சமூகத்தின் ஆதரவை உருவாக்கித் திரட்டி, ஆக்கபூர்வமான செயல்திட்டங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள பெரியார் புரா, மக்களைப் பங்கெடுத்துக் கொள்ளச் செய்வது போன்ற ஒரு முன்மாதிரியாக திட்டத்தைப் பின்பற்றுகிறது. சமூகப் பணியில் முதுகலைப் பட்டம், எம்.பில். பட்டம், மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளுடன், இயற்கை மற்றும் உயிரியல் - இயற்கை எருவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விவசாயம், நிலப்பரப்பைப் பண்படுத்தி மேம்படுத்துதல், மூலிகைகளின் மூலம் சிகிச்சை அளித்தல், மற்றும் விவசாய உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்துதல் போன்ற பாடங்களில் பல பட்டயப் படிப்பு போன்ற, கிராமப்புற வளர்ச்சிக் களத்திற்கான பல பாடதிட்டங்களையும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் நடத்தி வருகிறது.
இந்தப் புரா திட்டத்தின் ஒரு பகுதியாக ஆவதற்குத் தகுந்த தொழில்நுட்பஅறிவு கொண்ட தலைவர்களை இந்தப் பட்டயப் படிப்புகள் தயாரித்து அளிக்கின்றன.
பெரியார் புரா தனது செயல் பாட்டுக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள குடும்பங்களை இச்செயல் திட்டங்களில் பங்கெடுத்துக் கொள்ள தயார் செய்யும் பொறுப்பை, சமூகப் பணி முதுகலைப் பட்டப் படிப்பில் பயிலும் மாணவர்களுக்கும், தேசிய சேவைத் திட்டத்தில் தாங்களாக விரும்பி செயலாற்ற வருபவர்களுக்கும் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் அய்ந்து குடும்பங்கள் ஒதுக்கப்படுகின்றன. அவர்களின் பட்டப் படிப்பு காலம் முழுவதிலும், இந்த குடும்பங்களை முன்னேற்றத்தில் பங்கெடுத்துக் கொள்வதில் வழி நடத்திச் செல்வதும், அதில் அவர்கள் அடையும் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதும், மாணவர்களது பாடதிட்டத்தின் படியும், புறப்பாடத் திட்டத்தின்படியுமான கடமையாக இருக்கும். தற்போதுள்ள தொழில்நுட்ப அறிவை கிராமப்புற குடும்பத்தினருக்குக் கற்பிப்பது, அவர்கள் விரும்பும் பயிற்சியை அளிப்பது, கல்வி மற்றும் உடல்நலம் பேணுதல் பற்றிய அடிப்படை அறிவை அளிப்பது, அவர்களின் மனங்களிலிருந்து மூட நம்பிக்கைகளை அகற்றுவது ஆகியவையும் இவற்றில் அடங்கும். மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடும்பங்களைக் கண்காணித்து அவர்கள் அடைந்து வரும் முன்னேற்றங்களை ஆவணப்படுத்துவார்கள்.
இதன் மூலம் பெரியார் புரா திட்ட நடைமுறையினை எந்த வித பாகுபாடும், விருப்புவெறுப்பும் அற்ற முறையில் மதிப்பீடு செய்து கண்காணிக்க இது உதவுகிறது. இவ்வாறு மாணவர்கள் கிராமப்புற மக்களுடன் இணைந்து செயலாற்றுவதனால், ஒருவரைப் பற்றி மற்றவருக்கு மரியாதையும், மதிப்பும் தோன்றி வளர்கிறது. இது, கிராமப்புற வாழ்க்கை பற்றிய அடிப்படை நிலையிலான புரிதலை மாணவர்களுக்கு கைமேல் கிடைக்கச் செய்வதால், வாழ்க்கை பற்றிய அவர்களின் கண்ணோட்டம் விரிவடைய பயன் நிறைந்ததாக அமைகிறது. மாணவர்கள் எதிர்காலத்தில் தாங்கள் விரும்பி தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தொழில் வாழ்க்கைக்கும் அது பெரிதும் உதவுகிறது.
( TARGET 3 BILLION... பக்கம் 200 தமிழாக்கம்)
No comments:
Post a Comment