எச்சில் யார் மீது?
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: இன்போசிஸ் அமைப்பை உருவாக்கிய பிரபல கணினி கம்பெனி நிறுவனர் நாராயணமூர்த்தி என்ற பார்ப்பனர், ஐ.ஐ.டி.க்கள் எல்லாம் இப்போது தனிப் பயிற்சி பெற்று சேரும் மாணவர்கள் காரணமாக மிகவும் தரமிழந்து வருகிறது. இதை மாற்ற வேண்டும் என பேசியுள்ளார். இது, இட ஒதுக்கீட்டை வெளியேற்ற சதி.
டவுட் தனபாலு: ஐ.ஐ.டி.யில அவர் எதிர்பார்க்கிறதை, தன் நிறுவனத்துல ஏற்கனவே செஞ்சிட்டு வர்றாரு... அங்கே வேலைக்கு சேர ஜாதியோ, மதமோ ஒரு தகுதி இல்லை... அதனால்தான் அவங்க, நம்பர் ஒன் இடத்துல இருக்காங்க... அதைப் பாராட்டுறதை விட்டுட்டு, இப்படி திறமையாளர் களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் பூணூல் மாட்டிட்டே இருங்க...!
- (தினமலர், 10-10-2011)அய்.அய்.டி.யில் பிற்படுத்தப்பட்டவருக்கு இட ஒதுக்கீடு என்பதற்கான கணக்கே இதுவரை தொடங்கப்படவில்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பெயர் அளவுக்குத்தான் இட ஒதுக்கீடு உண்டு.
அப்படியென்றால் அய்.அய்.டி.யில் பலன் பெற்றவர்கள், படித்துக் கொண்டு இருப்பவர்கள், படித்து வெளியேறி இருப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்கள்தானே! தகுதி, திறமைக்குப் பெயர் போனவர்கள்தாம். கிரேடு வாங்கி பாஸ் பண்ணியவர்கள்தான்.
இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி அய்.அய்.டி.யின் தரம் கெட்டுப் போய் விட்டது என்று புலம்புகிறார் என்றால், யாரைச் சொல்லுகிறார்?
அய்.அய்.டி.யில் படித்து பாஸ் செய்து வெளியேறி இருக்கிற பார்ப்பனர்களைச் சொல்லுவதாகத்தானே அர்த்தம்?
மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்பலாமா - நாராயணமூர்த்தி அய்யர், தினமலர் பூணூல் வகையறாக் கள்!
1 comment:
உண்மையான வாக்கியம்
Post a Comment