Monday, October 10, 2011

ஆண்டாள் சூ(கூ)டிய பிரதாபம்! ஆண்டாள் சூடிய மாலை திருப்பதிக்குப் பயணம்


ஆண்டாள் சூ(கூ)டிய பிரதாபம்! ஆண்டாள் சூடிய மாலை திருப்பதிக்குப் பயணம்


ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.2 திருப்பதி வெங் கடாசலபதி கோவில் விழாவின் போது சாத் துவதற்காக, ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாளுக்கு சூடிய மாலை, நேற்று கொண்டு செல்லப்பட்டது.

திருப்பதி வெங்கடா சலபதி கோவில், புரட்டாசி விழாவின் அய்ந்தாம் நாள் கருட சேவை அன்று, பெருமாளுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண் டாள் சூடிய மாலையை சாற்றி சிறப்பு பூஜை நடப்பது உண்டு. இதற் காக நேற்று, ஆண்டாள் சூடிய மாலை, திருப்பதிக் குக் கொண்டு செல்லப் பட்டது.

இதையொட்டி, நேற்று காலை ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத் தப்பட்டு, மாலை, கிளி சாற்றி சிறப்பு  பூஜைகள் நடத்தப்பட்டன.

பின், ஆண்டாள் சூடிய மாலை, கிளி ஆகிய வற்றை மாடவீதி, கந் தாடை வீதி வழியாக சுற்றி வரப்பட்டு, ஸ்தானி கம் ரமேஷ், கிச்சப்பன் ஆகியோரால் திருப் பதிக்கு கொண்டு செல் லப்பட்டது.

தினமலர் 2-10-2011

உருவமற்றவர் கடவுள்; கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டே, வெங்கடாசலபதி என்றும், கபாலீஸ்வரன் என்றும் அருணாசலேஸ்வரன் என்றும், பழினியாண்டவர் என்றும், அங்காளபர மேஸ்வரி என்றும் கொட்டி அளப்பது சரியா?

அதோடு விட்டார்களா? இந்தக் கடவுள்களுக்கு  மனைவிகள், வைப்பாட்டி கள், பிள்ளைகள் என்று ஒரு பட்டியலைக் கூறுகின்றார் களே அது எப்படி?

கடவுள்களுக்குள் சண்டை, குத்து வெட்டு,  காதல், கற்பழிப்பு, பள்ளி யறை என்று கருத்தழிந்து எழுதிக் குவித்துள்ளனரே - இதற்கான நியாயம் என்ன?

என்று கேட்டால் பதில் சொல்ல வக்கில்லாமல் கருப்புச் சட்டைக்காரர்கள் இப்படித்தான் கேள்வி கேட் பார்கள்; விடுதலைதானே, அப்படித்தான் எழுதும் என்று பதில் சொன்னால் போதுமா?

இவர்கள் நம்பும் நக்கீ ரனும் கடவுளும் கூட விவாதம் செய்தனர் என்று கூறவில்லையா? அப்படி இருக்கும் போது நாம் விவா தத்திற்கு அழைத்தால் வழுக் கிக் கொண்டு ஓடுவா னேன்?

ஸ்ரீரெங்கநாதன் என்ற கடவுளுக்குப் பக்தையாம் ஆண்டாள். இதன் பொருள் தந்தை - மகள் என்ற உறவுதானே?

ஆனால் இங்கு என்ன நடக்கிறது? மகள் தந்தை மீது காதல் கொள்கிறாளாம்.

தன்னுடைய விரக தாபத்தை எல்லாம் வெளிப் படுத்துகிறாள். தந்தையாகிய கடவுளோடு  புணர்வதோர் ஆசையால் கொங்கை கிளர்ந்து குமைந்துக் குதூக லிக்கிறதாம். (பக்தர்களே, நாக்கைப் பிடுங்கிக் கொள் ளாதீர்கள் - ஸ்ரீஆண்டாள் எழுதிய நாச்சியார் திரு மொழியில் உள்ள பாட்டு தான் இது).

தந்தையும் மகளும் புணரும் ஒழுக்கத்தைத் தானே இந்த அர்த்தமுள்ள இந்து மதம் போதிக்கிறது.

இதுபற்றி ராஜகோபாலாச் சாரியார் என்ன எழுதினார் தெரியுமா?

ஆண்டாள் என்னும் ஸ்திரீ இருந்ததேயில்லை. நாலாயிரப் பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவையல்ல. பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி அப்பாசுரங்களை ஆண் டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப்படுத்தினார் (திரிவேணி செப்டம்பர் 1946) என்று எழுதியிருக் கிறாரே!

ஆச்சாரியார் என்ன புராண மறுப்பாளரா? இந்து மத எதிர்ப்பாளரா? அதெல் லாம் ஒரு மண்ணும் கிடை யாது.

பிறகு ஏன் இப்படி எழுது கிறார்? இவ்வளவு ஆபாச மாக ஒரு பெண் எழுதி இருப்பதாக இருக்கிறதே, மானம் போகிறதே! விரக தாபம் எடுத்து கடவுளோடு புணர வேண்டும் என்று துடிப்பதாகப் பாடல் எழுதினால் படிப்பவர்கள் காரித் துப்பமாட்டார்களா என்ற எண்ணத்தில் இப்படி கருத்தைத் தெரிவித்தி ருக்கிறார்.

ஆச்சாரியார் சொன் னதை ஏற்றுக் கொண்டால் வெங்கடாசலபதிக்குச் சாத்துவதற்காக ஸ்ரீவில்லி புத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிய மாயை எடுத்துச் செல்வதாகக் கூறும் இந்தக் கதைகளைக் குப்பைக் கூடையில் தூக்கி எறிய வேண்டும்.

இல்லை, இல்லை. ஆச்சாரியார் சொல்லுவது அபவாதம்! புராண விஷ யத்தில்  ஒன்றைத் தப்பு என்று ஒப்புக் கொண்டால் அடுத்தடுத்து ஒவ்வொன் றையும் பொய்யென்று சொல்லக் கூடிய சூழல் ஏற்பட்டுவிடும் என்று சொல்லுவார்களேயானால்,

தகப்பனைக் கல் யாணம் செய்து கொண் டதையும் தந்தையோடு புணர மகள் ஆசைப்பட்ட அசிங்கத்தையும், ஆபாசத் தையும், அருவருப்பையும், அநாகரித்தையும் ஒப்புக் கொண்டு, எங்களின் அர்த்தமுள்ள இந்து மதத்தின் பெருமையே இது தான் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். எதைச் செய்ய ஆசை? ஒழுக்கத்தோடு சிந்திப்பீர்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...