ரெயின்டீர் எனப்படும் பெரிய வகை மான்தான் முதன் முதலாகவீட்டில் வளர்க்கப்பட்ட பிராணி யாகும். தற்போதைய ருசிய மங்கோலிய எல்லையில் 14,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கற்கால மனிதர்கள், கூட்டமாக இடம் பெயர்ந்து வரும் இந்த மான்களின் கூட்டத்தில் இருந்து ஓரிரு மான்களை ஆசை காட்டி பிரித்து, தங்கள் வீடுகளில் வளர்த்து, தங்களுக்கென ஒரு சிறு மந்தையை உண்டாக்கிக் கொண்டனர்.
இந்த மான்களின் பாலும், இறைச்சியும் உண்பதற்கும் அதன் மெல்லிய தோல் (fur) ஆடைக்கும் பயன்படுகிறது. இந்த மான்களை வீட்டுப் பிராணிகளாக ஆக்கிக் கொள்வதில் அவர்கள் அதே நேரத்தில் நாய்களுக்கு பயிற்சி அளித்திருக்கவும் வாய்ப்பு உள்ளது.
இன்று இவ்வாறு வீட்டில் வளர்க்கப்படும் இந்த மான்கள் உலகில் 30 லட்சம் உள்ளன. அவைகளில் பெரும் பகுதி சுவீடன், நார்வே, பின்லாந்து மற்றும் ருசியாவில் பரந்து உள்ள லாப்லாந்து எனும் தரிசு நிலத்தில் உள்ளன.
இந்த மான் மந்தைகளை வைத்திருக்கும் லாப்லாந்து வாழ் லாப் மக்கள் தங்களை சாமி அழைத்துக் கொள்வதையே விரும்புகின்றனர்.
வட அமெரிக்காவில் உள்ள இந்த ரெயின்டீர் மானுக்கு கரிபோ (caribou) என்று பெயர். வடகனடாவின் மிக்மேக் (Mi’Maq or Micmac) மொழியில் உள்ள தோண்டுபவர்என்ற பொருள் தரும் (xalibu) என்ற சொல்லில் இருந்து வந்தது.
பனிப்பாறைகளை தங்கள் பெரிய கால்களால் தோண்டி லிச்சன் எனும் ஒருவகைப் பாசிச் செடியை இந்த மான்கள் எடுக்கின்றன. இந்த மான்களின் மூன்றில் இரண்டு பங்கு உணவுக்கு இந்த பாசிச் செடியே பயன்படுகிறது.
இந்த மான்கள் நாடோடிகளாகத் திரிபவை. இவை ஆண்டு ஒன்றுக்கு 4,800 கி.மீ. (3,000 மைல்) வரை பயணம் செய்யும். வேகமாக ஓடக்கூடிய அவற்றின் அதிக அளவு வேகம் நிலத்தில் மணிக்கு 77 கி.மீ. (48 மைல்), நீரில் மணிக்கு 9.6 கி.மீ. (6 மைல்). இவற்றின் கால்களில் உள்ள தசை நாண்கள் ஒலி எழுப்புவதால், மான்களின் மந்தை இடம் பெயரும்போது, தந்தம் அல்லது மரத்தால் கைகளில் தாளம் போடுவது போன்று ஒலி எழும்.
வீட்டில் வளர்க்கப்படும் முக்கியமான பிராணிகள் எப்போது முதல் வீட்டில் வளர்க்கப்படுகின்றன என்ற விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
ரெயின்டீர் கி.மு. 12,000
நாய்கள் (உரேஷியா, வடஅமெரிக்கா) கி.மு. 12,000
ஆடுகள் (தென்மேற்கு ஆசியா கி.மு. 8,000
பன்றிகள் (தென்மேற்கு ஆசியா, சீனா) கி.மு. 8,000
கால்நடை (தென்மேற்கு ஆசியா, இந்தியா, வட ஆப்ரிக்கா) கி.மு. 6,000.
பிராணிகளை வீட்டில் வளர்ப்பது என்பது வேறு. அவற்றை அடக்குவது என்பது வேறு. தேர்ந்து எடுத்து இனப் பெருக்கம் செய்வது என்பதை முன்னது குறிக்கிறது. யானைகளை அடக்கி வைக்கலாம்; ஆனால் வீட்டுப் பிராணியாக வளர்க்க முடியாது
நாய்கள் (உரேஷியா, வடஅமெரிக்கா) கி.மு. 12,000
ஆடுகள் (தென்மேற்கு ஆசியா கி.மு. 8,000
பன்றிகள் (தென்மேற்கு ஆசியா, சீனா) கி.மு. 8,000
கால்நடை (தென்மேற்கு ஆசியா, இந்தியா, வட ஆப்ரிக்கா) கி.மு. 6,000.
பிராணிகளை வீட்டில் வளர்ப்பது என்பது வேறு. அவற்றை அடக்குவது என்பது வேறு. தேர்ந்து எடுத்து இனப் பெருக்கம் செய்வது என்பதை முன்னது குறிக்கிறது. யானைகளை அடக்கி வைக்கலாம்; ஆனால் வீட்டுப் பிராணியாக வளர்க்க முடியாது
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)
No comments:
Post a Comment