சர்வதேச மே வரைபட அளவுகோளின்படி, சிர்ரஸ் என்று அறியப்பட்டுள்ள 0 மேகம்தான் மிக அதிக உயரத்தில், 12,000 மீட்டர் (40,000 அடி) உயரத்தில் இருப்பதாகும்.
ஒன்பதாவது மேகம் என்பது அடர்ந்த வெண்மை நிறம் கொண்ட, அச்சம் தரும் இடிமின்னல் மேகமாகும். அளவு கோளில் இது கீழே இருப்பதாகும். ஒரே ஒரு மேகம் கூட பூமியின் மேற்பரப்பில் உள்ள காற்று மண்டலத்திற்கு மிக அருகாமை வரை பரவலாகப் பரந்து இருக்கக்கூடியது. (15,000 மீட்டர் அல்லது 50,000 அடி வரை பரவி இருக்கக் கூடியது.)
மற்ற சொற்றொடர்களின் தோற்றத்தைப் போலவே, ஒன்பதாவது மேகம் (Cloud Nine) என்னும் சொல் ஒரு குறிப்பிட்ட வழியில் இருந்துதான் வந்தது என்று கூறிவிடமுடியாது. ஏழாவது மேகம், எட்டாவது மேகம், முப்பத்தி ஒன்பதாவது மேகம் என்று அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே ஒன்பது என்பது நல்வாய்ப்பை அளிப்பது என்று மக்கள் கருதியதால், அந்தப் பெயரில் அழைத்திருக்கலாம் என்று கொள்ளலாம். ஒரு பெரிய மேகக் கூட்த்தினால் எடுத்துச் செல்லப்படுவது மறுக்கமுடியாதபடி கவர்ச்சியான கருத்துதான்.
மேகங்களை அடையாளம் காண்பதற்காகவும், பெயரிடுவதற்காகவும் ஒரு பன்னாட்டு நடைமுறையை உருவாக்க ஒரு மேகக் குழு நிறுவப்பட வேண்டும் என்று பன்னாட்டு வானியல் கருத்தரங்கில் மேற்கொள்ளப்பட்ட முடிவின் விளைவாக மேக வரைபடம் 1896 இல் பதிப்பிக்கப்பட்டது. லூக் ஹோவர்ட் என்ற ஆங்கிலேய வேதியியலாளரின் தொடக்கப் பணிகள் காரணமாக மேகங்களின் பத்து வகைப்பாடுகள் உருவாகின. அவர் தனது மேகங்களின் மாற்றம் பற்றிய Essay on the Modification of Clouds என்ற கட்டுரையை அவர் 1802இல் வெளியிட்டார்.
1783 இல் ஜப்பான், மற்றும் அய்ஸ்லாந்து நாடுகளில் எரிமலை வெடித்ததன் காரணமாக அய்ரோப்பா கண்டத்தையே மூடிக்கொண்ட ஒரு பெரிய பனிமூட்டம் உருவானதை, ஒரு குழந்தையாக இருந்தபோது கண்ட , அவ்வப்போது மாற்றம் பெறும் தட்பவெப்ப நிலையில் அவர் பெற்ற அனுபவமே ஹோவர்டின் பணியின் மீது செல்வாக்கு பெற்றிருந்தது. அவரது பணியினால் ஈர்க்கப்பட்ட ஜான் கான்ஸ்டேபிள், ஜே.எம்.டபிள்யூ.டர்னர் மற்றும் காஸ்பர் டேவிட் பிரடரிச் போன்ற ஓவியர்கள் நிலப்பரப்பைப் பற்றி ஓவியம் வரையத் தூண்டுதல் பெற்றனர். ஹோவர்டைப் பெருமைப்படுத்தும் வகையில் கவிஞர் கதே, மேகங்களின் ஞானத்தந்தை என்று இவரைப் புகழ்ந்து நான்கு கவிதைகளை இயற்றினார்.
வானில் மிதக்கும், சிறுசிறு நீர்த்துளிகள் அல்லது பனிக்கட்டி படிகங்கள் ஆகியவற்றின் கலவையே மேகம் எனப்படுவது. புகை அல்லது உப்பு போன்ற சிறு பொருள்களைச் சுற்றி ஏற்படும் நீராவி சுருக்கத்தால் ஏற்படும் நீர்த்திவலைகள் அல்லது பனிப் படிகங்களே இவை. இவையே சுருக்கத்தின் மய்யக்கரு என்று அழைக்கப் படுகின்றன. சிர்ரஸ் மேகங்கள்தான் வானில் உள்ள முற்றிலும் பனிக்கட்டியால் ஆன ஒரே வகையான மேகமாகும். பூமியைச் சுற்றியுள்ள விண்வெளியில் இது மிகவும் சாதாரணமாகக் காணப்படுவதாகும். பூமியின் தட்பவெப்ப நிலையைக் கட்டுப்படுத்த இது உதவுவதாக முன்னர் கருதப்பட்டது. அதிக உயரத்தில் பறக்கும் விமானங்கள் விட்டுச் சென்ற தடங்களின் சுருக்கத்தால் அவை அவ்வப்போது தூண்டப் பட்டு உருவாகின்றன. 2001 செப்டம்பர் 11 க்குப் பிறகு விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த போது, அடுத்த நாற்பத்தியெட்டு மணி நேரத்தில், சிர்ரஸ் பாதுகாப்பு சுருங்கிப் போனதால், பகலில் அதிக சூரிய ஒளியையும் இரவில் அதிக வெப்பத்தையும் வெளிப்படுத்தியதால், அமெரிக்காவில் தினசரி தட்பவெப்ப நிலையின் மாற்றம் 3o C வரை உயர்ந்தது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
No comments:
Post a Comment