கல்வியை மத்திய பட்டியலிலிருந்து மாநில பட்டியலுக்குக் கொண்டுவர இந்தியா முழுக்க மாபெரும் இயக்கம் நடத்தப்படும் சென்னையில் தமிழர் தலைவர் அறிவிப்பு
சென்னை, அக். 13- கல்வியை மத்திய பட்டியலி லிருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர இந்தியா முழுக்க பேரியக்கம் நடத்தப்படும் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலில் கொண்டு வரக்கோரும் மாநாடு கருத்தரங்கம் திராவிடர் கழகத்தின் சார்பில் 25.9.2011 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
We the people of india என்பதை நமது தீர்மானத்திலேயே தெளிவாக விளக்கியிருக்கின் றோம். அங்கே விவாதம் பண்ணுவதற்கு யார் இருந்தார்கள்? பாராளுமன்றம் உண்டா? அல்லது நீதிமன்றத்தில் அது சரியா? தவறா? என்று சொல்லுவதற்கும் போவதற்கும் யாராவது உண்டா?
நீதிபதிகளே நடுங்கிக்கொண்டு இருந்த நிலை
நீதிபதிகளே நடுங்கிக்கொண்டு சுவரைப்பார்த்து பேசிக்கொண்டிருந்தார்கள். அய்யா மன்னிக்க வேண்டும். நீதிபதிகளை மாற்றினார்கள். நீதியே அங்கு படாதபாடு பட்டது.
நெருக்கடி காலத்திலே சரி. அது ஒரு கெட்ட கனவு. முடிந்து போனது. நான் அதற்கு வருத்தம் தெரிவிக்கின்றேன் என்று இந்திராகாந்தி அம்மை யார் சொன்னார்.
நண்பர்களே ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். அடுத்து ஜனதா அரசு வருகிறது. அவர் கள் அதை செய்வதற்காக தோற்கடிக்கப்படு கிறார்கள். அவர் சொன்ன மாதிரி ஒரு வருடத்தை யும் நீட்டிக்கொள்கிறார்கள்.
அய்ந்து வருடத்திற்குப் பதிலாக ஆறுவருடம்
அய்ந்து வருடத்திற்குப் பதிலாக ஆறுவருடம் ஆகியது. 1977 வரையிலே வருகிறது. அருமை சகோதரர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் எடுத்துச்சொன்னார்கள்.
நீதியரசர் அவர்கள் அரசியல் சட்டம் 43,44 ஆகியவற்றைப் பற்றி நன்றாக சொன்னார்கள். அரசியல் சட்டத்தில் அப்பொழுது என்னென்ன திருத்தங்கள் செய்தார்களோ அந்த நெருக்கடி காலத்தில் விவாதம் இல்லாமல் வந்ததோ அதை மாற்றினார்கள் அல்லவா? எல்லாவற்றையும் மாற்றினார்கள். ஆனால் இதை மட்டும் மாற்ற அவர்கள் தயாராக இல்லை. நமது எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன்அவர்கள் சொன்னதை நீங்கள் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மத்தியில் கட்சிகள் மாறலாம்
மத்தியில் கட்சிகள் மாறலாம். ஆனால் அவர் களது சிந்தனை மாறாது. காங்கிரஸ் போனது. அடுத்து ஜனதா வந்தது. கத்தி போச்சு வாலு வந்தது டும்! டும்!
காங்கிரஸ் போனபிறகு ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆகா பெரிய சுதந்திரம் வந்தது என்று நினைத்தார்கள். ஜனதா கட்சிக்காரன் ரொம்ப ஜாக்கிரதையாக இருந்து என்ன பண்ணினார்கள்? 42, 43 போனது. 44 வந்தது. அரசியல் சட்டத்திருத்தம். 44வா ஹஅநனேஅநவே என்று கொண்டு வந்தார்களே தவிர, கல்வி மாநிலப் பட்டியலுக்கு மறுபடியும் கொண்டு வரப்பட வில்லை.
இது என்ன அர்த்தம்? இதனுடைய நோக்கம் என்ன? இதை நாம் சொல்லுவதை விட, அல்லது நீதி அரசர்கள் சொல்லுவதைவிட, நமது அரசியல் சட்டத்தை வைத்தே சொல்லுகின்றேன்.
நாடாளுமன்ற செயலாளர்
நாடாளுமன்றத்திலே நீண்ட காலமாக செயலா ளராக இருந்து நிறைய அளவுக்கு கமன்ட்டரி எல்லாம் எழுதக்கூடிய சுபாஷ் காஷ்யப் அவர்கள் இதிலே சொல்லும்பொழுது ஒரு செய்தியை சொல்லுகின்றார்.
பேராசிரியர் அ.இராமசாமி அவர்கள் நகைச் சுவையாக சொன்னாலும் ஆழமான கருத்துக்கள் இங்கே எதுவுமே சப்ஜெக்டிவிட்டி கிடையாது. எல்லாமே அப்ஜெக்டிவிட்டி. எல்லா கருத்துக் களும் ஆதார பூர்வமானது. காஷ்யப் சொல்லுகிறார்
காஷ்யப் சொல்லுகிறார். அவர் தி.மு.கவைச் சார்ந்தவர் அல்ல. அவர் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர் அல்ல. அவர் ஒரு அரசியல்வாதியும் அல்ல. அவர் ஒரு பார்லிமென்டேரியன். நீண்ட காலமாக இருந்த அதிகார வர்க்கத்தின் அனுபவ முள்ள ஒரு சிந்தனையாளர். இதைப் பற்றி சொல்லு வதற்கு முழுத் தகுதியும், பின்னணியும் தெரிந்தவர்.
கூட்டாட்சி என்ற தத்துவத்தின் வேரை வெட்டி முழுக்க முழுக்க நிருவாகத்தில் உள்ள அவர்கள் தங்கள் முழு அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு சட்ட திருத்தம். 42 ஆவது சட்ட திருத்தம்.
இவ்வளவு அடிப்படை இருக்கும்பொழுது அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? மற்றதை மாற்றும்பொழுது இதை மாற்றியிருக்க வேண்டுமா இல்லையா? ஏன் மாற்றவில்லை? அதனுடைய விளைவு இன்றைக்கு எவ்வளவு பெரிய சங் கடங்கள்?
அரசியல் சட்டத்திற்கே விரோதமானது
அது மட்டுமல்ல. மொழி, கலாச்சாரம், பண்பாடு, அதை வளர்க்கக் கூடிய இடஒதுக்கீடு எல்லாவற்றையும் எனக்கு முன்னாலே பேசிய அறிஞர் பெருமக்கள். இங்கே சுட்டிக்காட்டியிருக் கின்றார்களே.
நான் இன்னொரு கோணத்திலும் சொல்கிறேன். இது அரசியல் சட்டத்திற்கே விரோதமானது. அரசியல் சட்டத்தில் மிகவும் அடிப்படையானது என்று என்ன தீர்ப்பு கொடுத்திருக்கிறார்கள்?
அடிப்படை உரிமைகள் இருக்கிறது பாருங்கள். Fundamental Rights அடிப்படை உரிமைகள் என்பதிருக்கிறதே. இது அரசியல் சட்டத்தின் மிக முக்கியமான பகுதியாகும். இது தான் உச்சநீதி மன்றம் வரை தீர்ப்பு.
Constitution-னில் எந்த அமெண்ட்மெண்ட் கொண்டு வந்தாலும், எந்தத் திருத்தம் கொண்டு வந்தாலும், அடிப்படை கட்டமைப்பு இருக்கிறது பாருங்கள். Basic Structure அதை மாற்ற முடியாது என்று கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கின் றார்கள்.
அடிப்படைக் கருத்தை மாற்ற முடியாது
சரி, இந்த அடிப்படை கருத்தை மாற்ற முடி யாது என்று சொல்லிக்கொண்டு வருகின்றவர்கள் மத்தியிலே மிக முக்கியமான ஒரு பிரச்சினையை நான் முன்வைக்க விரும்புகின்றேன்.
ஏனென்றால் இது நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் பயன்படும். நாளைக்கு விவாதம் பண்ணுவதற்கும் பயன்படும். அதுவும் இது அறிவார்ந்த அவை. ஆகவே இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் பொதுவாக சொல்லுவதைவிட அடிப்படை உரிமைகளில் மிக முக்கியமான பகுதி. Cultural and Educational Rights Protection of Minority என்று துணைத் தலைப்பு போட்டாலும் நடைமுறையில் அது சிறுபான் மையினரைப் பொறுத்தது அல்ல.
காந்தியே விரும்பவில்லை
இது அரசியல் சட்ட அடிப்படையில் மிக முக்கியமான உரிமை. Any section of the citizen deciding in the territory of india or any parts there of having a distinct language. செம்மொழி இந்த மாதிரி. Script எழுத்து வடிவம். சாதாரணமானதல்ல. இந்துஸ்தானியை காந்தியே விரும்பாத விசயம் அது.
காந்தி விரும்பியதே உருது ஸ்கிரிப்ட். ஆனால் அதை விடவில்லை. இந்தி நாட்டை ஆளும் மொழியில் அது தேவ்நகரி ஸ்கிரிப்ட் என்று எழுதி விட்டார்கள்.
தேவ் என்றால் கடவுள். தேவபாஷை என்று சொல்லிவிட்டார்கள். ஏனென்றால் வேறு எழுத்து வரக்கூடாது. ஏனென்றால் இந்தியில் இந்துஸ் தானில் எழுத்து இருக்கிறது. உருது எழுத்து இருக்கிறது. ஆகவே உருதுமக்களும் ஏமாற்றப் பட்டார்கள் என்பதை பிறகு உணருகிறார்கள்.
எச்சரிக்கையாகப் போட்டு ஏமாற்றம்
இதில் எச்சரிக்கையாகப் போட்டு ஏமாற்றப் பட்டார்கள். ஸ்கிரிப்ட், அல்லது நாகரிகம் (Language script or culture of its own shall have the right to conserve the same) நம்முடைய மொழி, நம்முடைய எழுத்து வடிவம். நம்முடைய கலாச்சாரம் பண்பாடு இந்த மூன்றையும் அவர்கள் பாதுகாப்பது என்பது அது பிச்சையல்ல. அது நமது அடிப்படை உரிமை. நம்முடைய பிறப்புரிமை. அதை யாராலும் மாற்ற முடியாது என்று கேட்கக்கூடிய அந்த வலிமை நமக்கு உண்டு.
பஞ்சபாண்டவர்கள் எத்தனை பேர் என்று கேட்டால்...
கல்வியை மாநிலப்பட்டியலிலிருந்து கன்கரன்ட் லிஸ்ட்டுக்கு கொண்டு போய் கன்கரன்ட் லிஸ்ட்டில் ஒன்றுமே இல்லாமல் ஆக்கி அது பெயரளவில் மட்டும் நிலைக்கப்பட்டு நடை முறையில் பார்த்தீர்களேயானால் பஞ்சபாண்ட வர்கள் எத்தனைபேர் என்று கேட்டால் நான்கு விரலைக்காட்டி, எழுதும் பொழுது மூன்றை எழுதி, பிறகு காட்டும்பொழுது ஒன்றை அழித்தான் என்று சொல்லுகின்ற மாதிரி இன்றைக்கு மாநிலங்களிடம் என்ன அதிகாரம் இருக்கிறது?
இந்தியா முழுக்க ஒரே நுழைவுத்தேர்வாம்!
இல்லாவிட்டால் சொல்வாரா? இந்தியா முழுக்க ஒரே மாதிரி பாடத்திட்டம் என்று அதாவது ஒரே மாதிரி நுழைவுத்தேர்வு. கலை விஞ்ஞானம், கலை அறிவியல், Arts and science உள்பட நாங்கள் கொண்டுவருவோம் என்று சொல்லுகிற மத்திய அமைச்சர் ஒருவர் இருக்கிறார்.
அவருக்கும், மக்களுக்கும் சம்பந்தமே கிடை யாது. நுனி நாக்கு ஆங்கிலம் பேசிவிட்டால் அவர்கள் எல்லாம் அறிவாளிகள் அல்லர்.
அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள்
அரசியல் சட்டத்தை உருவாக்கும் பொழுது டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அதன் சேர்மெனாக இருந்தார். Drafting Committee Chairman ஆக இருந்தார்.
பெரியார் அந்தக் காலத்திலேயே இந்த செய்தி களை எல்லாம் சொல்லி மக்களை எப்படித் தயார் செய்தார் பாருங்கள்.
ஒருவர் அம்பேத்கர் இன்னொருவர் மகமத் சாதுல்லா. அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், கே.எம்.முன்ஷி, சர் என்.கோபாலசாமி அய்யங்கார், டி.டி.கிருஷ்ணமாச்சாரி நான்கு பார்ப்பனர்கள் . ஒரு முஸ்லீம். ஒரு தாழ்த்தப்பட்டவர்.
பிற்படுத்தப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம் இல்லை
பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் 75 சதவிகிதம் என்றால் அதற்குரிய பிதிநிதித்துவம் அங்கு கிடை யவே கிடையாது. காரணம் அங்கு தேர்ந்தெடுக் கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் கிடையாது.
Modern Manu என்று சில பேர் அம்பேத்கர் அவர்களை சொல்லுகிறார்கள். இது அவருக்குப் பெருமையா? அல்லது சங்கடத்தை உருவாக்குவதா? நன்றாக நினைத்துப் பார்க்க வேண்டும். ஆனால் அதே அம்பேத்கர் ஆந்திர பில் வருகின்ற நேரத்திலே மாநிலங்களவை உறுப்பினராக ஆனபிற்பாடு ராஜ்ய சபையிலே தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்.
இது தனஞ்செயன் கீர் எழுதிய புத்தகத்திலே வந்திருக்கிறது. அம்பேத்கர் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் கூட தெளிவாக பதிக்கப்பட்டிருக்கிறது.
அரசியல் சட்டத்தில் சரியானபடியான வாய்ப்பு கள் இல்லை என்று விவாதம் வந்தது. டாக்டர் கே.என்.கட்ஜுதான் அப்பொழுது உள்துறை அமைச்சர்.
என்னை வாடகைக் குதிரையாகப் பயன்படுத்தினீர்கள்...!
கட்ஜு எழுந்திருந்து சொல்கிறார். என்ன அரசியல் சட்டத்தைப் பற்றி நீங்கள் குறை சொல்லு கிறீர்களே என்று கேட்கிறார். நீங்கள் தானே அரசியல் சட்டத்தை உருவாக்கினீர்கள். அப்புறம் ஏன் இப்பொழுது குறை சொல்லு கின்றீர்கள்? என்று ஒரு கேள்வி கேட்டார்.
பட்டென்று அம்பேத்கர் எழுந்திருந்து சொன்னார். என்னை நீங்கள் அரசியல் சட்டத்தை எழுத தலைவராக ஆக்கினீர்களே தவிர, எனக்கு எந்த சுதந்திரமும் கொடுக்க வில்லை.
என்னை ஒரு வாடகைக் குதிரை (Hack) யாகத்தான் பயன்படுத்தினீர்கள். என்மீது ஏறி நீங்கள் சவாரி செய்து இங்கே போங்கள், அங்கே போங்கள் என்று சொன்னீர்கள். இப்பொழுதும் நான் சொல்லுகின்றேன். அரசியல் சட்டத்தை நானே கொளுத்துவேன்!
நான் அரசியல் சட்டத்தை உருவாக்கினேன்; உருவாக்கினேன் என்று சொல்லுகின்றீர்கள். அரசியல் சட்டத்தை கொளுத்த வேண்டும் என்று வந்தால் நான்தான் முதல் ஆளாக இருப்பேன் என்று சொன்னார். (கைதட்டல்)
அம்பேத்கர் சொன்னார் - பெரியார் செய்தார்
அம்பேத்கர் சொன்னார். பெரியார் அதை செய்தார். தமிழ்நாட்டில்தான் இப்படிப்பட்ட வரலாறுகள் எல்லாம் உண்டு. அந்த போராட்டத் திற்குப் பலன் இல்லாமல் இல்லை.
ஆனால் அதே நேரத்திலே அதே அம்பேத்கர் ஒன்றைச் சொன்னார்.
பல்கலைக் கழக வகுப்பு போல...
நான் உங்களை ரொம்பநேரம் உட்கார வைக்க விரும்பவில்லை. இங்கு தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கின்றது. சட்டம் போதுமான அளவுக்கு இருக்கிறது.
ஒரு பெரிய பல்கலைக் கழக வகுப்புக்குப் போனால் கூட, இவ்வளவு பெரிய விசயங்களை தெரிந்துகொண்டு போவீர்கள் என்று நான் நினைக்கவில்லை.
நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆளுக்கு ஒரு சந்தாவாவது விடுதலைக்கு கட்டி விட்டுப்போங்கள் என்று நினைத்துக்கொண்டி ருந்தேன்.
ஏனென்றால் அவ்வளவு விசயங்கள் எத்தனை புத்தகங்கள் படித்திருந்தால் எத்தனை அவைக்குப் போயிருந்தால் இன்றைக்கு இவ்வளவு செய்திகள் பேராசிரிய பெருமக்கள் சொன்னதை கேட்டிருக் கிறீர்கள். கடைசியாக ஒன்றை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அம்பேத்கர் சொல்லுகிறார்
அம்பேத்கர் ஒரு விவாதத்திலே ரொம்ப அழகாக சொல்லுகிறார். என்னவென்றால் அதிகாரத்தை மாற்ற வேண்டும், அதிகாரத்தை மாற்ற வேண்டும் என்று சொல்லுகிறார்கள் பாருங்கள். எங்களுக்கே எல்லா அதிகாரமும் என்று அதைப் பற்றி சுட்டிக் காட்டுகிறார்.
எட்மண்ட் பர்க் இவர் இங்கிலாந்து நாட்டின் பிரபல பார்லிமென்டேரியன். பிரபலமான பேச்சு களில் ஒன்றை அவர் பேசியிருக்கிறார். விவரம் தெரிந்தவர்களுக்குத் தெரியும். அதிலே இருந்த ஒரு பகுதியை அம்பேத்கர் அவர்கள் ரொம்ப அழகாக எடுத்துக் கையாண்டிருக்கிறார்.
அதை சொல்லித்தான் என்னுடைய உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன். அவர் சொல்லுகிறார்.
புத்தியை கொடுப்பது அவ்வளவு சுலபமல்ல
It is easy to give power.. அதிகாரத்தை யாருக்கும் கொடுத்துவிடலாம். பொதுமக்கள் ஓட்டு போடு கிறார்கள். யாரோ ஒருவர் வருகின்றார். அவர்கள் இஷ்டத்திற்கு செய்கிறார்கள்.
அடுத்து சொல்கிறார். But difficult to give wisdom. அதிகாரத்தை கொடுத்து விடலாம். ஆனால் புத்தியை கொடுப்பது அவ்வளவு சுலபமில்லையே. அதனால் நாம் அதிகாரத்தைக் கொடுத்ததோடு நிறுத்த முடியாது. அவர்களுக்குப் புத்தியையும் கொடுக்க வேண்டும் என்றால் மக்கள் ஒன்று திரளவேண்டும்.
மக்கள் இயக்கமாக இந்த செய்தி. இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்படும். தமிழ்நாட்டி லேயும் உறுதிப்படுத்தப்படும்.
இது நம்முடைய மானப் பிரச்சினை. இது உரிமைப்பிரச்சினை என்று கூறி சிறப்பாக இந்த நிகழ்ச்சிக்கு வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன்.
-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

No comments:
Post a Comment