Wednesday, January 4, 2012

அகதிகள் முகாமை முதன்முதலாகக் கண்டுபிடித்த நாடு எது?


அகதிகள் முகாம் அமைப் பதை முதன் முதலாகக் கண்டு பிடித்தது ஜெர்மனி நாடு என்று நீங்கள் கருதினால் அது தவறாகும்.
1899-1902ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டாவது போயர் யுத்தத்தின் போது ஆங்கிலேயர் புலம்பெயர்ந்த மக்களுக்கான அகதிகள் முகாம்களைப் ஏற்படுத்தினர்.
உண்மையில் இந்த கருத்து ஸ்பெயின் நாட்டினருடைய கருத்தாகும். 1895இல் கியூபாவை தக்க வைத்துக் கொள்ள மேற்கொண்ட போராட்டத்தில், கட்டுப்படுத்த எளிதாக இருக்கும் வண்ணம் பொதுமக்களை ஓரிடத்தில் குவித்து வைப்பது என்ற இக்கருத்தை அவர்கள் முதன் முதலாக சிந்தித்து நடைமுறைப்படுத்தினர். அந்தப் போராட்டத்தில் ஸ்பெயின் தோல்வியடைந்தது. அவர்களது படைவீரர்கள் 1898இல் கியூபாவில் இருந்து திரும்பத் தொடங்கினர். அந்த வெற்றிடத்தில் அமெரிக்கா நுழைந்து, 1959இல் காஸ்ட்ரோவின் புரட்சி ஏற்படும் வரை அத்தீவை தங்களின் ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது.
மறுபடியும் மக்களைக் குவித்தல் (Reconcentration)   என்னும் இந்த ஸ்பானிய  செயலை,  இது போன்ற ஒரு சூழ்நிலையை தென் ஆப்ரிக்காவில் சந்திக்க நேர்ந்தபோது ஆங்கிலேயர்கள் மேற்கொண்டனர். போயர் விவசாயப் பண்ணைகளை எரிப்பது என்ற ஆங்கிலேயிரின் கொள்கை காரணமாக இத்தகைய அகதிகள் முகாம்களை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் அதிக அளவிலான மக்கள் அகதிகளாக ஆக்கப்பட்டனர்.  போயர் படைவீரர்களால் விட்டுச் செல்லப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள், அவர்கள் எதிரிக்கு உதவிகளை அளிக்காமல் தடுப்பதற்காக சுற்றி வளைத்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மொத்தத்தில் போயர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக 45 கூடார முகாம்களும், கருப்பு ஆப்பிரிக்க விவசாயத் தொழிலாளிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காக 64 முகாம்களும் அமைக்கப்பட்டன.
இது மனிதநேய நோக்கம் கொண்ட செயலாக இருந்த போதிலும், இத்தகைய முகாம்களில் நிலவிய சூழ்நிலை விரைவில் சீர்கேடடைந்தது. மிகக் குறைந்த அளவு உணவே இருந்தது; நோய்கள் வேகமாகப் பரவின. 1902 இல் 22,000 குழந்தைகள் உள்ளிட்ட 28,000 போயர்களும், 20,000 ஆப்பிரிக்கர்களும் இம் முகாம்களில் இறந்துபோயினர். அதைப் போல இரண்டு மடங்கு படைவீரர்கள் போரில் கொல்லப்பட்டனர்.
இதற்கு சிறிது காலத்திற்குப் பிறகு  தற்போது நமீபியா என்றழைக்கப்படும் தென்மேற்கு ஆப்பிரிக்காவில் காலனி ஆதிக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இத்தகைய அகதிகள் முகாம்களை முதன் முதலாக ஜெர்மானியர் ஏற்படுத்தினர்.
ஹெரரோ (Herero) மற்றும் நமாகுவா (NamaQua) இனங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கைது செய்யப்பட்டு,  முகாம்களில் பணி செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். 1904 மற்றும் 1907ஆம் ஆண்டுகளுக்கிடையே 80 விழுக்காடு ஹெரரோ இனமக்களும் 50 விழுக்காடு நமாகுவா இனமக்களும் வன்முறையினாலும், பட்டினியாலும் இறந்துபோயினர்.
20ஆம் நூற்றாண்டின் முதல்  இனப்படுகொலை இதுதான் என்று அய்க்கிய நாடுகள் அவை இப்போது கருதுகிறது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்).

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...