மேற்கு ஆஸ்திரேலி யாவின் ஓர் ஒதுக்குப் புறமான பகுதியில் இருக் கும் அகஸ்டஸ் மலை அல்லது புர்ரின்குரா (Burringurrah) என்பது தான் உலகில் உள்ள மிகப் பெரிய தனி கற்பாறை யாகும். உலுரு அல்லது ஆயர்ஸ் (Uluru or Ayers Rock) கற்பாறையைப் போன்று இரண் டரை மடங்குக்கு மேற்பட்டது இது. அதிகமாக அறியப்பட்டிராத, ஆனால் உலகிலேயே மிகவும் அதிக வியப்பும் மகிழ்ச்சியும் அளிக்கும் இடங்களில் இதுவும் ஒன்று.
அதன் சுற்றளவில் இருந்து அது 858 மீட்டர் (2,815 அடி) உயரம் கொண்டது. அதன் தொடர் 8 கி.மீ. (5 மைல்) நீளம் கொண்டது.
உலுருவை விட பெரியதாகவும், உயரமானதாகவும் மட்டும் அது இருக்க வில்லை. அதன் கற்பாறை மிகவும் பழமை வாய்ந்தது. 100 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்தில் இருந்தவற்றின் எச்சம்தான் நம் கண்களுக்குத் தெரியும் அதன் பழுப்பு நிற சுண்ணாம்புக் கற்களாகும். இந்த சுண்ணாம்புக் கற்களுக்குக் கீழே அடித்தளத்தில் இருக்கும் கற்கள் 165 கோடி ஆண்டுகள் பழமையான கிரானைட் கற்களாகும். உலுருவில் இருக்கும் மிகப் பழமையான சுண்ணாம்புக் கல் 40 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதுதான். வட்ஜாரி மக்களுக்கு இந்தக் கற்பாறை புனிதம் மிக்கதாகும். பயிற்சி அளிக்கத் தொடங்கும் விழாவில் இருந்து தப்பிக்க முயன்ற ஒரு இளைஞன் புர்ரின்கர்ரா (Burringurrah) என்பவன் பெயரால் அது அழைக்கப்டுகிறது. தப்பிச் சென்ற அவனைத் துரத்திச் சென்ற பெண்கள் அவனது காலில் ஈட்டியைக் குத்தி அவனை தடிகளால் அடித்துக் கொன்றனர். வயிறு தரையில் படும்படி வீழ்ந்திருக்கும், கால்கள் நெஞ்சை நோக்கி மடக்கி இருக்க, அதில் இருந்து ஒரு ஈட்டியின் முனை துருத்திக் கொண்டிருப்பது போன்று அவனது உடல் விழுந்து கிடப்பது போலவே அந்த கற்பாறையின் வடிவம் தோற்றமளிக்கிறது.
இந்தப் பாறை பற்றிய கதையின் இறுதியான இன்னுமொரு செய்தி. இந்த அகஸ்டஸ் மலை ஒரே ஒரு கல்லால் ஆனது. உலுரு அதைப் போன்றதல்ல. பூமிக்கு அடியில் அமைந்திருக்கும் ஒரு பெரிய கற்பாறையின் ஒரு முனைதான் இந்த அகஸ்டஸ் மலை. பூமிக்கு மேல் தலையை நீட்டி இருக்கும் கான்னர் மலையும் (Attila) ஒல்கா மலையும் (Kata Tjuta) இந்தப் நிலத்தடிப் பாறையின் பகுதிகள்தாம்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)
1 comment:
அறிய தகவல் தந்தமைக்கு நன்றி
Post a Comment