1967 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் சுதந்திராக் கட்சியுடன் (ராஜாஜியுடன்) திமுக கூட்டணி வைத்தது. தேர்தலில் அறுதிப் பெரும் பான்மை பெற்று அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்துவிட்டது. தானே முதல் அமைச்சர் ஆகும் எண்ணமும் ஆச்சாரியாருக்கு இருந்தது. அண்ணா அவர்களோ, ஆட்சிக்குத் தலைமையேற்பேன் என்று செய்தி யாளர்களிடம் எடுத்துக் கூறி ஆச்சாரியாரின் ஆசையில் மண்ணைப் போட்டார்.
அடுத்த கட்டமாக அமையும் திமுக ஆட்சி தன் சுட்டு விரல் திசையில் இயங்கும் என்று மனக்கோட்டை கட்டியிருந்தார். அதனையும் அண்ணா அவர்கள் தவிடு பொடியாக்கி விட்டார்.
அந்த ஆத்திரம் இன்று வரை அக்கிரகாரக் கூட்டத்திற்கு அடங்கவில்லை என்பது துக்ளக்கில் திருவாளர் லட்சுமி நாராயணன் அவர் களின் எழுத்து ஆற்றாமை மூலம் நன்றாகவே விளங்கிக் கொள்ள முடிகிறது.
அண்ணாமீது சகட்டு மேனிக்கு அவமதிக்கும் வார்த் தைகளை அள்ளி வீசுகிறார், அரசியல் சாணக்கியர் என்று அக்கிரகாரம் ஏற்றிப் போற்றும் அய்யங்கார் ஆச் சாரியாருக்கே நாமம் போட்டு விட்டாரே இந்தக் காஞ்சீ புரத்துக்காரர் என்ற ஆத்தி ரத்தில் அனாவசியமான வார்த்தைகள் வெளிப்படு வதைப் புரிந்து கொள்ள முடிகிறது!
அதுவும் அமைச்சரவை அமைக்கு முன்பே திருச்சி ராப்பள்ளியில் இருந்த தமது குருநாதர் -_ தாம் கண்ட, கொண்ட ஒரே தலைவர் என்று எப்போதும் கூறிவந்த அந்தத் தலைவரை _ தந்தை பெரியாரை கழக முன்னணி யினருடன் சென்று சந்தித்து ஆசி பெற்றுவிட்டார் அறிஞர் அண்ணா என்ற வுடன் (2.3.1967) ஆச்சாரி யாருக்கு ஆத்திர விஷம் தலைக்கேறிவிட்டது; அதன் பிரதிபலிப்புதான் வார்த்தை களாக வடிந்தது. இன்று உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் சம்பத்து ஈசன் சம்பத்தும், அருளுமாகும். இதை ஈசனுக்கு அர்ப்பண மாக்கி, அடக்கத்துடன் அனுப விக்க வேண்டும்.
இல்லாவிடில் இரவில் தூங்கி காலையில் எழுந்ததும் எங்கேயோ மறைந்துவிடும் நாட்டின் நன்மையையும் தர்மத்தின் வளர்ச்சியையும் நமது நோக்கமாகக் கொண்டு பணி செய்வோமாக!
- ஆச்சாரியார் (கல்கி 5.3.1967 பக்கம் 3)
- ஆச்சாரியார் (கல்கி 5.3.1967 பக்கம் 3)
சாபமிடுகிறாரா - சபிக்கிறாரா ஆச்சாரியார் - புரிந்து கொள்வீர்!
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண் டார்கள்; தப்பித் தவறி ஒருவர்கூட கடவுள்மீது உறுதிமொழி எடுக்க வில்லை, உளப்பூர்வமாக என்றே எல்லோரும் எடுத்தனர்.
இதுகுறித்துப் பார்ப்பன ஏடுகள் ஆலகால நஞ்சைக் கக்கின!
குறைந்தபட்சம் இந்து அறநிலையத் துறை அமைச்சர் நெடுஞ்செழியா னாவது கடவுள் பெயரில் பிரமாணம் எடுத்திருக்க கூடாதா? என்று அங்கலாய்த்தது. சென்னையைச் சேர்ந்த கே. சீனுவாசன் என்ற பார்ப்பனர் எழு திய கடிதத்தை இந்து வெளியிட்டது (இந்து 10.3.1967).
அதே தேதி இந்து ஏட்டில் இன்னொரு கடிதமும் வெளியாகி இருந்தது. எழுதியவர் சி.வி. துரைராஜன் என்பவர் _ என்ன எழுதுகிறார்?
தற்போது ஆளுங்கட்சியாக உள்ள கட்சி தன்னுடைய பெயரை தர்ம முன்னேற்றக் கழகம் (ஞிலீணீக்ஷீனீணீ விஸீஸீமீக்ஷீணீ ரிணீக்ஷ்லீணீரீணீனீ) அல்லது அறவளர்ச்சிக் கழகம் என்று பெயரை மாற்றிக் கொண்டு அகில இந்தியக் கட்சியாக இயங்க எவ்வித தடையுமின்றி தன்னை ஆக்கிக் கொள்வதுதான் மிகப் பொருத்தமாகும். அதோடு அவர்கள் இயக்கத்தின் அறிகுறியாக உள்ள கருப்புப் பார்டரை அக்கட்சியின் கொடியிலும், உடையிலும் இருந்தும் நீக்கிக் கொள்வதே நல்லது என்றும் இலவசமாக ஆலோசனை களை வழங்குவதுபோல திராவிட என்ற இனச் சுட்டையும், திராவிடர் களின் இழிவை வெளிப்படுத்தும் கருப்பையும் அகற்ற வேண்டும் என்று ஆசைப்படும் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாதவர்களல்லர் நாம்.
தற்போது ஆளுங்கட்சியாக உள்ள கட்சி தன்னுடைய பெயரை தர்ம முன்னேற்றக் கழகம் (ஞிலீணீக்ஷீனீணீ விஸீஸீமீக்ஷீணீ ரிணீக்ஷ்லீணீரீணீனீ) அல்லது அறவளர்ச்சிக் கழகம் என்று பெயரை மாற்றிக் கொண்டு அகில இந்தியக் கட்சியாக இயங்க எவ்வித தடையுமின்றி தன்னை ஆக்கிக் கொள்வதுதான் மிகப் பொருத்தமாகும். அதோடு அவர்கள் இயக்கத்தின் அறிகுறியாக உள்ள கருப்புப் பார்டரை அக்கட்சியின் கொடியிலும், உடையிலும் இருந்தும் நீக்கிக் கொள்வதே நல்லது என்றும் இலவசமாக ஆலோசனை களை வழங்குவதுபோல திராவிட என்ற இனச் சுட்டையும், திராவிடர் களின் இழிவை வெளிப்படுத்தும் கருப்பையும் அகற்ற வேண்டும் என்று ஆசைப்படும் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாதவர்களல்லர் நாம்.
பார்ப்பனர்களின் இந்தக் கடிதங்கள் குறித்து தந்தை பெரியார் விடுதலையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் (11.3.1967) பின்வருமாறு தம் கருத்தைப் பதிவு செய்தார்.
இவற்றிலிருந்து தி.மு.க.காரர்களை பார்ப்பனர் எவ்வளவு தூரம் பயன் படுத்தலாம் என்று இருந்தார்கள் என்பதையும், இவர்கள் (தி.மு.க.) சிறிதளவு நன்மை ஏற்படும்படி நடந் தாலும், அதைப் பெரிதாய்க் கொண்டு அவர்கள் மனம் திருந்தும்படியாக நடந்து கொள்ள வேண்டுமென்றே விரும்புகிறேன் என்று தந்தைபெரியார் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
திமுகவின் கடவுள் மறுப்புச் சிந் தனையை ஏற்கெனவே புரிந்து கொண்டு இருப்பவர் ஆச்சாரியார் என்பதால் தான் அதற்கு முன்கூட்டியே இப்படிப் பேசினார்:
சென்னையில் தி.மு.க.வுக்குப் பெரும் வெற்றி கிடைத்தது ஆண்டவன் செயல் என்பதை தற்போது தி.மு.க. ஒப்புக் கொள்ளாதிருக்கலாம் ஆனால் காலக் கிரமத்தில் ஒத்துக் கொள்ளும் என நம்புகிறேன் என்றார் -சென்னைக் கடற்கரையில் ஆச்சாரியார் (26.2.1967). இவையெல்லாம் பொய்த்துப் போயின என்பதே வடிகட்டிய உண்மை! திமுக சார்பில் திருவைகுண்டம் தொகுதியில் வெற்றி பெற்ற சி.பா. ஆதித்தனார் சபாநாயகராக நிறுத்தப் பட்டார் (17.3.1967) தேர்தலில் திமுகவின் கூட்டணியில் இடம் பெற்ற சுதந்திராம கட்சியின் சார்பாக கோதண்டரா _ அய்யா நிறுத்தப்பட்டார். ஆதித்தனாருக்குக் கிடைத்த வாக்குகள் 153, சுதந்திரா கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகளோ வெறும் 21. தற்காலிக சபாநாயகர் மூக்கையா தேவர் வாக்கு அளிக்கவில்லை.
புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆச்சாரியார் (18.3.1967) தமிழ் நாட்டு திமுக ஆட்சியைவிட மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மாநிலங் களில் நல்லாட்சி நடைபெறும் என்றார். தி.மு.க.வுக்கும் தமக்கும் இருந்த தேனிலவு முறிந்துவிட்டது என்றும் திருவாய்மலர்ந்தார். சபாநாயகர் தேர்தலில் என் ஆலோசனைக்கு எதிராக முதல் அமைச்சர் நடந்து கொண்டார் என்று குற்றம் சாற்றினார்.
தொடக்கத்திலேயே திமுகவுக்கு அறிவுரை சொல்லுவதுபோல நிர்வாகத் தில் தலையிடாதே! என்று திமுக ஆட்சிக்கு ராஜாஜி அறிவுரை கூறினார்.
அதற்குப் பதில் அளிக்கும் வகையில் சோழியன் குடுமி சும்மா ஆடாது எனும் தலைப்பில் தந்தை பெரியார் விடுதலையில் தலையங்கமாகவே கையொப்பமிட்டு வெளியிட்டார் (விடுதலை 7.3.1967)
நிர்வாகக் கேட்டினால் காங்கிரஸ் ஆட்சி ஒழிந்தது என்று ஆனபிறகும் கூட நிர்வாகத்தில் தலையிடாதே என்று இராஜாஜி ஆக்கினை பிறப்பித்தால், பழைய நிர்வாகமே திருத்தப் பாடில்லாமல் நடைபெறுமானால், இந்த ஆட்சியையும் கவிழ்க்கத்தானே அந்த நிர்வாகம் பயன்படக் கூடும்? ஆதலால், இந்த ஆட்சி நிலைக்க வேண்டுமானால் நிர்வாகத் துறையை நல்ல வண்ணம் திருத்தி அமைக்க வேண்டும் அல்லது நல்ல கவனிப்பு இருந்தாக வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு இந்த ஆட்சியுடன் மோத வேண்டிய அவசியம் ஏற்படாது என்று கருதுகிறேன் என்று தந்தை பெரியார் அவர்கள் ஆச்சாரியாரின் உள்நோக் கத்தைத் துல்லியமாகப் புரிந்து பதிலடி அறிக்கை கொடுத்தாரே!
அதே அறிக்கையில் ராஜாஜி அவ்வாறு கூறுவதற்கான காரணத்தை யும் தந்தை பெரியார் வெளிப்படுத்தி விட்டார்.
நிர்வாகிகளாக பெரிதும் பார்ப் பனர்களே இருப்பதால் இந்த மந்திரி களையும் தங்கள் இஷ்டப்படி, தங்கள் இனத்துக்கு ஏற்ப நிர்வாகம் நடக்க இடம் கொடுக்காவிட்டால் எளிதில் கவிழ்த்து விடலாமே என்கிற உள் எண்ணம் இல்லாமல் வேறு என்ன வாக இருக்க முடியும்? என்று பார்ப் பனத் தலைவர் ராஜாஜியின் சூழ்ச் சியைப் பொடிப் பொடியாக்கினாரே தந்தை பெரியார்.
ராஜாஜி எந்த எண்ணத்தில் திமுகவுடன் கூட்டு சேர்ந்திருந்தாலும் அண்ணா அவர்களைப் பொறுத்த வரை அது கொள்கைக் கூட்டு அல்ல என்பதை சட்டம் மன்றத்திலேயே கூறினார்.
இராஜாஜி அண்ணாத்துரை அவர்களின் கூட்டு பற்றி தந்தை பெரியார் அவர்கள் நேற்று முன்தினம் இருவர் கூட்டு தன் தன் சுயநலக் கருத்தின் பேரில் ஏற்பட்ட கூட்டே தவிர, பொது நலத்தைப்பற்றிய கூட்டல்லவென்றும், இருவர் நலமும் நிறைவேறியவுடன் இனிமேல் கூட்டிற்கு அவசியமில்லை என்றும் குறிப்பிட்டி ருந்தார். அதையே திரு. அண்ணாத் துரை நேற்று சட்டசபையிலேயே கூறி இருக்கிறார்.
அதாவது எங்கள் உறவு முடிந்து விட்டது என்று சொல்லுகிறவர்கள் எங்கள் உறவின் அடிப்படையை அறியாதவர்கள் ஆவார்கள் எங்கள் உறவு (எந்தக்) கொள்கையின்மீதும் ஏற்பட்டதல்ல
காங்கிரசை எதிர்க்கின்றவர்கள் என்கின்ற தன்மையில் பல கட்சிகள் ஒன்றாயிருந்து எதிர்த்தது போல் ஒன்றாக இருக்க நேர்ந்தது.
ஆகவே உறவு அவ்வளவும், தேர்தல் ஒற்றுமை என்ற அந்த அடிப்படையில்தான் எங்கள் உறவு என்று திட்டவட்டமாக தெரிவித்து ஆனபிறகும் கொள்கை அடிப்படையில் வேற்றுமை இருந்த தால் உறவு முறிந்துவிட்டது என்று சொல்லிவிட முடியுமா?
எங்களுக்குள் நாங்கள் எப்போதும் ஒன்றாயிருப்பது என்கின்ற ஒப்பந்தத் தின்மீது ஏற்பட்ட உறவு அல்ல.
ராஜாஜி எங்களை இவர்கள் நல்லவர்கள் என்று சொல்வதும், நான் இவர்கள் (இராஜாஜி கும்பல்) எங்களுக்கு உதவி செய்தார்கள் என்று சொல்வதும் ஆகிய தேன் நிலவு முறிந்துவிட்டது; இனி அவரவர்கள் கருத்துக்களில் எதை எதை ஏற்றுக் கொள்ளலாமோ அவைகளைத்தான் அவரவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
இராஜாஜி தொடர்பு போன்றது தான் இடதுசாரியின் தொடர்புமாகும் என்று பேசி இருக்கிறார்.
(31.3.1967 தினமணி பக்கம் 7)
பொதுவாக சொல்லுகிறேன் இன்றைய மந்திரிகளுக்கு (திமுக) பார்ப்பனர்களால்தான் நெருக்கடியும். கெட்ட பெயரும் காலாவதியும் வந்தால் வரலாமே தவிர, நம்மால் மக்களால் வராதென்றே கருதுகிறேன் என்று தந்தை பெரியார் (விடுதலை 6.3.1967) தந்தை பெரியார் எழுதியது பலித்தே விட்டது. இதோ கல்கி கதறுகிறது.
தி.மு.க. மந்திரிசபைக்கு ஆதரவாக தாம் ராஜ்யம் முழுவதிலும் பிரசாரம் செய்யப் போவதாக பெரியார் ராமசாமி நாயக்கர் அவர்கள் அறிவித்திருக்கிறார். இது தி.மு.க. மந்திரிசபையின் நல்ல பெயருக்கே கெடுதல் உண்டாக்கக்கூடிய ஓர் அபசகுன அறிவிப்பு; எல்லா மக்களுடைய அரவணைப்பையும் ஆதரவையும் பெற வேண்டிய இளசான செடிக்குத் தாமறியாமலே திரு. பெரியார் தீங்கு விளைவித்து விடமாட்டார் என்று நம்புகிறேன். இது வரை ஆட்சி ஸ்தானத் தில் இருப்பவர்கள் யாராயிருப்பினும் சரி, அவர்களிடம் குறிப்பிட்ட அளவுக்கு பிராமணத் துவேஷம் இருந்துவிட்டால் போதும்,, அவர்களை திரு. பெரியார் ஆதரித்து வந்திருக்கிறார். துவேஷம் படைத்தவர்களை ஆதரிக்கிறார் என்று சொல்வது கடுமையாகத் தோன்றலாம். ஆனால் இவ்விஷயத்தில் திரு. பெரியாரின் உணர்ச்சிகளைக் குறிப்பிட துவேஷம் என்பதைவிட மிருதுவான வார்த்தை போதாது
பிராமணர்களே! பூணூலைப் பிடித்துக்கொண்டு திமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொன்ன ஆச் சாரியாரின் ஏடுதான் இப்படி எழுது கிறது. - (கல்கி 9.4.1967)
1) சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்ட வடிவம்
2) சென்னை மாநிலத்துக்குத் தமிழ் நாடு என்று பெயர் சூட்டல் ‘Tamil Nad‘ என்றுதான் இருக்க வேண்டும். ‘TamilNadu’ என்று இருக்கக கூடாது என்று ஆச்சாரியார் சொன்ன கருத்தை முதல் அமைச்சர் அண்ணா ஏற்கவில்லை).
3) தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை. தமிழ், ஆங்கிலம் இரண்டே மொழிகள்தாம்.
(4) அரசு அலுவலகங்களில் எந்தவித மதச் சின்னங்களும் இருக்கக்கூடாது.
(5) இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கையாக்கப்பட்டது. என்று அடுக்கடுக்காக சட்டங்களையும், ஆணைகளையும் வெளியிட்டு அக்கிரகாரத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தார் ஆட்சிபொறுப்பேற்று முதல் அமைச்சர் அண்ணா.
தன் ஆலோசனையை அண்ணா கேட்கவில்லையே என்ற ஆத்திரம் கடைசிவரை ராஜாஜியை விட்டு அகலவேயில்லை.
அண்ணா மறைவுற்று சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில்கூட நயவஞ்சகமாகப் பேசினார் (இக்கூட்டத்தில் பிரதமர் இந்திரா காந்தி, ஆளுநர் உஜ்ஜல்சிங், தற்காலிக முதல்வர் நாவலர் இரா. நெடுஞ்செழியன், கலைஞர், மத்திய அமைச்சர்கள் தினேஷ்சிங், ராம்சுபக்சிங், ராஜாஜி, சி. சுப்பிரமணியம், ம.பொ.சி. போன்றோர் பங்கேற்று இரங்கல் உரையாற்றினர் (நாள்: 8.2.1969).
அண்ணா பெரிய ஆஸ்திகர், கடவுள், மத நம்பிக்கையுள்ளவர், அவர் பெரிய தேசப் பக்தர். அதனால்தான் அவருக்கு நானும் அனுதாபம் காட்டுகிறேன். மக்களும் இவ்வளவு அனுதாபம் காட்டினார்கள் என்று பேசினார் ராஜாஜி. இதுகுறித்து தந்தை பெரியார் விடுதலை (11.2.1969) அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாவுக்கு அனுதாபம் காட்டிய மக்கள் சமுத்திரத்தைக் கண்டவுடன், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே ராஜாஜி அப்படிப் பேசினார்.
காரணம் என்னவென்றால் ஒரு நாத்திகருக்கு இவ்வளவு பெருமை என்றால் நாடே நாத்திகமயமாகி விட்டது என்ற கருத்து ஏற்பட்டு விடுமோ என்று கருதி அவர் சுபாவத்தைக் காட்டினார். அதை நான் முறியடித்தேன் என்று எழுதினார் தந்தை பெரியார்.
முறியடித்தேன் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளது சுவையான ஒன்றாகும்.
அண்ணா பெரிய ஆஸ்திகர் என்று ஆச்சாரியார் கடற்கரையில் பேசியதை, தந்தை பெரியார் அவர்களுக்கு உதவியாள ராகச் சென்று இருந்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள், தந்தை பெரியாரிடத்தில் எழுதிக் காட்டினார்.
தந்தை பெரியார் தொடர்ந்து உரையாற்றியபோது ஆச்சாரியாரின் கருத்தை முறியடிக்கும் வகையில் அண்ணாவின் பகுத்தறிவு நிலைப் பாட்டைப் படம் பிடித்துக் காட்டினார்.
இதோ அண்ணாவின் தலைவர் அய்யா பேசுகிறார்.
அண்ணா அவர்கள் ஒரு பகுத்தறிவுவாதி; கடவுள், மதம், சாஸ்திர, சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாதவர், அவர் பதவிக்கு வந்த போதும் கடவுளை நம்பாதவர்.அதனை அவர் காரியத்தில் காட்டினார். எனக்குச் சொல்லவே வெட்கமாக இருக்கிறது. இருந்தாலும் சொல் கிறேன். இந்த மந்திரி சபையையே எனக்குக் காணிக்கையாக வைத் திருப்பதாக அவர் சொன்னார்.
அரசாங்க அலுவலகங்களில் இருந்த கடவுள் படங்களை அகற்ற அண்ணா உத்தரவுப் போட்டார். இதன் மூலம் மூடநம்பிக்கை கூடாது என்பதைக் காட்டினார். சுயமரியாதைத் திரு மணத்தைச் சட்டமாக்கியது முக்கிய மல்ல; கடவுள் மதம் புகக்கூடாது என்பதற்கு வழி செய்ததுதான் முக்கியம். அவர் சிறந்த பகுத்தறிவுவாதி! அவ்வளவு பெரிய மேதைக்கு அவர் மறைந்த அன்று 30 லட்சம் பேர் பின் தொடர்ந்தார்கள் என்றால் இந்த நாட்டு மக்களை அவர் அவ்வளவுத் தூரத்திற்குப் பயன்படுத்தி விட்டார் என்று அர்த்தம் என்று தந்தை பெரியார் முகத்துக்கு முகம் பதிலடி கொடுத்தாரே!
ஒரு தலைவரின் மறைவு குறித்த அனுதாபக் கூட்டத்தில்கூட உண் மைக்கு மாறாக நாகரிகமின்றி ஆச் சாரியாரால் பேச முடிகிறது என்றால் அதற்குப் பெயர்தான் பார்ப்பனீயம் என்பது.
இதற்கெல்லாம் பதில் சொல்ல மாட்டார் திருவாளர் லட்சுமி நாராயணன்; பிரச்சினையைச் சந்திக்க முடியாமல் வேறு வேறு இடத்திற்குத் தாவும் அனுமார் வேலையைத்தான் அவர் செய்து கொண்டு இருக்கிறார்.
- (தொடருவோம்
No comments:
Post a Comment