ஆரியர் என்று பெருமையாகப் பேசிக் கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. இப்பொழுது அது ஆரியப் பார்ப்பனருக்குப் பாதிப்பாக அமைந்து விட்ட சூழலில் ஆரியர்-திராவிடர் என்பதெல்லாம் பொய் -புரட்டு - கிறிஸ்துவர்கள் கட்டிவிட்டது என்று பார்ப்பனர்கள் பேச ஆரம்பித்துவிட்டனர். கட்டுரைகளை எழுத ஆரம்பித்து விட்டனர். பெரிய பெரிய புத்தகங்களையும் வெளியிட ஆரம்பித்துவிட்டனர்.
அந்த வகையில் இரு பார்ப்பனர்கள் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
உடையும் இந்தியா?
ஆரிய திராவிடப் புரட்டும், அந்நியத் தலையீடுகளும் என்னும் தலைப்பில் 764 பக்கங்களைக் கொண்ட நூலாக வெளிவந்துள்ளது.
திராவிட இனம் என்ற ஒன்றே கிடையாதாம். திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தவறாகப் பிரச்சாரம் செய்கிறார்களாம்!
நமது தலைவர்கள் மீது சேற்றை வாரி இறைக்கும் வேலையில் பார்ப்பனர்கள் நேரிடையாகவே ஈடுபட முன் வந்துவிட்டனர்.
அதற்கான அரசியல் சூழல் அவர்களுக்குக் கிடைத்து விட்டதாக ஒரு மிதப்பில் பார்ப்பனர்கள் முண்டா தட்டிக் களத்தில் இறங்கிவிட்டனர்.
நான்கு நாள்களுக்கு முன் சென்னையில் இந்நூலின் வெளியீட்டு விழா நடந்திருக்கிறது. அதில் தந்தை பெரியார் பற்றியும், திராவிட இயக்க முன்னோடிகள் குறித்தும் வாய்க்கு வந்தவாறு கேவலமாகப் பேசியுள்ளனர்.
பார்ப்பனர்கள் - அவர்களுக்குத் தொங்கு சதையாகப் போய்விட்டவர்களை கழகம் சந்திக்கும் - நேரிடையாகவே அதனை சந்திக்கும்.
அதற்கான சிறப்புக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் - திராவிடர் கழகத்தின் சார்பில் நாளையும், மறுநாளும் (8, 9 ஞாயிறு, திங்கள் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டங்களைக் குறித்தும், அந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசி இருக்கிறார்கள், வீரமணி என்ன பதில் சொல்கிறார் பார்ப்போம் என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சோவின் தலைமையில் பார்ப்பனர்கள் பச்சையாக திராவிடர்களைச் சீண்ட களம் இறங்கிவிட்டனர்.
சோவின் தலைமையில் பார்ப்பனர்கள் பச்சையாக திராவிடர்களைச் சீண்ட களம் இறங்கிவிட்டனர்.
தமிழர்களே! என்ன செய்யப்போகிறீர்கள்?
இரண்டு நாட்களிலும் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றவிருக்கிறார். பார்ப்பனர்களால் எழுதப்பட்ட நூல்களின் முகத்திரை கிழிக்கப்பட உள்ளது.
வரலாற்றுப் பேராசிரியர்கள் அ.இராமசாமி, ந.க.மங்களமுருகேசன், அ.கருணானந்தன் ஆகியோரும் ஆய்வுரை வழங்கிட உள்ளனர்.
தமிழர்களே திரள்வீர்! திரள்வீர்!
தமிழர்களே திரள்வீர்! திரள்வீர்!
No comments:
Post a Comment