மீன் விற்கும் முறையும், வைரம் விற்பதும் ஒரே மாதிரியா?
பொருள்களை விற்பனை செய்வதில்கூட சில ஒழுங்குமுறைகள், வரையறைகள் நியதிகளாக நீண்ட காலமாக நடைமுறையில் இருந்தே வருகின்றன.
சில அழுகும் பொருள்களாக இருக்கும். உதாரணத்திற்கு காய்கறிகள், பழங்கள், மீன், இறைச்சி போன்றவை.
சில அழுகும் பொருள்களாக இருக்கும். உதாரணத்திற்கு காய்கறிகள், பழங்கள், மீன், இறைச்சி போன்றவை.
இவைகளைக்கூட இப்போது குளிர்சாதன வசதிகளைச் செய்து கொஞ்ச காலம் அதில் வைத்து விற்பனை செய்கின்றனர்.
என்றாலும் மீன் போன்றவற்றை கூடைகளில் எடுத்துச் சென்று விற்பனை செய்து உடனுக்குடன் அவை கெட்டுப் போவதற்கு முன்பே, பயனாளிகளை அது சென்றடைவதற்காக, மகளிரே கூட, ஆண்கள் மீன் பிடித்து வருவர்; மகளிர் உழைக்கும் வர்க்கத்தினராகி அதனை விற்றுக் காசாக்கி குடும்பங்களை நடத்தும் நிதி அமைச்சர்களாகவும், நிருவாகிகளாகவும் இருந்து எளிய குடும்பங்களில்கூட பசியும், வறுமையும் அதிக அளவில் நுழையவிடாமல் பாதுகாப்பர்.
பழங்கள், காய்கறிகள், கீரைகளைக் கூடைகளில் தலையில் ஏந்தி, (இப்பொழுதெல்லாம் தள்ளு வண்டிகள் அமைத்து) அதனை தெருத்தெருவாகத் தள்ளிக் கொண்டே வியாபாரம் செய்வார்கள்!
அய்ந்து நட்சத்திர ஆடம்பர ஓட்டல்களில் பல்லாயிரக்கணக்கில் அறை வாடகை தரும் பழக்கமுள்ளவர்கள் அங்கே தரப்படும் உணவு வகையறாக்கள் 100, 150, 200, 300 ரூபாய் என்று கட்டணம் போட்டாலும் கணக்குக்கூடப் பார்க்காமல் (கவுரவம் குறைந்துவிடுமோ கணக்குப் பார்த்தால் என்று எண்ணி) தொகையைக் கட்டிவிடுவர்.
கீரை விற்கும் மூதாட்டியிடம் ஏம்மா, இன்னொரு கொத்து கூடத் தரக்கூடாதா? ஒரு கட்டுக்கு இவ்வளவு விலையா? என்று பேரம் பேசுவார்கள் - அந்த மேல்தட்டு வீட்டரசிகள், காரிலிருந்து இறங்கி வீதியோரத்தில் கடைபோட்டு விற்பவர்களிடம்!
என்னே நம் மக்களின் இயல்பு என்று எண்ணி மனிதாபிமானம் உள்ளவர்கள் வேதனைப்படுவதும் உண்டு.
அணிமணி, பொற்கடைகளில், நகைக் கடைகளில் கூட்டமோ கட்டுக்கடங்காத நிலையை இன்றும் காணுகிறோம்.
வைரங்கள் விற்கும் கடைகளிலோ பரபரப்பு இன்றி பல லட்சம், பல கோடி வைர நகைகள் விற்பனை.
கீரை விற்பவரைப் போல், மீன் விற்பவரைப் போல வைரங்களை வண்டியில் வைத்துத் தள்ளியோ, தலையில் கூடையில் வைத்துச் சுமந்தோ விற்கமுடியுமா? முடியாதே!
அதற்கென தனிக்கடை; அனுபவம் உள்ள மதிப்பீட்டாளர்கள். எத்தனை கேரட் வைரம்- பட்டை தீட்டியதா - இல்லையா? போலியா? உண்மையா? என்று உரைத்துப் பார்க்கும் அனுபவ அறிவாளர்கள் உதவியுடன்தான் வாங்குவோரும் வாங்குவர்; காலையில் ஒரு விலை, மாலையில் இறங்கு முகம் என்று மீனுக்கு விலை ஏற்றம், இறக்கம் போல வைரத்திற்கு இருக்காது!
என்றாலும் அந்த வைரம் எவ்வளவு மதிப்பு உயர்ந்துள்ளது? நாளாக நாளாக, பழசுகள் என்றால் அதற்கு பவுசுகளும் கூடுகின்றனவே!
நம் நாட்டுப் பொது வாழ்க்கையில், அரசியலில்கூட, அவரவர்கள் சரக்குகள், கொள்கைகள், லட்சியங்களுக்கு ஏற்ப அதன் வியாபாரம் செய்யப்படுகின்றது!
வைரக்கடை வைத்திருக்கும் வர்த்தமானவர் ஏன் அதைக் கூவிக் கூவி, பழம் விற்கும் பத்திரகாளியம்மாள் போல் தலையில் சுமந்து விற்கவில்லை; அல்லது மீன் விற்கும் குப்பத்து சகோதரிபோல் விற்க முனையவில்லை என்று கேட்டால் பொருத்தமா? நியாயமா?
நேற்று முளைத்து இன்று தேர்தலில் திடீர் தலைவர்களாகி, இமயத்தினையும் தூக்கிச் சுமக்கும் ஆற்றல் எனக்குண்டு என்று தம்பட்டம் அடிக்கும் கட்சிகளைப்போல நீண்ட காலமாக கொள்கை வைரங்கள் கடை வைத்திருப்போரும், ஏன் அவர்களைப் போல செய்யாது, சும்மா இருக்கிறீர்கள்? உங்களுக்கு எங்களோடு போட்டி போட முடியுமா என்று சவால் விடுகின்றனர்!
நேற்று முளைத்து இன்று தேர்தலில் திடீர் தலைவர்களாகி, இமயத்தினையும் தூக்கிச் சுமக்கும் ஆற்றல் எனக்குண்டு என்று தம்பட்டம் அடிக்கும் கட்சிகளைப்போல நீண்ட காலமாக கொள்கை வைரங்கள் கடை வைத்திருப்போரும், ஏன் அவர்களைப் போல செய்யாது, சும்மா இருக்கிறீர்கள்? உங்களுக்கு எங்களோடு போட்டி போட முடியுமா என்று சவால் விடுகின்றனர்!
சிரிப்புத்தான் வருகுதய்யா...! வைரக்கடை வைத்திருப்போரின் மவுனத்தோடு கூடிய புன்னகையைவிட சிறந்த பதில் வேறு இருக்க முடியுமா? நீங்களே கூறுங்கள்!
No comments:
Post a Comment