Thursday, October 13, 2011

அறிந்த பெயர்கள் - அறியாத தகவல்கள்!


புதிய வெளிச்சங்கள் - கி. வீரமணி

அறிந்த பெயர்கள் - அறியாத தகவல்கள்!


(புதிய வெளிச்சங்கள்: என்ற தலைப்பில் விடுதலையில் வாரம் இருமுறை பல்வேறு அரிய தகவல் திரட்டுகள் சிந்தனைக்கு விருந்தாக வாசக நேயர்களுக்குக் கிடைத்திடவிருக்கிறது.)

தந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத்கரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்-அரசியலில் பங்கேற்பு போன்ற ஒரு நிலைப்பாடு களில்தான் மாறுபாடுகள் அவர்களுக் குள்ளே உண்டே தவிர, மற்றபடி இருவரும் சமுதாயப் புரட்சியின் தளநாயகர்கள் என்பதால் பெரும் அளவு ஒத்தக்கருத்துகளே உண்டு.

எடுத்துக்காட்டாக, எத்தனையோ சொல்லலாம் என்றாலும், சீர்திருத்தம் பேசும் சீர்திருத்தப் பார்ப்பனர்களை ஆதரிப்பதா? வைதீக சனாதன உணர்வு படைத்த பார்ப்பனர்களை ஆதரிப்பதா என்ற பிரச்சினை எழுந்த போது (1930களில்)-தேர்தலில் நின்றவர்களுக்கு ஆதரவு தருவது பற்றிய சந்தேகம் தொண்டர்களி டையே எழுந்தபோது, தந்தை பெரியார் கூறிய அறிவுரை பலரை அதிர்ச்சி அடையச் செய்தது!

உறுதியாக அந்த வைதீக, சனா தனப் பார்ப்பனரையே  ஆதரிக்க வேண்டும் என்று கூறினார் தந்தை பெரியார் அவர்கள். அதற்கு அவர் சொன்ன விளக்கம் மிகவும் சிந்திக்கத் தக்கது. வைதீகப் பார்ப்பனர் கையில் உள்ள ஆயுதம் பற்றி நமக்கு வெளிப் படையாகத் தெரிகிறது; ஆனால் லவுகீகம் பேசும், சீர்திருத்த பார்ப் பனர்களின் தன்மை - தண்ணிபோடும் பார்ப்பனர் என்றாலும் அவரது கையில் உள்ள ஆயுதம் என்ன என்று நமக்குத் தெரியாது; அந்த தொழுதகையுள்ளும் படை ஒடுங்கும் என்றார்.

அதே கருத்தைத்தான் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரும் கொண்டி ருந்தார். I will beleive an orthodox brahmin; but not a hetrodox brahmin; நான் ஒரு சனாதன வைதீகப் பார்ப் பனரை நம்பினாலும் நம்புவேனே தவிர; சீர்தி ருத்தம் பேசும் லவுகீக பார்ப் பனரை ஒரு போதும் நம்ப மாட்டேன் என்றார்.  அதுமட்டுமல்ல, போப் ஆண்டவர் புரட்சி செய்ய மாட்டார்; புரட்சி செய்பவன் போப் ஆகமாட்டான் என்றும் குறிப்பிட்டார் அம்பேத்கர்.

அதற்கு அடையாளமாக இந்திய வரலாற்றுக் களத்தில் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகள், அரசியல் புரட்சியாளர்கள் என்று பெயர் எடுத்த பார்ப்பபனர்கள் பலர் பற்றிய பல தகவல்களை நாம் புதிய வெளிச் சங்கள் என்கிற இந்த பகுதியில் - நாம் அறிந்த தலை வர்கள் - அறியாத தகவல்கள் என்ற தலைப்பில் இக்கட்டுரையில் தருகின்றோம்.


பால கங்காதர திலகர் மராத்திய சித்பவன் பார்ப் பனர். (ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பெரும் பாலான முக்கிய தலைவர்கள் புனே பகுதியைச் சார்ந்த அத்தனைப் பேரும் அதே பிரிவு பார்ப்பனர்களே நாதுராம் விநாயக் கோட்சே உள்பட!) பால கங்காதர திலகர்-சுயராஜ்யம் எமது பிறப்புரிமை என்று பிரகடனப்படுத்தியவர் என்றெல்லாம் பெருமையுடன் கூறுவர்.

திலகர் 1917இல் பேசும் போது, வெற் றிலை பாக்குக் கடைக்காரர்களும், சவரம் செய்பவர்களும் செக்கு ஆட்டுவோரும், அரசியலில் ஈடுபட்டு ஆட்சியைப் பிடிக்கப்போகிறோம் என்று சொல்வதால் என்ன பயன்? என்று கேட்டார். ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காகக் குரல் கொடுத்த பார்ப்பனரல்லாதார் உரிமை முழக்கத்தினை-ஜோதி பாபூலே  போன்ற மராத்தியத்தில் பார்ப்பனரல்லாத கட்சித் தலைவர்களால் உருவாக்கிய உணர்வினை எதிர்த்து அப்படி ஆத்திரம் கொப்பளிக்கப் பேசினார். (ஆதாரம் What congress and Gandhi have done to the untouchabilities என்ற நூலில்-அம்பேத்கர் எழுதியது))

அதுமட்டுமல்ல, திருமணங்கள் பால்ய வயதில் நடைபெறக்கூடாது என்று தடுக்கும் பிரிட்டிஷ் அரசின் காலத்தில் ஹரிவிலாஸ் சாரதா  சட்டங்கள் போன்ற முன்னோடிச் சட்டமாக (Age of conent bill)வந்தபோது (1896) அதைக் கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுத்த பாலகங்காதர திலகர்-இந்து மத நம்பிக்கைகள் பழக்க வழக்கங்களில் தலையிடுவதா பிரிட்டிஷ் அரசின் வேலை-அது விக்டோரியா மகாராணி சாசனத்துக்கு விரோதம்; இந்த மசோதாவை எந்த ஹிந்துவாவது ஆதரித்தால் அவன் மதத் துரோகி என்று கூறி, வைதீக சனாதன பார்ப் பனர்களின் ஆதர வைப் பெற்றார் திலகர்.

பள்ளிகள், கல்லூரிகளில் சென்று திலகர் நட்டு சகோதரர்களின் உதவியில் தொடர்ந்து செய்தார்.

இது போல பல சீர்த்திருத்தப் பார்ப்பன மேதைகள் பற்றி சில தெரியாத தகவல்கள்.

1922ஆம் ஆண்டு  கயா காங்கிரசில் தீண்டாமையை எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்த மதன்மோகன் மாளவியா காசி ஹிந்து பல்கலைக் கழக நிறுவனர். (இரட்டை வேடம் கலைகிறது) இவர் லண் டன் சென்றபோது, ஹிந்து கடல் தாண்டு வது சனாதன மத விரோதம் என்பதால், மண் உருண்டையையும், கங்கா ஜலத்தை ஒரு குடத்திலும் எடுத்துச்சென்றார். அதை தன்னுடன் வைத்துக்கொண்டார்.

ஒரு வெள்ளைக்காரரோ அல்லது கீழ் ஜாதி யாரோ இவரது அறையில் வந்து இவரைச் சந்தித்துப் பேசியபின், இவர் கங்கா ஜலத்தை தனது அறையில் தெளித்து தீட்டைப் போக்கிக் கொள்ளுவாராம், முஸ்லீம்களையும், அய்ரோப்பியர்களையும், இவர் தீண்டத்தகாதவர்களாகப் பார்த்தா ராம்; இவரும் 1929இல் சாரதா சட்டம் வந்தபோது - பால்ய விவாகத் தடைச் சட்டம்- திருமண வயது 14 ஆக இருக்க வேண்டும் என்றே மசோதாவை திலகரைப் போலவே கடுமையாக எதிர்த்தவர்.

தந்தை பெரியார் குடிஅரசு வார ஏட்டில் ஆதரித்ததோடு, சுயமரியாதை இயக்க மாநாடுகளில் வரவேற்று எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.!

இந்த மசோதாவை இவர் மட்டுமல்ல; ஹிந்து மகாசபைத் தலைவர் டாக்டர் மூஞ்சே (மராத்திய பார்ப்பனர்) கேசரி  என்ற திலகரால் துவக்கி நடத்தப்பட்ட மராத்திய ஏட்டின் ஆசிரியர் கேல்கர், டாக்டர் ஆனே, (விதர்பா பகுதியிலிருந்த பார்ப்பனத் தலைவர்) முதலியவர்களும் எதிர்த்தனர்.!  மராத்திய சீர்திருத்தக்காரரான பிரபல ஜஸ்டிஸ் எம்.ஜி.ரானடே (M.G.Ranade) அவரது தனிவாழ்வில் வேறுவகை உருவ மும் பழக்க வழக்கமும், மனப்போக்கும் கொண்டு ஒழுகியவர் என்பதும் அதிர்ச்சிக் குரியதே!

சாகு மகராஜ், கோல்காப்பூரில் முக்கிய பதவிகளுக்கு 1901 வகுப்புரிமை சட்டத்தை அமல்படுத்தி பார்ப்பபனரல்லாதவர்களுக்கு உத்தியோகங்கள் வழங்கியபோது, அதை வெறுத்தவர். உடன்பட மறுத்தவர், பார்ப் பனரல்லாதார் நல்ல திறமையான நிருவாகி களாக ஒரு போதும் இருக்கமாட்டார்கள் என்று வெளிப்படையாகக் கூறியவர் இந்த பரந்த மனப்பான்மை புரட்சியாளரான ஜஸ்டிஸ் ரானேடே!

இதே கருத்தைத்தான் பிரபல சீர்திருத் தக்காரரான வங்கத்து, ராஜாராம் மோகன் ராய் பார்ப்பனர் (இங்கிலீஷ்) கல்வியை உயர்ஜாதியினருக்கு வழங்கினால்தான் அவர்கள் மூலம் கீழ்ஜாதியினரிடையேயும் பரவ வாய்ப்பு ஏற்படும் என்றார்!

ஒடுக்கப்பட்ட வகுப்பாருக்கு (Depression Class) தனி முயற்சியோடு கல்வி தருவது அவசியமில்லை என்பவர் ராஜாராம் மோகன்ராய். (பிரபல அணு விஞ்ஞானி ராஜாராமண்ணா இட ஒதுக்கீடு கொள்கையை கடுமையாக எதிர்த்தவர் என்பதும் ஈண்டு நினைவு கொள்ளத்தக்கது.)

பிரபல லோக் ஹிந்த் வாடி கோபால் ஹரிதேஷ்முக் (மராத்திய பகுதி சீர்திருத்தவாதி) பார்ப்பனரை எதிர்த்து எழுதியவர், கண்டனம் செய்தவர். ஆனால் அவரது வீட்டிற்குள் பல மணி நேரம் பார்ப்பன முறையிலே பூஜை, புனஸ்காரம், சடங்குகள் எல்லாம் செய்யத் தவறாதவர்.

மேற்கத்திய கல்வி மனதை வலுப்படுத்தும்; மக்களை முற்போக்காகச் சிந்திக்க வைக்கும் என்று முழங்கியவர். ஆனால் அவர் மகன் லண்டனில்-பாரிஸ்டர் படிப்பு படித்து திரும்பியபோது புனேயில் அவரை வரவேற்க மறுத்துவிட்டார். வரவேற்றால் புனே சக பார்ப்பன ஜாதியினர் தம்மை ஜாதிப் பிரஷ்டம் செய்து விடுவார்கள் என்று கூறியதால் அவர் மகன் திரும்ப லண்டனுக்கே சென்றார்!

மகரிஷி போண்டூ கேசவ கார்வே பிரபல சீர்திருத்தவாதி, விதவைகளுக் கான பள்ளி மறுவாழ்வுக் கல்விகூடம் அமைத்து அனைவர் பாராட்டையும் பெற்றவர்.

அவர் பார்ப்பன விதவைகளை மட்டும் தான் தனது பள்ளியில் சேர்த்தாரே தவிர, பார்ப்பனரல்லாத ஜாதி விதவை களைச் சேர்க்கவே இல்லை.

பி.ஆர்.நந்தா என்பவர் எழுது கிறார்:

இந்திய தேசீய காங்கிரஸ் மாநாடுகள் ஆண்டுதோறும் கூடிய பல ஊர்களில் வந்த உயர்ஜாதி-பார்ப்பன பிரதிநிதிகளான காங்கிரசார் கதவைச் சாத்திக்கொண்டு தாங்களே சமைத்துக் கொண்டு வந்த உணவைச் சாப்பிடுவது. வசதி படைத்தவர்களோ பார்ப்பன சமையல்காரர்களைத் தங்களுடனே அழைத்து வந்து சமைக்கச் சொல்லி சாப்பிடுவார்கள். தங்களது சமையல்காரர்கள் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, இவர்கள் எந்தப் பிரிவு பார்ப்பனரோ அதே ஜாதிப் பிரிவு (Sub-castes) சார்ந்தவர்களா என்று பார்த்தே அழைத்து வருவார்கள்.

(ஆதாரம்: டாக்டர் அம்பேத்கர் பற்றிய  Ph.D., ஆய்வுரை- டாக்டர் திங்கர் கோபடே எழுதிய புத்தகம்)
-தொடரும்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...