Monday, October 10, 2011

அய்.அய்.டி. என்பது அசல் அக்ரகாரத் தின் வார்ப்பு


சென்னை அய்.அய்.டி. என்பது அசல் அக்ரகாரத் தின் வார்ப்பு என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஆசிரியர்களில் 70 சதவிகிதம் பார்ப்பனர்கள்; முன்னேறிய ஜாதியினர் 10 சதவிகிதம்; பிற்படுத்தப் பட்டோர் 14 சதவிகிதம்; தாழ்த்தப்பட்டோர் 0.75 சதவிகிதம்; கிறித்தவர்கள் மூன்று சதவிகிதம்; சமணர்கள் 0.75 சதவிகிதம்; முசுலிம்கள் பூச்சியம்.

இந்த 50 ஆண்டு வரலாற்றில் அதன் இயக்குநராக வந்தவர்கள் அத்தனைப் பேர்களும் பார்ப்பனர் என்பது எத்தகைய கொடுமை! பேராசிரியர்கள் நியமனமாக இருந்தாலும் சரி, மாணவர்கள் சேர்க்கையாக இருந் தாலும் சரி அரசின் இடஒதுக்கீடு என்பதெல்லாம் அங்கு செல்லுபடியாவதில்லை. எத்தனையோ வழக்குகள்; சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து காரியங்களைச் சாதித்துக் கொண்டு விடுவார்கள்.

ஓய்வு பெற்றுச் சென்றுள்ள ஆனந்த் அய்யங்கார் போகிற போக்கில் சொந்த பந்தங்களைத் திணித்துக் கொண்டு போய்விட்டார்.

அவரைத் தொடர்ந்து இப்பொழுது இயக்குநராக வந்திருக்கும் பாஸ்கர் இராமமூர்த்தி என்பவரும் அசல் பார்ப்பனரே!

செப்டம்பர் 30 நாளிட்ட இந்து ஏட்டில் அவர் சொன்னதாகத் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

கடவுளைப் பற்றியும் விதியைப் பற்றியும் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் மூலம் பார்ப்பனர்கள் இன்னும் வன்மத்தோடும், வருணாசிரமப் புத்தியோடும் தான் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

நமது கட்டுப்பாட்டுக்கு மீறிய நிகழ்வுகள் நாட்டில் நாளும் நிகழ்ந்து கொண்டு தானிருக் கின்றன. நல்ல வாழ்க்கையும், கல்வியும் அளிக்க வல்ல ஒரு குடும்பத்தில் நான் ஏன் பிறக்க வேண் டும்? தெருவில் சுற்றித் திரியும் குழந்தைகள் ஏன் அந்தக் குடும்பத்தில் பிறக்க வேண்டும்?... இந்த விஷயத்தில் கடவுளைப் பயன்படுத்துவது என்னைப் பொறுத்தவரை எளிதாக இருக்கிறது

என்று கூறுகிறார்.

இதற்குப் பெரிய பெரிய விளக்கங்கள் தேவை யில்லை; படிப்பும் வசதியும் ஒருவருக்குக் கிடைப்பதும், இன்னொருவருக்கு அவை கிடைக்காமல் இருப் பதற்கும் காரணம் அவாள் அவாள் தலையெழுத்து என்பதைத்தான் அய்.அய்.டி. இயக்குநர் பார்ப்பனர் அவர் படித்த மேதாவித்தனத்தின் அடிப்படையில் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.

மெத்த படித்திருந்தாலும், அய்.அய்.டி. இயக்குநர் என்கிற உயர்ந்த பெரும் பதவியில் இருந்தாலும் பார்ப்பனர்கள் தங்களுக்கே உரித்தான ஜாதி உணர்வோடும், பிறப்பின் அடிப்படையில் இருக்கும் பேதங்களை நியாயப்படுத்தும் வெறியோடும்தான் இருக்கின்றனர் என்பதை உணர வேண்டும்.

இதன்மூலம் ஆரியம் திணித்து வைத்துள்ள குலதர்ம வருணாசிரம தர்ம - கர்ம பலன் எனும் கீதையின் சாரத்தை வலியுறுத்துகிறார். கோட்சேகூட கீதையின் வாசகத்தை நம்பியே காந்தியாரைக் கொன்றான்.

விஞ்ஞானம் படித்திருந்தாலும், விஞ்ஞான மனப் பான்மை அற்றவர்களாகவும் குலதர்ம வீரர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் கவனிக்கத் தவறக் கூடாது.

1962இல் விண்வெளி - அகண்ட காஸ்மாசில்  முதல் மனிதன் ககாரின் சென்றபோது விஞ்ஞானத்தில் நோபல் பரிசு பெற்ற டாக்டர் சி.வி. ராமன் என்ன கூறினார்? கடவுள் வசிக்கும் இடத்தில் மனிதன் தன் பூத உடலுடன் செல்லுவது மிகமிகப் பாவம் என்று சொல்லவில்லையா?

கடவுள், மதம் கெட்டாக வேண்டுமானல் பார்ப்பான் கெட்டாக வேண்டும். அவன் கெட்ட இடம்தான். கடவுள், மதம் கெட்ட இடம்  (விடுதலை 24.4.1967) என்று தந்தை பெரியார் கூறிய கருத்தை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்தால் இதன் உண்மை எளிதிற் விளங்குமே!

அய்.அய்.டி. புதிய இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி வருணாசிரமக் குணத்துடனும், விதிப் பயன் என்கிற எண்ணத்தோடும் செயல்படக் கூடியவர் என்பதை எடுத்த எடுப்பிலேயே அவர் தெரிவித்துள்ள கருத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது!

இத்தகைய ஒருவர் இயக்குநராக இருக்கும் அந்த நிறுவனத்தில் பார்ப்பனர் அல்லாதார் ஆசிரியர்கள், மாணவர்கள் நிலை எந்தக் கதிக்கு ஆளாகும் என்பதை எண்ணிப் பார்த்தால் ரத்தம் கொதிக்கிறது.

விஞ்ஞான மன்பான்மையை மக்கள் மனத்தில் தூண்ட வேண்டும் - அது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. அய்.அய்.டி. இயக்குநராக உள்ளவருக்கே விஞ்ஞான மனப்பான்மை இல்லை, மாறாக வருணாசிரம மனப்பான்மை, தலையெழுத்து சிந்தனை இருக்கிறது என்றால் இதற்கு என்ன பரிகாரம்?

விஞ்ஞானம் போதிக்கும் நிறுவனத்தில் முக்கிய பொறுப்புக்கு நியமிக்கப்படுபவர் குறைந்தபட்சம் விஞ்ஞான மனப்பான்மை உடையவராக இருப்பதற்கு மத்திய அரசு வழி செய்ய வேண்டும்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...