்பதினாயிரம் சந்தாக்கள் திரட்டுவது என்று கவிஞர் முன்மொழியப் பொதுக் குழுவும் தீர்மானம் நிறைவேற்றிய போது கழகத் தலைவர் தயக்கத்துடனேதான் - ஆம் தயக்கத்துடனேதான் இத்திட்டத்திற்கு ஆம் கொள்கை ஏட்டின் பரப்பல் பணி என்பதால் ஏற்றுக் கொண்டார்.
50,000 சந்தாக்கள் - அய்ம்பதினாயிரமா? அய்யோ! முடியக்கூடியதா? அதுவும் பகுத்தறிவுப் பிரச்சார ஏட்டிற்கா? என்று மலைத்தவர்களும் இருந்தார்கள். ஆனால் திராவிடர் கழகத் தோழர்கள் பசி நோக்காது, கண் துஞ்சாது, மெய் வருத்தம் பாராது - வியர்வை சிந்தி விடுதலைத் தேனீக்களாகப் பறந்தனர். ஏன்?
விடுதலை அத்தனைச் சிறப்பு மிக்க பகுத்தறிவாளர் கையில் இருக்கும் அறிவாயுதம். 1.6.1935 இல் வாரம் இருமுறை ஏடாகக் காலணா விலையில் வெளிவந்த 1.1.1937 முதல் நாளேடாக அரையணா விலையில் தந்தை பெரியாரின் பொறுப்பில் வந்து சிறிது காலம் ஈரோட்டில் இருந்தும், பின்னர் தொடர்ந்து சென்னையில் இருந்தும் வெளியாகிப் பகுத்தறிவுக் கதிர் பரப்பும் பகலவன்.
தொடக்கத்தில் சென்னையில் 14, மவுண்ட் ரோடு என்னும் முகவரியிலும், பின்னர் ஈரோடு குடிஅரசு பணிமனை அலுவல கத்திலிருந்தும், பின்னர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை பாலகிருஷ்ணபிள்ளை தெருவில் இருந்தும், 1965 நவம்பர் முதல் சென்னை பெரியார் திடலில் இருந்தும் வெளிவந்த வரலாறு கொண்ட விடுதலை டி.ஏ.வி.நாதன், பண்டித முத்துசாமிப் பிள்ளை, அ.பொன்னம்பலனார், சாமி சிதம் பரனார், அறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி, அன்னை மணியம்மையார் என்று தொடங்கி ஆசிரியர் வீரமணியை அய்ம்பதாண்டு காலம் ஆசிரியராகக் கொண்ட வரலாறும் உடையது.
விடுதலையைத் தொடர்ந்து நடத்தாமல் அய்யா நிறுத்திவிடக் கூடிய நிலைக்குச் செல்லுமாறு கையைக் கடித்தபோது, தாங்கிப் பிடிக்கத் தன்னைத் தியாகத் தீயில் குதிக்க அன்று முன்வந்து விடுலைத் தேர் நிற்காமல் ஓடப் பெரும் துணை நின்ற ஆசிரியர், இன்று விடுதலையை மணக்கச் செய்த வரலாறும் உண்டு.
அப்படி என்னதான் வீரமணி அவர்கள் செய்துவிட்டார்? அய்யாவின் நினைவு நாளை விடுதலை ஆசிரியரான 50 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கையில் என்று கேள்வி கேட்கவிடாத சாதனைச் சிறப்பை ஏற்படுத்திவிட்டார்.
தமிழர் தலைவரின் சாதனை
தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் ஆகியோரின் மறைவுக்குப் பிறகு விடுதலையை எட்டுப் பக்கங்களாக விரிவுபடுத்தியதோடு அல்லாமல் 17.9.2007 முதல் திருச்சியிலும் இன்னொரு பதிப்பைத் தொடங்கி, நவீன கணினி அச்சுக் கோப்பு, நவீன அச்சு இயந்திரங்கள் ஏற்பாட் டினால் வணிக அடிப்படையில் நடத்தப்படும் ஏடுகள் இதழ் களுக்கு இணையாகப் புதுப் பொலிவோடு, புத்தம் புதிய மணமாய் நாளும் வெளி வந்து கொண்டிருக்கச் செய்ததையும், இணையதளம் வாயிலாக உலகெங்கும் வாசகர்கள் சிறப்பாக ஆர்வமாக ஈர்க்கும் நிலையை எட்டச் செய்ததை யும், விடுதலை ஆசிரியராகப் பொறுப்பேற்றது முதல் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா விடுதலை மலர் என்னும் அறிவுப் பெட்டகத்தை ஆண்டு தோறும் படைத்து வரும், ஆசிரியர் பொறுப்பில் பொன் விழா காணும் ஒரே தலைவர் எனும் சாதனை படைத்து, எதிர் நீச்சல் போடும் புரட்சி ஆயுதம் ஏந்திவரும் ஆசிரியர் என்பது சாதாரணமானதன்று.
விடுதலை, பகுத்தறிவு இனமான, சமதர்ம, சமத்துவ, சமூகநீதி, பாலியல் நீதி இவற்றுக்குப் போராடும் போர் வாள் வாயிலாகச் சாதித்துக் கொடுத்திருக்கும் வெற்றியின் குவியல்கள் கவிஞர் அவர்கள் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் 11.9.2011 இல் திருச்சியில் சிறப்புத் தீர்மானத்தை முன்மொழிந்தபோது குறிப்பிட்டவை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. எனவேதான் 50 ஆண்டு விடுதலை ஆசிரியர் பணிக்கு இயக்கத்தின் இரும்புத் தூண்கள் அளிக்கும் பரிசு - 50 ஆண்டு விடுதலைப் பணிக்கு மட்டுமல்லாது - ஆசிரியர் மனநிறைவடையச் செய்வது - ஆசிரியரின் ஆயுளை நீட்டிப்பது - தமிழர் தலைவர் தலைமையில் பெரியார் பணி முடிப்பது என்பதே கழகத் தோழர்களின் கடும் உழைப்பின் பின்னணி - வியர்வைத் துளிகளின் வரலாறு - இன எழுச்சிப் பேரிகைக்கு எடுத்த வரலாறு.
தமிழர் தலைவரின் ஆயுளை நீட்டிக்கும் முகமாய் விடுதலைக்கு ஆயுள் சந்தா வழங்கி ஊக்கம் அளிக்கிறார் ஊற்றங்கரை பேரூராட்சித் தலைவர்.
அன்று பெரியார் விடுத்த வேண்டுகோள்
7.6.1964இல் பெரியார் அன்று விடுத்த வேண்டுகோளை இயக்கத் தோழர்களுக்கு இந்த வேண்டுகோளை நிறைவேற்றி எங்களைப் பெருமைப்படுத்தி விடுதலையை வாழ வைத்து வீரமணி அவர்களையும் உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன் என்ற வேண்டுகோளை இன்றைய வேண்டுகோளாய் ஏற்று ஊண் உறக்கமின்றி உண்மையிலேயே முயன்று முடித்துக் காட்டிவிட்டனர்.
ஆங்கிலத்தில் ஹெக்டிக் புரோகிராம் என்று சொல்வார்களே அது போல் அன்று முழுவதும் காலை ஒன்பது மணிக்குத் தொடங்கி இரவு 10 மணி வரை அத்தனை நிகழ்வுகளிலும் சற்றும் ஓய்வோ, களைப்போ, முகச் சுழிப்போ காட்டாமல் ஆசிரியர் பங்கேற்றதைப் பார்த்தபோது தொண்டர்கள் மேலும் உழைக்கவேண்டும் எனும் உத்வேகம் பெற்றார்கள். ஆனால் நம்மைப் போன்றவர்களுக்கு எப்படித்தான் - 79 வயதிலும் - அதிலும் இருதயக் கோளாறுக்கு ஆட்பட்டுச் சிகிச்சை எடுத்துக் கொண்ட இந்த மனிதரால் இயல்கிறது - இனியும் அவரை இப்படி வாட்டி வறுத்து எடுக்கக் கூடாது என்று சொல்லத் தோன்றியது.
ஆங்கிலத்தில் ஹெக்டிக் புரோகிராம் என்று சொல்வார்களே அது போல் அன்று முழுவதும் காலை ஒன்பது மணிக்குத் தொடங்கி இரவு 10 மணி வரை அத்தனை நிகழ்வுகளிலும் சற்றும் ஓய்வோ, களைப்போ, முகச் சுழிப்போ காட்டாமல் ஆசிரியர் பங்கேற்றதைப் பார்த்தபோது தொண்டர்கள் மேலும் உழைக்கவேண்டும் எனும் உத்வேகம் பெற்றார்கள். ஆனால் நம்மைப் போன்றவர்களுக்கு எப்படித்தான் - 79 வயதிலும் - அதிலும் இருதயக் கோளாறுக்கு ஆட்பட்டுச் சிகிச்சை எடுத்துக் கொண்ட இந்த மனிதரால் இயல்கிறது - இனியும் அவரை இப்படி வாட்டி வறுத்து எடுக்கக் கூடாது என்று சொல்லத் தோன்றியது.
வீறுகொண்ட தமிழினத்தின் கேடயமாம் விடுதலைக்கு வைப்பு நிதி ரூ.5,000/- வழங்கி மகிழ்கிறார் ராஜம் மங்களமுருகேசன்
மூன்று மணிக்குத்தான் மதிய உணவு
மதியம் மூன்று மணிவரை சாப்பிடக்கூட விடாமல் தலைமைக் கழகச் செயலாளர் சீட்டு மேல் சீட்டாகக் கொடுத்துத் தமிழர் தலைவரிடம் வேலை வாங்கியதைப் பார்த்தபோது உண்மையிலேயே கழகத் தோழர் ஒருவர் என்ன, அய்யாவை இந்த வயதில் இப்படி வாட்டுகிறார்களே என்று சொல்லக் காதால் கேட்க நேர்ந்தது.
இனி ஓர் உறுதி செய்வோம் ஆசிரியர் கலந்து கொள்ளும் கூட்டத்தில் அவர் பேச வாய்ப்பளித்துப் பேசுவோர் எண்ணிக்கையைக் குறைத்து, நேரத்திற்கு நிகழ்ச்சியைத் தொடங்கிக் குறித்த நேரத்தில் முடிப்போம் என உறுதி எடுப்போம் என்று சொல்லத் தோன்றியது. தமிழர் தலைவரும் அய்யா பெரியார் போல் ஆகிவிட்டார். அய்யா பெரியாரை அம்மா மணியம்மையார் உடனிருந்து கவனித்தது போல், ஆசிரியருக்கு - அம்மா அவர்கள் கட்டுப்பாடோடு வைத்து உடல் நலம் காக்க வேண்டும். ஏனென்றால் இன்னும் பல்லாண்டு அவரின் சேவை தேவை. இதை ஏன் சொல்கிறோம் என்பதை 24-12-2011 காலை முதல் நடைபெற்ற நிகழ்ச்சித் தொகுப்பைக் கண்டால் உணர முடியும்.
சென்னை மண்டல செயலாளர் நெய்வேலி வெ. ஞானசேகரன் சந்தா வழங்குகிறார்
திடல் கடலானது
24.12.2011 அன்று தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளை ஒட்டியும், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுதலைக்கு ஆசிரியர் பொறுப்பை ஏற்று ஆண்டுகள் அய்ம்பது ஆனதை ஒட்டியும், விடுதலை சந்தா அய்ம்பதாயிரம் வழங்கும் நிகழ்ச்சியை ஒட்டியும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக பெரியார் திடலில் திரண்டு - பெரியார் திடலைக் கருஞ்சட்டைகளின் சங்கமத் திடலாக்கினர்.
சென்னை எழும்பூர் பேருந்து நிலையத்திற்குப் பக்கம் அமைந்துள்ள அம்மா மணியம்மையார் சிலைக்குத் தோழர்கள் புடைசூழத் தமிழர் தலைவர் தலைமையில் மாலை அணிவித்தபோது 24.12.2011 நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டன. அடுத்து அய்யா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை.
அதன் தொடர்ச்சியாக அய்யா நினைவிடத்தில் ஆசிரியர், பெரியார் கொள்கை பரவ ஒவ்வொருவரும் உறுதி ஏற்போம் எனும் உறுதிமொழிகளைக் கூறிடத் தோழர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
பின்னர் அன்னை மணியம்மையார் நினைவிடத்திலும், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்திலும், தமிழர் தலைவர் மலர் வைத்து மரியாதை செலுத்தியபின், பல்வேறு அமைப்பினர், திரளானோர் அய்யா நினைவிடத்தில் மலர் மாலைகள், மலர் வளையங்களால் நிரப்பி அய்யாவின் புகழை மணக்கச் செய்தனர்.
மேலே குறிப்பிட்டதைப் போல் பல்வேறு கட்சியனரும் பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்தபோது, அவர்களை வரவேற்று, மதித்து அவர்களுடன் ஆசிரியரும் உடன் சென்றது வேறு எங்கும் காணவியலாத பண்பாட்டு நிகழ்ச்சி எனலாம். அய்யா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி நினைவினைப் போற்றியதோடு நின்றுவிடாமல் ஆசிரியர் அவர்கள்.
நினைவிடத்தில் உறுதிமொழி
பெயாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது (பின்பற்றுகிறது) என்று காட்ட உறுதியெடுத்து உழைக்கச் சூளுரை ஏற்போம்! பெரியார் என்ற தத்துவம் தனது உலகச் சுற்றுப் பயணத்தைத் தடைகளைத் தாண்டி தொடங்கி விட்டது! அது தொடரும்! தொய்வின்றித் தொடரும்! தோழர் களே! தோழியர்களே! இந்தப் பயணத்தில் பங்கேற்பதையே உங்கள் உயிர்க் கடமையாகக் கொள்வீர்! வெற்றி நமதே! புதியதோர் உலகைப் பேசு சுயமரியாதை உலகைப் படைப் போம்! வாரீர்! வாரீர்!! என்று அறைகூவல் விடுத்தார் அற்புதமாக.
(தொடரும்)
1 comment:
இந்தப் பயணத்தில் பங்கேற்பதையே உங்கள் உயிர்க் கடமையாகக் கொள்வீர்! வெற்றி நமதே! புதியதோர் உலகைப் பேசு சுயமரியாதை உலகைப் படைப் போம்! வாரீர்! வாரீர்!! என்று அறைகூவல்
மெய் சிலிர்க்க வைக்கிறது
Post a Comment