Tuesday, December 13, 2011

தமிழகத்தின் குந்தா நீர்மின் திட்டத்திற்கும் கேரளா வேட்டு!


சென்னை, டிச.11- பெரியாறு அணைக்கு உலை வைத்தது போல தமிழகத்தின் குந்தா நீர் மின் திட்டத்திற்கும் கேரள அரசு வேட்டு வைத்துள்ளது. தமிழகத்தில், காற்றாலை மின்சாரத்தை சேமித்து வைப்பதற்கான முக்கிய திட்டமான, குந்தா நீரேற்று மின் திட்டத்திற்கு, கேரள அரசு, தடையில்லா சான்றிதழ் தராததால், விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம், அண்மையில் மத்திய அரசு திருப்பிக் கொடுத்தது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள, அவலாஞ்சி மற்றும் எமரால்டு மலைகள் வழியே, குந்தா ஆறு ஓடுகிறது. இங்கு, தமிழக மின் துறைக்குச் சொந்தமான, இரண்டு அணைகள், மேலும், கீழும் உள்ளன. இந்த அணைகளில் உள்ள, நீர் மின் நிலையங்களின் மூலம், 500 மெகாவாட் மின்சாரத்தை, நீரேற்று வழியில் உற்பத்தி செய்ய, 2006இல் தமிழக அரசு திட்ட மிட்டது. இந்த திட்டத்திற்கு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுவை மாநிலங்களில், தடையில்லா சான்று பெற வேண்டும் என, 2007 டிசம்பரில், மத்திய நதி நீர் ஆணையம், தமிழகத்திற்கு முட்டுக்கட்டை போட்டது. அதனால், இன்று வரை திட்டத்தை துவங்க முடியவில்லை.
கேரளா வஞ்சம்
இதுகுறித்து, தமிழக பொதுப்பணித் துறை மற்றும் மின்துறை அதிகாரிகள் கூறியதாவது: குந்தா ஆற்று நீருக்கும், மற்ற மாநிலங்களுக்கும் தொடர் பில்லை; ஆனால், தமிழகத்தை வஞ்சிக்கும் வண்ணம், அண்டை மாநிலங்களிடம் அனுமதி பெற, மத்திய அரசு உத்தரவிட்டது. காவிரியில், குந்தா நீர் கலப்பதால், கர்நாடகாவிடம் அனுமதி கேட்டோம்; கிருஷ்ணராஜசாகர் அணையில் அமைக்கப்படும் நீர் மின் திட்டத்தைக் காட்டி, "புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதாகவும், மற்ற மாநிலங்களிடம் அனுமதி வாங்கி வாருங்கள்' என, அவர்கள் கூறி விட்டனர்.புதுவையை பொறுத்த வரை, அவர்களுக்கு நாம் அதிக மின்சாரம் தருவ தால், தடையில்லா சான்று தர சம்மதித்தது. ஆனால், கேரளாவோ, தமிழக அரசின் கோரிக்கை கடிதங் களை வாங்கி வைத்ததோடு சரி, இதுவரை எந்த பதிலும் தரவில்லை.அதனால், தற்போது இந்த திட்டத்தின் விரிவான அனுமதி கோரும் அறிக்கையை, மத்திய நதி நீர் ஆணையமும், மத்திய நீர்மின் திட்ட ஆணையமும், தமிழகத்திடம் திருப்பிக் கொடுத்து விட்டது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பவானி ஆறு, கேரள மாநிலம் பாலக்காட்டி லிருந்து, கோவை மாவட்டம் வழியாக, தமிழகத்தில் நுழைகிறது. அதன்பின், பவானியும், சிறுவாணியும், காவிரியில் கலக்கிறது. தமிழகத்திற்குள் பவானி வந்த பின், அதில் குந்தா நீர் கலக்கிறது."குந்தா ஆறு தமிழ கத்தில் உற்பத்தியானாலும், கேரள மாநிலத்திலி ருந்து வரும் பவானி யில், குந்தா கலப்பதால், அதில் நீர் மின் திட்டம் கொண்டு வரக்கூடாது' என, கேரளா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக, தமிழக மின்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...