Tuesday, December 13, 2011

நாத்திகர்களாகி விடுவது உறுதி!


பட்டியல் இன மக்கள் தினமும் சந்திக்கும் கொடுமைகளை நீக்க எந்த ஆட்சியாளர்களும் முன் வருவதில்லை. விடுதலைக்குப்பிறகு இத்தனை ஆண்டுகள் ஆகியும், பட்டியலினத்தவர் அனுபவித்துவரும் கொடுமைகள் எள்ளளவும் குறையவில்லை.

நல்ல சமூக நிலையை அடைந்து ஓரளவு பொருளாதார வளம் பெற்று வாழும் ஒரு சில ஷெட்யுல்ட் மக்கள் நகரங்களில் காணப்படுவதால், நகர்ப் புறத்தில் வாழும் மக்களுக்கு பட்டியல் இன மக்களின் கவலையளிக்கும் சமூகநிலை பற்றி அதிகமாகத் தெரிய வாய்ப்பில்லை. கிராமங்களில் இன்றும் பட்டியலின மக்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும், தீண்டாமைக் கொடு மைகளும் மிக மிக அதிக அளவில் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. பல கிராமங்களில் பட்டியல் இனத்தவர் பேருந்துகளில் அமர்ந்து பயணிக்க முடிவதில்லை.

இரட்டை குவளை முறை பட் டியலின இளைஞர்களை உளவியல் ரீதியாக கடுமையாக பாதிக்கிறது. இந்த சாதி ரீதியான கொடுமைகள் பட்டி யலின இளைஞர்களின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் நிச்சயமாக தடுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

பட்டியலின மாணவர்களும், மாணவிகளும் அனுபவித்து வரும் சமூக வலிகள் அவர்களது எதிர்காலத்தை பாதிப்பதை ஒரு ஜனநாயக நாடு அனுமதிக்கலாமா?

தீண்டாமை குற்றத்திற்கான வன் கொடுமை சட்டம் ஐந்து சதவிகிதம் கூட அமல்படுத்தப்படவில்லை என்கிறது. National Commission for Scheduled Castes. அச்சட்டம் மேலும் கடுமையாக்கப்பட்டு தண்டனையும் அதிகமாக்கப்பட வேண்டும் என்றும், பட்டியல் இனத்தவர் அச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் எனும் அயோக்கியத்தனமான குற்றச் சாட்டுகளையும் கிரிமினல் குற்றமாக பதிவு செய்ய வேண்டும் என்றும் தேசிய அளவில் கண்டறிந்து ழிசிஷிசி பரிந்துரைக்கிறது.

மொத்த மக்கள் தொகையில் முப்பது சதவிகிதம் உள்ள பட்டியல் இனத்தைச் சார்ந்த ஒருவரையாவது கண்டிப்பாக ஒவ்வொரு (தனியார் மற்றும் பொது) கோவிலிலும் அர்ச்சக ராக நியமிக்க வேண்டும் என்று சட் டம் போட்டு, அதைச் செயல்படுத்து வது தமிழகத்தில் மிக மிக எளிது.

ஆனால் அதைப்பற்றி மூச்சுவிடக் கூட எந்த ஆட்சியாளரும் தயா ரில்லை. இந்த நிலையே தொடர்ந்து கொண்டிருந்தால், பட்டியலின மக்களின் பெரும்கோபம் மதமு மில்லை, சாதியுமில்லை என்று நாத் திகப் பாதையில் பயணத்தை முன் னெடுத்து விடும் என்றே உணரத் தோன்றுகிறது.

நன்றி: புதிய தமிழகம் 23.11.2011
பிற இதழ்களிலிருந்து:
அ. தமிழ்ச்செல்வன், தருமபுரி

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...