Sunday, January 8, 2012

இந்தியாவின் முன்னுதாரணம் இல்லாத மகத்தான மானுட ஆளுமையாளர் பெரியார்!

ஜெர்மன் மார்க்சிய அறிஞர் வால்டர் ரூபன் கூறியதை எடுத்துக்காட்டி எழுத்தாளர் பொன்னீலன் பெருமிதம்
வல்லம், ஜன.7- இந்தியாவின் முன்னுதாரணம் இல்லாத மகத்தான மானுட ஆளுமையாளர் (Un Precedented Human Personality) பெரியார் என்று ஜெர்மன் நாட்டை சேர்ந்த மார்க் சிய ஆய்வாளர் வால்டர் ரூபன் கூறியதை எடுத்துக்காட்டி பிரபல எழுத்தாளர் பொன்னீலன் பேசி னார். மறுபக்கம் என்று எழுத் தாளர் பொன்னீலன் அவர்களால் எழுதப்பட்ட நாவலுக்கு - பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத் தின் சார்பில் பெரியார் விருது அளிக்கப்பட்ட விழாவில் (25.12.2011) பொன்னீலன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். அவர் பணிகளைத் தம் வாழ்நாட் பணிகளாய்த் தொடர்ந்த அன்னை மணியம்மை இருவர் பெயரிலும் அமைந்து, கல்விப் பணியோடு, இந்திய சமுதாயப் பெரு நோயைக் குணப்படுத்தும் மருத்துவப் பணியையும் சிறப் பாகச் செய்துவரும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் தின் வணக்கத்துக்குரிய வேந்தர்.      பெரியாரின் பகுத்தறிவுத் தொண் டுகளைப் பேணி வளர்த்து வரும் தோழர் கி.வீரமணி அவர்களே, மதிப்பிற்குரிய துணைவேந்தர் அவர்களே, இயக்குநர் அவர் களே, பதிவாளர் அவர்களே, பேராசிரியர் பெருமக்களே, மதிப் புக்குரிய விருந்தினர்களே, நண் பர்களே, தோழர்களே, இப்பல் கலைக்கழகத்தில் வடிவம் பெறும் பேறு பெற்ற மாணவச் செல்வங் களே, உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.


இலக்கியத்தின் சிறப்பு எப்போது?

இலக்கியம் வாசகர்களை நெகிழ வைக்க வேண்டும் அந்த நெகிழ்ச்சி அவர்களை எழுச்சி பெறச் செய்ய வேண்டும். அறிவும், அறமும், அழகும் மேம்பட ஒரு சமத்துவ வளர்ச்சியை நோக்கிச் சமுதாயம் இயங்க அந்த நெகிழ்ச்சி வாசகர்களைத் தூண்ட வேண்டுமென்கிற அழுத்தமான நோக்கமுடையவன் நான், என் படைப்புகள் அனைத்துமே அத் தகைய பார்வை கொண்டவை தாம். ஆனாலும், அவை இலக்கிய வட்டத்தை மீறி, சமூக அமைப் புகளில் விமர்சனத்துக்கு இது வரை எடுத்துக் கொள்ளப்பட வில்லை. ஒரு இலக்கியம் எப் போது சமூகப்பொருளாகிறது? அது இலக்கிய வட்டத்தைத் தாண்டி, சமூகத் தினுள் செயல் படத் தொடங்கும் போது தான்.

மறுபக்கம் நாவல் இலக்கிய வட்டத்தைக் கடந்து, சமூக வட் டத்தினுள் விவாதப்பொருளாக நுழைந்திருக்கிறது என்பதை வணக்கத்துக்குரிய வேந்தர், என் இனிய தோழர் கி. வீரமணி அவர்கள் என்னுடன் தொலை பேசியில் உரையாடிய போது உணர்ந்து மகிழ்ச்சியடைந்தேன். நாவல் எங்கே போக வேண்டுமோ அங்கே போகத்தொடங்கி விட் டது என உணர்ந்தேன். மறு பக்கத்தைப் பல மாதங்களுக்கு முன்னரே படித்து விட்டேன். அது பற்றிய ஒரு மதிப்புரை அடுத்த ஞாயிறு அன்று விடுதலை நாளிதழில் வருகிறது. படியுங்கள் என்று சொன்ன அவர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் தில் இந்த நூல் தொடர்பாக ஒரு பாராட்டு விழா விரைவில் ஏற்பாடு செய்யப்படும். அதற்கும் நீங்கள் கட்டாயம் வரவேண்டும் என்றும் அப்போதே அழைப்பு விடுத்தார். நான் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன்.

அடேயப்பா! வீரமணிக்குள் இப்படி ஒரு சமூக எழுச்சிச் சிந்தனையா?

1985 டிசம்பர் இறுதி என்று கருதுகிறேன். இன்று ரஷ்யாவாக இருக்கும் அன்றைய சோவியத் யூனிய னுக்கு. அந்த நாட்டைச் சுற்றிப்பார்க்கச் சென்ற குழுவில் திரு.வீரமணி அவர் களுடன் செல்லும் அரிய வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. ஒரு நாள் காலையில், மாஸ்கோவில் ஒரு சாலையில் நாங்கள் நடந்து கொண்டிருந்தோம், துப்புரவுத் தொழிலாளர்கள் சிலர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுக் கொண் டிருந்ததைப் பார்த்தோம். அவர்களு டைய கம்பீரமான தோற்றம். அவர்கள் அணிந்திருந்த உயர்ரகத் தூய ஆடைகள். எல்லாமே எங்களைக் கவர்ந்தன. இதைப் பார்த்து தோழர் கி. வீரமணி அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். அடேயப்பா, இப்படி ஒரு காட்சியா? என்று அதிசயித்தபடி, தன் கையிலிருந்த கேமராவை என்னிடம் கொடுத்தார். பொன்னீலன் இந்த அபூர்வமான காட்சியைக் கேமராவில் பதிவு செய் யுங்கள் என்று சொல்விட்டு. அவர் களிடம் போய். அவர்கள் தோள்களில் கைபோட்டு, அணைத்தபடி முறுவலித்தார்.

எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. இந்த மனிதருக்குள்ளே சமூக எழுச்சிச் சிந்தனை எவ்வளவு தீவிரமாய்க் கொதித்துக்  கொந்தளித்துக் கொண்டிருக்கிறது? இம் மாதிரியான சமூக எழுச்சி நம் இந்தியா விலும் வரவேண்டுமென்று அவர் மனதில் எப்பேர்ப்பட்ட ஆசை இருந்திருந்தால், அவர் இந்தத் தெருக்கூட்டும் தோழர் களை இத்தனை நெருக்கமாக அணைத்துக் கொண்டு நிற்பார்! நம் நாட்டில். புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரரும், நெடுங்காலம் மத்திய ராணுவ மந்திரியாக இருந்த வருமான பாபு ஜெகஜீவன்ராம் என்னும் பெருமகன் உத்திரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராயிருந்த சம்பூர்ணானந்தா வின் சிலையைத் திறந்துவைத்துவிட்டுப் போன பிறகு, அந்தச் சிலையையும், பாபு ஜெக ஜீவன்ராம் நடந்த பாதையையும் கங்கை நீர்விட்டுக் கழுவிய மனுதர்மப் பேரழுக்கு நிறைந்த அருவருப்பான மனிதர்கள் நிறைந்த நம்நாடு என் நினைவுக்கு வந்தது. சம்பூர்ணானந்தா சிலையைக் கழுவியவர்களையும். தோழர் கி.வீரமணி அவர்களையும் நான் ஒப்பிட்டுப் பார்த்தேன். வீரமணி அவர்களின் மனநிலை இந்தியப் பொது மனநிலையாக மாற நாம் இன்னும் எத்தனை யுகங்கள் காத்திருக்க வேண்டும்? இந்திய வைதிக அடர் அழுக்கு நம் பொதுப்புத்தியிலிருந்து கழுவித்துடைக்கப்பட்டு, இந்தியப் பொதுமனம் எப்போது தூய்மையடை யும்? இந்த கேள்வியின் விடை காணத்தன் வாழ்வையே அர்ப் பணித்த மாமேதையே பகுத்தறிவுப் பகலவன், வெண்தாடி வேந்தர், சமூகப்போராளி தந்தை பெரியார் அவர்கள். இந்தப் பெருங் கேள் வியின் ஒரு கலை வடிவமே மறுபக்கம் நாவல். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் அந்த நாவலுக்குப் பெரியார் விருதுவழங்கிச் சிறப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தோழர் கே.டி.கே. தங்கமணி

தோழர் கே.டி.கே.தங்கமணி அவர்களை நீங்கள் யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன், உலக கம்யூனிஸ்ட் தலைவர்களால் மதித்துப் பாராட்டப்பட்ட பெருமகனார் அவர், செஞ்சீனத்தின் தந்தை மா சே துங் அவர்களால் வரவேற்கப்பட்டு, உலக மக்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப் பியவர். பிரதமர் நேரு காலத்தில், கே.டி.கே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, வியட்நாம் வீரர் ஹோ சி மின் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. நாடாளு மன்ற உறுப்பினர்களை ஒருவர் ஒருவராக ஹோ சி மின்னுக்கு அறிமுகம் செய்து கொண்டு வந்தார் பிரதமர் நேரு, கே.டி. கே.தங்கமணியை அறிமுகம் செய்ய வேண்டிய நேரம் வந்தது. ஆனால், ஹோ சி மின் முந்திக்கொண்டு, இவரை ஏற்கெ னவே எனக்குத் தெரியும். வியட்நாம் போர்ச் சூழல், நான் பதுங்கு குழியில் தங்கி இருந்தபோது, என்னைத் தேடிவந்து சந்தித்தார் என்று நேருவுக்கே அறிமுகம் செய்தார். இளமையில், பாரிஸ்டர் பட்டம் பெற்றதும், கே.டி.கே. சிங்கப்பூரில் வழக்கறிஞராகப் பணிசெய்துகொண்டிருந்தார். அக்காலத்தில் தனக்கு முடி திருத்தி கொண்டிருந்த தொழிலாளரின் தலைமை யில் சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்டவர் அவர். இந்தச்சிந்தனை உங்களுக்கு எப்படி வந்தது? என நான் அவரைக் கேட்டபோது, அவர் சொன்னார்.  நான் இளமையில் பெரியார் சிந்தனையில் ஊறித்திளைத்து வளர்ந்தவன். விருதுநகர் சுயமரியாதை மாநாட்டில் நான் முழுமை யாகக் கலந்து உணர்வு பெற்றவன். என் தந்தையாருக்கும் பெரியாருக்கும் நெருங் கிய நட்பு இருந்தது என்றார். அந்த கே.டி.கே தங்கமணி பெரியாரைப்பற்றிச் சொன்ன ஒரு செய்தியை இங்கே பதிவுசெய்வது பொருத்தமாய் இருக்கும் எனக்கருதுகிறேன். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன், அன்றைய ஜர்மன் ஜனநாயகக் குடியரசின் (கிழக்கு ஜர்மனி) தலைநகரான பெர்லினில். உலகத்தத்துவ அறிஞர்கள் மாநாடு ஒன்று நடை பெற்றது. அதில் கலந்து கொள்ள உலகம் முழுவதிலிருந்தும் தத்துவ அறிஞர்கள் அங்கே கூடியிருந்தார்கள்.

இந்தியாவில் முன்னுதாரணம் இல்லாத மகத்தான மானுட ஆளுமை உடையவர் 
யார்?

அந்த மாநாட்டை முன்நின்று நடத்தியவர் அன்றைய உலகப் பேரறிஞர் வால்ட்டர் ரூபன், ஜர்மானிய மார்க்சிய லெனினியத் தத்துவ அறிஞரான அவர். உலகின் மிகச்சிறந்த இந்தியவியலாளரும் கூட, பேரறிஞர்கள் மார்க்ஸ் முல்லர். ஹெர்மன் ஒல்டன்பர்க் ஹெர்மன் ஜேகோபி. ஹென்ரிச் லூடர்ஸ் இவர் களின் வரிசையில் வைத்துப் போற்றப் படும் அறிஞர் அவர்.

இந்தியத் தத்துவம் பற்றியும் வால்ட் டர் ரூபன் நிறைய எழுதியுள்ளார், கவி காளிதாசர் பற்றி விரிவான ஆய்வு செய்து, alidhasa, the human meaning of his works என்னும் புகழ் பெற்ற நூலை எழுதியி ருக்கிறார், காளிதாசர் அடித்தட்டு மக்கள் சார்ந்த கவிஞர் என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி அதில் நிறுவினார் அவர். இந்தியாவிலிருந்தும் அந்த மாநாட்டுக்கு ஒரு சிலர் அழைக்கப் பட்டிருந்தார்கள், அவர்களில் முக்கிய மானவர் மார்க்சீய அறிஞர் தேவிப் பிரசாத் சாட்டோபாத்தியாயா.

இந்திய தத்துவ மேதையும், குடியரசுத் தலை வருமான டாக்டர், எஸ்.ராதாகிருஷ் ணனின் நேரடி மாணவர் அவர்.  மார்க்சிய வழியில், பகுத்தறிவு சார்ந்த பார்வையில் இந்தியத்தத்துவங்களை ஆராய்ச்சி செய்த விற்பன்னர் அவர், இந்தியத் தத்துவ மரபுகளில் லோகாயதமும் முக்கியமான ஒன்று என்று பெரும் ஆராய்ச்சிகளின் வழி நிறுவியவர். தன்னைவிடவும் உயர்ந்த தத்துவ அறிஞர் என டாக்டர், ராதாகி ருஷ்ணனாலேயே பாராட்டப்பட்டவர் அவர். அவருடன் வேறு சில அறிஞர் களும் மாநாட்டில் முழுமையாகப் பங் கேற்றார்கள். மாநாட்டு இடை வேளையில். இந்த அறிஞர்கள் கூடி உரையாடிக் கொண்டிருந்த போது. வால்ட்டர் ரூபன் இந்திய அறிஞர் களிடம் ஒரு கேள்வியைப் போட்டார், இன்றைய இந்தியாவின் முன்உதாரணம் இல்லாத மகத்தான மானுட ஆளுமை என்பது கேள்வி, ஆங்கிலத்தில் Who is the unprecedented human personality of the present india? இந்திய அறிஞர்கள் பதில் சொல்லத் திகைத்தார்கள், நீண்ட நேர யோசனைக் குப்பின். அது காந்தி என்று சொன்னார் ஒரு அறிஞர், காந்திக்கு முன்உதாரணமாக புத்தர் இருந்தி ருக்கிறாரே. வேறு சொல்லுங்கள் என்றார் ரூபன், ஜவர் கலால் நேரு என்றார் இன்னொருவர், அவருக்கும் முன் உதார ணமாக அசோகர் இருந்திருக்கிறாரே. என்றார் வால்ட்டர் ரூபன்.

ஆம், அவர் பெரியார் ஈ.வெ.ரா.தான்!

அதற்கு மேலே பதில் சொல்லத் தெரியவில்லை இந்திய அறிஞர்களுக்கு. நீங்களே சொல்லிவிடுங்கள் என்றார்கள் அவர்கள் வால்ட்டர் ரூபனிடம். இந்தியா வின் முன் உதாரணமற்ற பேராளுமை பெரியார் ஈ.வெ.ரா.தான் என்றார் ரூபன். எந்த அடிப்படையில் சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்கள். இந்திய சமூகத்தில் மேலிருந்து கீழே வரை பரவி,சமூக வளர்ச்சியை முடக்கிக் கொண்டிருக்கும் மிகப் பெரிய நோய் வருணாசிரம தர்மம். இந்த நோய்க்கு எதிராகத் தெளிவாக, மூர்க்கமாகப் போராடுகிறவர் பெரியார் ஈ.வெ.ரா. முன்னுதாரணமற்ற ஆளுமை இவரே என்றார் ரூபன்.

பெரியாரின் ஒற்றை லட்சியம் எது?

மிகப்பெரிய உண்மை இது. பெரியா ரின் வாழ்வும் பணியும் இந்த ஒற்றை லட்சியத்தை நோக்கியே எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல், அவர் காலம் முழுவதும் வளர்ந்தது, அவருடைய சேரன்மாதேவி குருகுலப் பேராட்டமோ, வைக்கம் போராட்டமோ, காங்கிரஸ் எதிர்ப்புப் போராட்டமோ, பார்ப்பனர் எதிர்ப்புப் போராட்டமோ, பிள்ளையார் உடைப்புப் போராட்டமோ, இந்தி எதிர்ப்புப் போராட்டமோ, அரசியல் சட்ட எரிப்புப் போராட்டமோ. எல்லா வற்றுக்கும் அடிப்படை இந்த வருணா சிரம எதிர்ப்பு நிலைதான். அவர் காமராசரை ஆதரித்ததும், குன்றக்குடி அடிகளாரைத் தோழமை கொண்டதும் இந்தத் தளத்தில் வலுவாக நின்று கொண்டுதான்.

இந்தத் தளத்துக்குப் பெரியார் எப்படி வந்து சேர்ந்தார்? அபூர்வமான அறிவும், நுட்பமான பகுத்தறியும் திறனும் கொண் டவர் பெரியார். சமூக அனுபவங்கள் அவரைப் பிடர்பிடித்து உந்தித் தள்ளின. நான் இங்கு சொல்வது ஒருவேளை உங் களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கக் கூடும், என்னை விட ஆயிரம் மடங்கு பெரியாரில் மூழ்கி முத்தெடுத்தவர்கள் நீங்கள். ஆனாலும் பெரியார் என்னும் பேராளுமையின் ஊற்றுக் கண்ணாக இது இருப்பதால், இங்கே மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.

பெரியார் வாழ்வில் நடந்த ஒரு திருப்பம்தரும் நிகழ்வு!

பெரியார் பெரும் செல்வந்தர் வீட்டுப் பிள்ளை, 1900-த்தில் ஆண்டுக்கு 500 ரூபாய் வருமான வரி கட்டிய வளமான குடும்பம் அவர் குடும்பம், 1902இல் பெரி யாருக்கு வயது 23, திருமணமாகிவிட்டது. அப்பொழுது ஈரோட்டில் ஒரு சம்பவம் நடக்கிறது, ஈரோட்டில் வாழும் நகரத் தார் ஜாதியைச் சார்ந்த வியாபாரிகள் ஒரு பிராமணத் துறவிக்கு விருந்து கொடுக்கத் திட்டமிடுகிறார்கள். அதற்காக ஊர் முழுக்க வசூல் செய்கிறார்கள். பெரி யாரின் தந்தையாரும் அந்த விருந்துக்காக ரூ.50 நன்கொடை அளிக்கிறார். சாதா ரண விருந்தல்ல அது. ஈரோட்டில் வாழும் பிராமணர்கள் அனைவருக்கும் போடும் பெருவிருந்து.   அந்த பிராமணத் துறவிக்கு ஒரு போக்கிரித் தம்பி, பிறரிடம் பெருந் தொகைகள் கடன் வாங்கிவிட்டுக் கொடுக்காமல் ஏமாற்றும் பழக்க முள்ளவர் அவர், ஊரில் ஒருவரிடம் பெருந்தொகை கடன் வாங்கி, திருப்பிக் கொடுக்காததால், அந்தக் கடைக்காரர் இவரைக் கோபத்தோடு தேடிக் கொண்டிருக்கிறார்.

விருந்தன்று பிராமணத் துறவியை ஊர்வலமாக அழைத்துக் கொண்டு வருகிறார்கள், நகரத்தார் பெருமக்கள், துறவியின் தம்பியான மோசடிப் பேர் வழியும், ஊர்வலத்தில் வருகிறார். தன்னை என்ன செய்ய முடியும் என்ற தெம்பில் அவரைப் பார்த்துவிட்டார் வியாபாரி. பெரியாரிடம் இதைச் சொல்லுகிறார். பெரியாரின் ஆலோசனைப்படி, காவல் நிலையத்தில் புகார் செய்கிறார் அவர்.
பெரியார் சொன்னபடி வாரண்டோடு வந்தார் கடன் கொடுத்த வியாபாரி.

அவரைக் கூட்டிக் கொண்டு எல்லய்யர் சத்திரத்துக்குச் சென்றார் பெரியார். உள்ளே 200 பிராமணர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.

சத்திரத்துக்கு வெளியே பெரியார் நின்று கொண்டு, சாமியார் தம்பிக்கு ஆள் அனுப்பினார். வெளியே வந்தான். வாரண்டுடன் சேவகன் நிற்பதைக் கண்டு ஓடினார். பெரியார் விடவில்லை. அவன் கையைப் பிடித்து இழுத்தார். அவன் திமிரிக் கொண்டு சத்திரத்துக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண் டான்.
பெரியார் என்ன செய்தார்? தூணைப் பிடித்து, மேலே ஏறி ஓடுகள் உடைய புறக்கடைப்பக்கம் வீட்டுக்குள் குதித்தார்.

சாப்பாடு நடக்கும் இடத்தையும் பார்ப்பனர் சாப்பிடும் பந்தியையும் தாண்டி வந்து, வீதிக் கதவைத் திறந்து; சேவகனைக் கூப்பிட்டு அறைக்குள் ஒளிந்து கொண்டிருந்த சாமியாரின் கையைப் பிடித்து சேவகனிடம் ஒப் படைத்தார் பெரியார். அதிர்ச்சியுற்ற நகரத்தார். பெரியாரின் தந்தை வெங்கடப்பநாயக்கரிடம் இதைப் புகார் செய்கிறார்கள். கோபம் கொண்ட அவர், தன் வாயில் கிடந்த வெற்றிலைச் சாற்றை மகனின் வெள்ளைச் சட்டையில் துப்பி, புகார் செய்ய வந்தவர்கள் வாசலில் கழட்டி விட்டிருந்த செருப்புகளில் ஒன் றால் பெரியாரைக் கடுமையாக அடித்து விடுகிறார். எதுவும் பேசாமல், கடையில் இருந்தபடி யோசிக்கிறார் பெரியார். போதி மரத்தடியில் புத்தருக்குத் தெளிவு கிடைத்தது போல, பெரியாருக்கும் தெளிவு கிடைக்கிறது.

பெரியாரைச் சுட்டது!

தீண்டாமை நோயின் உக்கிரம் அவரைச்சுடுகிறது, இந்தப் பெரு நோயை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றுகிறது. அனைத்துச் சாதியினருக்கும் சமமான மரியாதை யுடன் உணவு படைக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, எல்லாரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற எண்ண மும் அவர் மனதில் தோன்றுகிறது. நகரத்திலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களிடம் பழகுகிறார். அன்று பரத்தையர் என்று ஒரு வகுப்பார் இருந்த சூழல், அவர் களுடைய ஒதுக்கி வைக்கப்பட்ட மகன் களுடன் சரிசமமாகப் பழகுகிறார். விளிம்பு நிலை மக்களிடம் பழகுகிறார். இந்தப் பழக்கம் வளர்ந்து படர்ந்து, பெரியாரியம் என்னும் பெரும் கோட் பாடாகி, வால்ட்டர் ரூபனை அப்படிச் சொல்ல வைத்தது. இந்தப் பெரியார் பெயரில் விருது பெறுவதில் மிகவும் பெருமையடைகிறேன்.

பெரியாருடன் ஜீவா

இளமையிலேயே பெரியார் சிந்தனை யால் ஈர்க்கப்பட்டவர் ஜீவா, பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, தன்னுடன் படித்துக் கொண்டிருந்த தலித் தோழர் மண்ணடி மாணிக்கத்தை பூதப் பாண்டி தெருவினுள் அழைத்து வந்ததற் காகத் தந்தையாரால் உதைக்கப்பட்டவர். வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டு, தன் பள்ளிப்படிப்பை இழந் தவர். சுசீந்திரம் தெரு நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்டு, ஊருக் குள்ளே நுழைய முடியாமல் சேரன்மா தேவி ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்தவர். அங்கே பெரியார் நடத்திய வருணாசிரம எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு, வடக்கே சிராவயலில் காந்தி ஆசிரமத்துக்கு வந்தவர். அந்த ஆசிர மத்துக்குக் காந்தியடிகள் வந்தபோது, உங்கள் வருணாசிரமக் கொள்கை எனக்கு உடன்பாடில்லை என்று முகத்துக்கு நேரே அடித்துப் பேசியவர். சிராவய லிலேயே தலித் குழந்தைகளுக்கு ஆதர வாக உயர் சாதிப் பெயரியவர்களை எதிர்த்தவர்.

இந்தச் சூழல், காரைக்குடியை ஒட்டிய தொம்மாப்பட்டு கிராமத்துக்கு உரை யாற்றுவதற்காகப் பெரியார் வருகிறார். பெரியார் தலைமையில் உரையாற்றும் வாய்ப்பு ஜீவாவுக்குக் கிடைக்கிறது. இளைஞர் ஜீவாவிடம் சிறப்பான திறமைகள் இருப்பதை உய்த்துணர்ந்த பெரியார், மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம். இப்போது பெரியவர் களுக்குச் சொல்லிக் கொடுக்க என்னோடு வாருங்கள் என்று அவரைக் கையோடு அழைத்துச் செல்லுகிறார். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் தொடர்பால் கம்யூனிசக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டு, ரஷ்யாவில் விரிவாகச் சுற்றுப் பயணம் செய்து, தமிழ்நாட்டில் கம்யூனிச நூல்களை வெளியிடும் முதல் ஆசிரிய ராகப் பெருமை கொள்கிறார் பெரியார். இருவரின் சிந்தனை இணைப்பால் சுயமரியாதைச் சமதருமம் என்னும் புதிய சிந்தனை வடிவம் தமிழுக்குக் கிடைக் கிறது. பெரியார் ஜீவா கூட்டு முயற்சியால், ஈரோட்டுப் பாதை என்னும் புத்தம் புதிய அரசியல் சமூக அறப்பார்வை உருவா கிறது. சுயமரியாதை சமதர்மக் கட்சியும் உருவாகிறது.

ஆனால் அந்த இயக்கம் தொடர வில்லை. சுயமரியாதையும் சமதருமமும் தம்தம் திசையில் தொடர்ந்து செயல்படும் சூழ்நிலை ஏற்பட்டது. வரலாற்றின் மீது தீர்ப்புச்சொல்லும் உரிமை எனக்கில்லை. ஆனாலும் சமதர்ம இயக்கம் அரசுகளால் வேட்டையாடப்பட்ட எல்லாக் காலங் களிலும், அதற்குத்தம் மாலான பாது காப்புகள் கொடுத்த இயக்கம் சுயமரி யாதை இயக்கமே என்பது வரலாறு சொல்லும் செய்தி.

இந்தியாவை விழுங்கத் துடிக்கும் வைதீகம் தோழர்களே, பெரியார் தன் காலம் முழுவதும் களத்தில் எதிர்த்துப் போரா டிய வைதீகம் இந்தியாவை விழுங்கக் கடுமையாக முயன்று கொண்டிருக்கிறது. மறுபக்கம் நாவலில் இந்த ஆபத்து தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக் கிறது, நாவலில் பெரியார் சொல்லுவார் : நான்முகனே உன் மூன்று முகங்களை அறுத்து, ஒரு முகனாக்குவேன். நால் வருணத்தை ஒரு வருணமாக்குவேன் என்னும் சொல்லின் கலைவடிவம் இது. இந்த நாவல் தமிழ்நாட்டுக் களத்தில் பதிவுசெய்யப்பட்டிருப்பதால், அண்ணல் அம்பேத்கரை அழைக்க முடியவில்லை. ஆயினும் அவரை நாவலில் பொருத்த மான இடத்தில் பதிவு செய்திருக்கிறேன். கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் அடையாள மாகத் தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் வருகிறார்.மனுதர்மத்தால் இழிவு செய்யப் பட்ட பெண்ணின் விடுதலை அடையா ளமாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி வருகிறார். எல்லாருடைய நோக்கமும் ஒன்றே, சமூக சமத்துவம் அது.

பெரியாரியம் - மார்க்சியம் - அம்பேத்கரியம்

இந்தியா நெருக்கடியான சூழலில் தவித்துக் கொண்டிருக்கிறது. ஜனநாய கமே கேள்விக் குறியாக்கப்படுகிறது. மதச் சார்பின்மையும், மனிதநேயமும் தடு மாறிக் கொண்டிருக்கின்றன. பெரியாரி யமும், மார்க்சியமும், அம்பேத்கரியமும் களத்தில் கைகோர்த்துநின்று எதிரியை வீழ்த்த இதுவே தகுந்த காலம். இந்த மூன்று இயக்கங்களுக்கும் தனித்தனியான களங்களும், செயல்பாடுகளும் இந்தியச் சூழலில் உண்டு, என்றாலும். மூன்றின் அடிப்படைகளும் ஒன்றே. இதையே மறுபக்கம் நாவலில் என்னுடைய கலை மொழியில் வெளிப்படுத்த முயன்றிருக் கிறேன். இதையே இப்போது வலியுறுத் துகிறேன்.

அபூர்வமான கணம்!

மறுபக்கம் நாவலைப் பலர் பல கோணங்களில் வாசித்திருக்கிறார்கள், மதிப்பிட்டும் இருக்கிறார்கள். பெரு மளவுக்குச் சமூக தளத்தில் நின்று அதை மதிப்பிட்டுச் சிறப்பிப்பவர் மதிப்புக்குரிய தோழர் கி.வீரமணி அவர்களே. நூலுக்கு விடுதலை இதழில் மிக விரிவான மதிப்புரை தந்ததோடு, நாவலுக்கான ஒரு பாராட்டு விழாவையும் சமூகப்பார்வை உள்ள இந்தப் பல்கலைக் கழகத்தில் இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்தி ருக்கிறார். பெரியார் விருது பெறுவது என் வாழ்வின் அபூர்வமான கணங்களில் ஒன்று. தோழர் வீரமணி அவர்களுக்கும், பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்களுக்கும், இங்கே கூடியி ருக்கும் இருபால் நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...