திராவிடர் திருநாளாம் பொங்கலையொட்டி சென்னை பெரியார் திடலில் வரும் 15,16,17 ஆகியநாள்களில் மூன்று நாள்கள் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் விழா கொண்டாடப்பட உள்ளது.
சென்னை மாநகரில் சுவர் எழுத்துக்கள் மிகக் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றன. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு கூட்டம் தலைநகரில் இருப்பதாகத் தெரிகிறது.
தை1 தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா என்ற சுவர் எழுத்தில் - கோட்டூர் பகுதியில் தமிழ்ப் புத்தாண்டு என்ற பகுதி மட்டும் பல இடங்களிலும் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் உள்ள கோழைகள் யார்?
தமிழ்நாட்டில்தான் நாம் வாழ்கிறோமா? தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ்ப் புத்தாண்டைக் கொச்சைப் படுத்தும் சக்திகளின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?
சீப்பை ஒளித்து வைத்துக் கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனமே!
தலைநகரில் பெரியார் திடலில் நடக்க உள்ள மூன்று நாள் திராவிடர் திருநாள் உற்சாக வெள்ளம் கரை புரண்டோட தமிழர்கள் பெருங்கடலாகப் பொங்கி வர உற்சாகப்படுத்தும் ஏற்பாடு என்றே இதனைக் கருதுவோம்!
நம் பணி தொடரும் - தொடர்ந்து கொண்டே இருக்கும்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு! எழுக இனவுணர்வு!
No comments:
Post a Comment