Monday, October 10, 2011

தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலர் கருத்துப் பேழை 3


தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலர் கருத்துப் பேழை 3


பேராசிரியர் முனைவர்  நம். சீனிவாசன்

தனி மனிதர்கள் செய்யும் ஊழல் மட்டுமே ஊழல் ஆகாது. ஒரு நாட்டின் செல்வம்  அந்நாட்டு மக்கள் அனை வருக்கும் பரவலாகச் சென்றடையாது ஒரு சாராரே  மதத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலோ அல்லது பிறவியில் உயர்வு காட்டியோ, அந்நாட்டு மக்களின் செல் வத்தை அவர்களே அனுபவிப்பதும் ஊழலே. இன்னும் அழுத்தம் திருத் தமாகச் சொல்லவேண்டுமென்றால் இது இமாலய ஊழலாகும் என்று கொதிக்கின்றார்.

கடந்த ஆண்டுகளில் ஏற்பட்டிருக் கும் இந்திய முன்னேற்றம் எல்லோ ரையும் சென்றடையவில்லை என்று வருந்தும் இலக்குவன்தமிழ் ஒரு குறிப்பிட்ட சிறிய விழுக்காட்டின ருக்கே சென்றடைந்திருக்கிறது என்று குற்றம் சாற்றுகிறார். இத்தகைய நிலைமை நீண்ட நாள்களுக்குத் தாக்குப் பிடிக்காது. இது சமூகப் புரட்சிக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கை  விடுக்கின்றார்.

இன்றைய இந்திய வளர்ச்சிக்கு வித்திட்டவர் பெரியார்தான் என்று முழங்கும் இலக்குவன்தமிழ் கட்டு ரையை வாசகர்கள்  ஆழ்ந்து படிக்க வேண்டும். சிந்தனையாளர்கள், தத்துவஞானிகள்  தெரிவிக்கின்ற உன்னதமான கருத்துக்களை அவர் தம் சீடர்களே உலகம் முழுதும் பரப்பி வெற்றிபெறச் செய்கிறார்கள்.

தத்துவம் சிறப்பாக இருந்தால் மட்டும் போதாது; நல்ல சீடர்கள் அமைதல் வேண்டும். தந்தை பெரியாருக்கு தன்னலம் கருதாது தொண்டாற்றும் சீடர் கிடைத் தார். அவர்தான் வீரமணி. அய்யாவின் கருத்துக்களை இந்தியா முழுவதும் பரப்பியதோடு பெரியார் சிந்தனைகளை உலகமயமாக்கிச் சாதனை படைத்திருக் கிறார்.

அமெரிக்க நாட்டின் வாஷிங்டன் டி.சி. நகரில் 3.12.2010 அன்று நடைபெற்ற உலக அறிவியல் மற்றும் மனிதநேய மதிப்பீடுகள் நிறுவனத்தின் முதற் கூட்டம் பற்றிய செய்தித் தொகுப்பு பெரியார் பிறந்த நாள் மலரில் இடம் பெற்றிருக்கிறது.

பெரியார் உலக மயமாகிறார் என்பதை ஒரு பக்கக் கட்டுரை உள்ளத்தில்  பதியச் செய்கிறது. தமிழ் அறிஞர்கள் மட்டுமின்றி டாக்டர் ஸ்டூவர்ட் ஜோர்டான், ஜேக்பெல்ட், ஜெஸ்ஸி, டோனி பெல்ட், பேராசிரியர் பால்கர்ட்ஸ் முதலியோர்களும் இணைந்து தோள் கொடுக்கிறார்கள் என்பது உவப்பான செய்தியாகும்.

பெரியார் பன்னாட்டு மய்யம்

பெரியார் பன்னாட்டு மய்யம் உலகம் முழுவதும் கிளைகளைப் பரப்பி வருகிறது. துபாயிலும், குவைத்திலும் கிளைகள் உருவானதை பிறந்த நாள் மலர் வருணனைக் காட்சியாய் விவரிக்கிறது. நாற்பது ஆண்டுகளாய் தொண்டு செய்து வரும் குவைத் செல்லபெருமாள் அவர் களுக்கு சமூகநீதிக்கான வீரமணி விருதும் ஒரு லட்சம் ரூபாய் பணமுடிப்பும் வழங்கி மகிழ்ந்த வரலாறு மலரில் ஆவணமாய் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலிய, மலேசிய, இங்கிலாந்து, அய்ரோப்பிய, அமெரிக்க வாழ் தமிழர்களுடன் ஒன்றி ணைந்து உலகத் தமிழர் வங்கி அமைக்க உழைப்போம் என்று பெரியார் பன்னாட் டமைப்பின் இயக்குநர் மருத்துவர் சோம. இளங்கோவன் அவர்களின் சூளுரை ஈடேறும் காலம் தொலைவில் இல்லை.

2010 செப்டம்பர் 17 ஆம் தேதி பெரியார் பிறந்த நாள் விழா. தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டதை தொலைக் காட்சி களிலும், இதழ்களிலும் கண்டு மகிழ்ந்தோம். அதே நாளில் பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.படேல் சேவா சங்க கூட்ட அரங்கில் நடைபெற்ற இவ்விழாவை திரிவேணி சங்கமம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

பாட்னா மருத்துவக் கல்லூரி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உதவிப் பேராசிரியரும், மருத்துவரும், தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவரும், பி.ஏ., எம்.சி.ஈ.எஃப் அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினருமான ராஜீவ் குமார் ரஜாக் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் பாட்னா அரசு மேனிலைப் பள்ளி வேதியியல் ஆசிரி யரும்  இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவருமான சாம்புசுமன், திரி வேணி சங்கமம் என்ற அமைப்பின் செயல் திட்டக் குழுவின் உறுப்பினர் அசோக் யாதவ், பொறியாளர் உமேஷ் ரஜாக், பத்திரிகையாளர் சசிகாந்த் உரை நிகழ்த்தினர். விழா மாட்சியினை அறிஞர் பெருமக்களின் சொற்பொழிவுச் சுருக்கத்தை மலரில் கண்டு மகிழலாம்.

தென்னிந்தியாவில் பெரியார் ஒருவர் மட்டுமே!

சென்னை தாஜ் கன்னிமரா ஓட் டலில் நூல் வெளியீட்டு விழா. நூலின் பெயர் ஆயமநசள டிக ஆடினநச ஐனேயை  (நவீனஇந்தியாவை வடிவமைத்தவர் கள்.)  2010 டிசம்பர் 6 ஆம் தேதி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.19 இந்திய மாமனிதர்களின் எழுத்துக்கள் மற்றும் பேச்சுக்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கின்றார் ராமச் சந்திரகுகா. 19 பேர்களில் தென்னாட் டில் சமூகப் புரட்சியாளர் என்ற முறை யில் தந்தை பெரியார் மட்டும்தான் இடம் பெற்றுள்ளார். 

(வளரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...