Monday, October 10, 2011

எ(இ)ப்படி இருக்கு அரசியல்?


எ(இ)ப்படி இருக்கு அரசியல்?

நூறு ஆண்டுகளாக உள்ள கட்சிகளும், 40 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட கட்சிகளும் மீண்டும் ஓட்டு கேட்டு உங்களைத் தேடி வருகின்றன. அப்போது, அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் 50 சதவிகிதத்தையாவது நிறைவேற்றினார்களா என நீங்கள் கேட்க வேண்டும்

- தேமுதிக தலைவர் விஜயகாந்த்


கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது அதிமுக வோடு கூட்டு சேர்ந்தபோது இது தெரியவில்லையா? அதுசரி, இந்த விஷயங்களைப்பற்றி சட்டமன்றத் திற்குச் சென்றல்லவா எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருக்க வேண்டும்?

சட்டசபைக்கே போகாத ஒருவர்தான் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரா? இதைப்பற்றிகூட பொது மக்கள் அவரைக் கேட்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலையாளிகள் மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜீவ் கொலையாளிகள் மூவர் மீதும் சட்டப்படி நீதிமன்றங்களில் விசாரணை நடத்தப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களின் கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.

ராஜீவை படுகொலை செய்தவர்கள் சமூக விரோதிகள் அவரது கொலையை நியாயப் படுத்துபவர்கள் எங்களுக்கு நண்பர்களல்ல. அது ஜனநாயக விரோதச் செயல் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தூத்துக்குடி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சொற்பொழிவாற்றியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலையை இங்கு யாரும் நியாயப்படுத்தவில்லை. அதே நேரத்தில் அந்தக் கொலையில் சம்பந்தப்படாதவர்களை மரண தண் டனைக்கு ஆளாக்கக் கூடாது என்று தான் கூறி வருகின்றனர். குற்றவாளிகள்கூட  தப்பலாம்; ஆனால் நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாதல்லவா! இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் பேசிப் பேசிதான் கடந்த மக்களவைத் தேர்தலில் தங்கபாலு, ஈ.வெ.கி.ச. இளங்கோவன் போன்றவர்களை தேர்ந்தெடுத்து மக்கள் தோல்வி பக்கம் தள்ளி னார்கள்; சட்டப் பேரவைத் தேர்தலிலும்கூட அதன் எதிரொலியைக் காண முடிந்தது. 

இந்தப் பாதிப்பைப் புரிந்து கொண்டு உள்ளாட்சித் தேர்தலில் திமுக காங்கிரசிலிருந்து தள்ளித் தனியாக போட்டியிடுவதன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம். தனித்தனியாக கட்சிகள் நிற்பதும் மக்கள் சரியான வகையில் தீர்ப்பளிக்க வசதியாகப் போய் விட்டது.

எங்கள் கட்சியில் கோடி உறுப்பினர்கள் என்றெல்லாம் அள்ளிவிடும் கட்சிகளின் யோக்கிய தாம்சமும் இதன் மூலம் தெரிந்துவிடுமே!

புது கும்மிடிப்பூண்டி ஊராட்சித் தலைவர் தேர்தலில் பெருங்குடி மக்களின் வாக்குகளைக் கவர்ந்திட ஆந்திரா பகுதியிலிருந்து பாக்கெட் மதுவைக் கொண்டு வந்து வாக்காளர்களின் வீட்டுக்குமுன் வைத்து விட்டுச் சென்றுள்ளனராம்.

பதவிப் போதைக்கு இந்தப் போதை ஒரு அட்வான்சாக இருக்கட்டுமே என்று நினைத்து விட்டார்களா? போதை ஏறினால், தான் சார்ந்த கட்சியைக்கூட மறந்துவிட்டு எதிர்க்கட்சி வேட் பாளருக்கு ஓட்டுப் போடுவார்கள் என்ற மனப் பிராந் தியோ என்னவோ! வேட்பாளர்கள் ஸ்டெடியாக இருந்தால் சரி!

ஆன்மீக மக்கள் கட்சி என்ற ஒரு கட்சி இருக் கிறதாம். அது திருச்சி மேற்கு சட்டப் பேரவை இடைத்தேர்தலில் அஇஅதிமுகவை ஆதரிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆன்மீக கட்சி ஆன்மீக திமுகவாகிய அதிமுக வுக்குத்தானே ஆதரிக்கும்?

அது சரி இழிந்த இந்த ஊத்தைப் பிறவி வேண்டவே வேண்டாம்! - அடுத்த பிறவியில் சிவலோக பதவியையோ வைகுந்த பதவியையோ விரும்புபவர்கள் கேவலம் இப்பிறவியில் சட்டசபை பதவியைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?

தாம்பரத்தையடுத்த செம்பாக்கம் பேரூராட்சி தேர்தலில், கட்சியின் சார்பில் வாய்ப்புக் கிடைக் காதவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வாக்குகள் கேட்கிறார்களாம். சுயேட்சையாளர் கட்சி என்று ஒரு புதிய கட்சியைக்கூட ஆரம்பிக்கலாமே - அது ஒன்றுதான் இங்கு குறைச்சல்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...