காஷ்மீர் பிரச்சினைக்குப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறிய வழக்குரைஞர் பிரசாந்த்பூஷன் இந்துத்துவா காலிகளால் தாக்கப்பட்டார்! நாடு முழுவதும் பலத்த கண்டனம்!
புதுடில்லி, அக்.13- பிரபல வழக்குரைஞர் சாந்தி பூஷன் இந்துத் துவா கும்பலைச் சேர்ந்த மூன்று காலிகளால் உச்ச நீதிமன்ற வளாகத் திலேயே பட்டப் பகலில் தாக்கப்பட்டார். தாக் கிய மூவரில் இருவர் தப்பினர் - ஒருவர் பிடி பட்டார். இதுகுறித்து நாடு தழுவிய அளவில் கண்டனம் தெரிவிக் கப்பட்டுள்ளது.
ஊழலை ஒழிப்பதாக வலிமையான லோக் பால் மசோதா கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறி பட்டினிப் போராட்டம் இருந்த அன்னா ஹசாரேயின் அணியில் இடம் பெற் றவர் வக்கீல் பிரசாந்த் பூஷன். முன்னால் சட்ட அமைச்சர் சாந்தி பூஷனின் மகன்.
பல வழக்குகளில் ஆஜராகி வரும் பிரசாந்த் பூஷன் நேற்று பிற்பகலில் உச்சநீதிமன்றத்தில் உள்ள தனது அலுவல கத்தில் இருந்தார். அப் போது ஆங்கில சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். அவரது பேட்டியை நேரடியாக ஒளிபரப்பினார்கள்.
அவர் தனது பேட் டியில், காஷ்மீர் பற்றி சில மாறுபட்ட கருத்து களை தெரிவித்துக் கொண்டு இருந்தார். அப்போது 3 வாலிபர் கள் அவரது அறைக்குள் பாய்ந்தனர். அவர்கள் சரமாரியாக பிரசாந்த் பூஷனை நாற்காலியில் இருந்து இழுத்துப் போட்டு தாக்கினார்கள். அவரது முகம் மற்றும் உடல் முழுவதும் அடி விழுந்தது. அவரது மூக்கு கண்ணாடி கீழே விழுந்து உடைந்தது., சட்டை கிழிந்தது.
இந்த தாக்குதலால் பிரசாந்த் பூஷன் நிலை குலைந்து போனார். என்றாலும் அந்த வாலி பர்கள் விடவில்லை. தொடர்ந்து தாக்கினார் கள். இதைப் பார்த்த பிரசாந்த் பூஷனின் உதவியாளர்கள் அறைக் குள் ஓடி வந்து பிசாந்த் பூஷனை மீட்டனர். இதைத்தொடர்ந்து 3 வாலிபர்களில் இருவர் தப்பி ஓடி விட்டனர். ஒரு வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத் தனர். அவரை போலீ சார் கைது செய்தனர்.
ஸ்ரீராம் சேனா
கைதானவரின் பெயர் இந்தர் வர்மா (வயது 24) என்பதும், அவர் டெல்லியை அடுத்த காரை கிராமத்தை சேர்ந் தவர் என்பதும், ஸ்ரீராம் சேனா என்ற அமைப் பின் டெல்லி நகர தலை வர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவருடன் வந்த வர்கள், ஸ்ரீராம் சேனா அமைப்பை சேர்ந்த வர்கள்.
காயம் அடைந்த பிரசாந்த் பூஷனை போலீசார், ராம் மனோ கர் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த் தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காஷ்மீர் பிரச்சினையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கருத்தை நான் தெரிவித் தேன். இதனால் என் மீது தாக்குதல் நடத்தி இருக் கிறார்கள்'' என்று குறிப்பிட்டார்.
பிரசாந்த் பூஷன் மீது நடந்த தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். தனது உதவியாளரை மருத்துவ மனைக்கு அனுப்பி, அனுதாபத்தை தெரி விக்கும்படி அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் பற்றி காவல் துறை ஆணையர் பி.கே.குப்தாவிடமும் ப.சிதம்பரம் இது பற்றி விசாரித்தார். தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ப.சிதம் பரம் வற்புறுத்தினார்.
காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்
அன்னா ஹசாரே, அவரது அணியில் இடம் பெற்று இருக்கும் கிரண் பெடி உள்பட சமூக ஆர்வலர்களும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். காங் கிரஸ் செய்தி தொடர் பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், "இது ஒரு காட்டுமிராண்டி தனமான தாக்குதல். இதை யாரும் ஆதரிக்க கூடாது'' என்றார். பா.ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவித்கர், மார்க்சிஸ்ட் கம்னிஸ்டு பொது செய லாளர் பிரகாஷ் கரத் ஆகியோரும் கண்டனம் தெரிவித்து இருக் கிறார்கள்.
டெல்லி போலீசார் இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடி விட்ட 2 பேரை தேடி வருகி றார்கள்.

No comments:
Post a Comment