சென்னை 115 ஆவது வார்டில் ஆதரவு கேட்டு துண்டறிக்கைகள் வழங்கப்படுவதுடன் 12 ஸ்டிக்கர் பொட்டுகள் அடங்கிய அட்டையும் கொடுத்துள்ளனராம்.
பெண்களை ஏமாற்ற இப்படி ஒரு டெக்னிக். இதுவும் ஒருவகையில் லஞ்சம்தான்.
பொட்டுப் பற்றிய கதையோ ஆபாசமானது.. அது ஒருபுறம் இருக்கட்டும்! பொட்டில் தட்டிய மாதிரி கொட்டு முரசுக்கு எதிராக வாக்களிக்க மாட்டார்கள் மக்கள் என்று எப்படி சொல்ல முடியும்? தமிழக மக்களை 45 ஆண்டுகளாக தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் ஏமாற்றி வரு கின்றன என்று தமிழக பா.ஜ.க. தலைவர் யாரோ பொன் ராதாகிருஷ்ணன் என்பவர் சொல்லியிருக்கிறார்.
45 வருடமாக ஏமாற்றியதாகச் சொல்கிறாரே - அப்படியானால் அந்த இரு கட்சிகளுடன் மாற்றி மாற்றி கடந்த காலத்தில் கூட்டணி வைத்துக் கொண்டிருந்ததே பி.ஜே.பி. அது யாரை ஏமாற்றவாம்?
ஒருக்கால் தனக்குத் தானே ஏமாற்றிக் கொண்டிருக்க லாமோ!
கடந்த 44 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்து தமிழகத்தை சீரழித்து விட்டன. இந்த திராவிடக் கட்சிகளின் அத்தியாயத்தை முடிக்கவே பா.ம.க. தனித்துப் போட்டியிடுகிறது. இந்த முடிவை சட்டசபை தேர்தலுக்கு முன் எடுத்திருந்தால் சட்டசபையில் எதிர்க்கட்சியாக பணியாற்றும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
- என்கிறார் பா.ம.க. நிறுவனர் ராமதாசு
பி.ஜே.பி. சொல்லுவதைத்தான் பா.ம.க.வும் சொல் கிறது. தமிழகத்தை சீரழித்ததாக மருத்துவர் கூறுகிறாரே - அந்தக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்துத் தேர்தலில் போட்டியிட்டதே பா.ம.க., அப்படியென்றால் அந்தச் சீரழிவுக்குப் பா.ம.க.வும் துணை போயிருக்கிறது என்றுதானே பொருள்?
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டி யிட்டு இருந்தால் எதிர்க்கட்சியாக பா.ம.க., பணியாற்றி யிருக்குமாம் - யாரோ அரசியல் விமர்சகர்கள் சொன்னார் களாம். தொடக்கத்தில் கூட்டணியில் சேராமல் தனித்துத் தானே போட்டியிட்டது. பா.ம.க. கிடைத்த பலன் என்ன? சுழி தானே! இந்தத் தனித்து என்பதெல் லாம் வேலைக் காகாது என்று முடிவு செய்துதானே கூட்டணியில் சங்கமமானது பா.ம.க., மறுபடியும் பழைய கதையா?
அதுசரி, பா.ம.க. நிறுவனர் பேசியதை எல்லாம் தொகுத்துப் பார்க்கும் யாரும் சட்டையைக் கிழித்துக் கொள்ளாமல் இருந்தால் ஆச்சரியம்தான்!
நெல்லை மாநகராட்சி தேர்தலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அஞ்சல் வழி வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக தி.மு.க. தலைமைத் தணிக்கைக் குழு உறுப்பினர் சுப. சீதாராமன் கூறியுள்ளார்.
அரசு ஊழியர்கள் என்பதாலேயே அவர் களுக்கு உரிய வாக்குரிமையைப் பறிப்பது எந்த வகையில் சரி? அரசு ஊழியர்கள் என்றாலே தி.க. - தி.மு.க.வினர் தாம் என்று அரசு முடிவு செய்து விட்டதா? இதனை எதிர்த்து யாராவது நீதிமன்றம் சென்றால் அரசின் நிலைமை பரிதாப நிலைக்குத் தள்ளப்படாதா?
சில இடங்களில் அரசு அதிகாரிகளும், அரசனை விஞ்சிய விசுவாசிகளாக இருப்பதும் இதற்குக் காரணமாகவும் இருக்கக் கூடும்; சிக்கலில் மாட்டிக் கொண்டால் அந்த நேரத்தில் யாரும் காப்பாற்ற முன்வர மாட்டார்கள் - எச்சரிக்கை!
No comments:
Post a Comment